‘தீராக் கோபம் போராய் முடியும்’: அம்பலவாணர் எச்சரிக்கை (Post No.11,694)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,694

Date uploaded in London – –  21 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

கோபத்தைப் பற்றி எச்சரிக்காத தமிழ், ஸம்ஸ்க்ருதப் புலவர்கள் எவரும் இல்லை. வியாசர் முதல் பாரதி வரை எச்சரித்துள்ளனர் ; கோபத்தை வென்றால் அபூர்வ சக்திகள் உண்டாகும் என்று புலவர்கள் கூறுகின்றனர்.

இந்த ‘பிளாக்’ blog கில் கோபம் பற்றி நிறைய கட்டுரைகள் உள்ளதால் அவற்றின் லிங்க் links மற்றும் கீழே கொடுத்துள்ளேன். நான் முன்னரே எழுதியது போல நரகத்தின் மூன்று வாசல்களில் ஒன்று கோபம் ; இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். காம, க்ரோதம்/கோபம், லோபம்/பேராசை மூன்றும் நரகத்துக்கு இட்டுச் செல்லும் வாசல்.

பத்திரிக்கைகளில்  Crime News கிரைம் நியூஸ் படிப்பவர்கள், எல்லா குற்றவாளிகளையும் இந்த மூன்று வகையில் பிரித்து விடலாம். அதுவும் குடி போதை அல்லது கஞ்சா போதையில் இருந்தால் கோபம் அவர்களை சிறைக்கு இழுத்துச் செல்லும் என்பது திண்ணம். இதோ பழைய கோபக் கட்டுரைகள்


கோபம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405) … கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் …

ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் …

https://tamilandvedas.com › ராத…

·

3 Dec 2021 — அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!( … கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் …

சினம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

 அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405) … கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் …

கோபம் வந்தால் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

9 Aug 2018 — கோபம் வந்தால் பத்து அடி பின்னே நட! திருக்குறள் கதை!! (Post No.5302) · Written by London swaminathan.

பாரதி | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

·27 Dec 2021 — கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய …

4 வகை கோபம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › 4-…

8 Jul 2016 — DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). fight-scenes- …

XXXX

அறப்பளீசுர சதகம் 87. சீற்றத்தின் கொடுமை

கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!

     கோபமே குடிகெ டுக்கும்!

  கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!

     கோபமே துயர்கொ டுக்கும்!

கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!

     கோபமே உறவ றுக்கும்!

  கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!

     கோபமே கருணை போக்கும்!

கோபமே ஈனமாம் கோபமே எவரையும்

     கூடாமல் ஒருவ னாக்கும்!

  கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர

     கக்குழி யினில்தள் ளுமால்!

ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்

அண்ணலே – இடையூறுகளை யெல்லாம் நீக்கி என்னை

ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!, அருமை…..தேவனே!, கோபமே

பாவங்களுக்கு எல்லாம் தாய்தந்தை – சினமே எல்லாப் பாவங்களுக்கும்

அன்னையும் அப்பனும் ஆகும், கோபமே குடிகெடுக்கும் – சினமே குடியைக் கெடுக்கும், கோபமே ஒன்றையும் கூடிவரவொட்டாது – சினமே எதனையும்அடைய விடாது, கோபமே துயர்கொடுக்கும் – சினமே துயரந்தரும்கோபமே  பொல்லாது – சினமே கெட்டது, கோபமே சீர்கேடு – சினமே புகழைக் கெடுப்பது, கோபமே உறவு அறுக்கும் – சினமே உறவைத் தவிர்க்கும், கோபமே பழி செயும் – சினமே பழியை யுண்டாக்கும்கோபமே பகையாளி,– சினமே மாற்றான், கோபமே கருணை போக்கும் – சினமே அருளைக் கெடுக்கும், கோபமே ஈனம் ஆம் – சினமே இழிவாகும், கோபமே எவரையும் கூடாமல் ஒருவன் ஆக்கும் – சினமே ஒருவரையும் சேர்க்காமல் தனியனாக்கும், கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக்குழியில் தள்ளும் – சினமே காலன்முன் இழுத்துச்சென்று கொடிய நரகக் குழியிலே வீழ்த்தும்.

     (வி-ரை.) ஆல் : அசை. ‘ஆறுவது சினம்‘ என்றார் ஒளவையார்.

தீராக் கோபம் போராய் முடியும்’ என்றார் நறுந்தொகையார்..

—subham—

Tags– ஆறுவது ,சினம்தீராக் ,கோபம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: