
Post No. 11,693
Date uploaded in London – 21 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்!
ச.நாகராஜன்
நான்கு வித புத்திகள்
புத்தி நான்கு வகைப்படும்.
1) ஆத்மபுத்தி-சுகா – ஒருவருடைய ஸ்வயமான புத்தி – சந்தோஷத்திற்கானது
2) குருபுத்தி விசேஷ – குருவின் புத்தி – விசேஷமானவற்றிற்காக.
3) பரபுத்தி விநாச – மற்றவர்களின் புத்தி – நாசத்திற்கானது
4) ஸ்தீரி புத்தி – ப்ரளயா – பெண்களின் புத்தி – சர்வ நாசத்திற்கானது.
ஆத்மபுத்தி: சுகாயைவகுருபுத்திர்விசேஷத: |
பரபுத்திர்விநாஷாய ஸ்தீரிபுத்தி: ப்ரளயாவஹா ||
– சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 155/94
நான்கு வித ப்ரமாணங்கள்
ப்ரமாணங்கள் – அதாவது ஏற்கக்கூடிய அறிவானது – நான்கு வகைப்படும்.
1) ஸ்மிருதி – வேதத்தின் மூலம் அடையப்படுவது
2) ப்ரத்யக்ஷம் – நேரடியாக அடைவது
3) இதிஹாஸம் – ராமாயண, மஹாபாரத இதிஹாஸத்தினால்
பெறப்படுவது
4) அனுமானம் – ஊகத்தினால் பெறப்படுவது
ஸ்மிருதி: ப்ரயத்க்ஷமைதிஹ்ரம் | அனுமானஸ்சதுஷ்டயம் ||
– தைத்ரீய ஆரண்யகம் I.2.1
நான்கு வித போகங்கள்
போகங்கள் நான்கு வகைப்படும்.
1) ஸ்தூலம் – மொத்தமாக அடையும் சுகம்
2) ப்ரவிபக்த – தனித்து அடைவது
3) ஆனந்தம் – ஆனந்தம்
4) ஆனந்தாவபாஸ: – ஆனந்தத்தின் தோற்றம்
ஸ்தூலஸ்ச ப்ரவிபக்த: | ஆனந்தஸ்சானந்தாவபாஸ: |
சத்வாரோ போகா தேஹஷ: பவந்தி ||
– தாஸபோதம் 17.9.3

நான்கு வித பயங்கள்
பயங்கள் நான்கு வகைப்படும்.
1) ஜன்ம பயம் – பிறப்பினால் வருவது
2) ம்ருத்யு பயம் – இறப்பினால் வருவது
3) ஜரா பயம் – வயது முதிர்ந்தவுடன் மூப்பினால் வருவது
4) வியாதி பயம் – நோய்களினால் வருவது
ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-பயம் நைவோபஜாயதே |
– விஷ்ணு சஹஸ்ர நாமம் – பல ஸ்ருதி
நான்கு வித நண்பர்கள்
நண்பர்கள் நான்கு விதம்.
1) ஔரஸம் – ஒரே பெற்றோர்களிடம் பிறந்தவர்கள்
2) க்ருதசம்பந்தம் – திருமணத்தினால் வருவது
3) வம்ச சம்பந்தம் – வம்சத்தினால் வருவது
4) ரக்ஷக சம்பந்தம் – துயரப்படும் போது ரக்ஷிப்பவரால் வருவது
ஔரஸம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம் |
ரக்ஷகம் வ்யஸனேப்யஸ்ச ஞேயம் சதுர்விதம் ||
– காமந்தகீய நீதி ஸார: IV- 74
முக்தி பெற நான்கு வழிகள்
நான்கு வழிகளில் முக்தியை அடையலாம்.
1) ப்ரஹ்ம ஞானம் – ப்ரஹ்மனை அறிவதன் மூலமாக முக்தி பெறலாம்.
2) கயா சிரார்த்தம் – கயாவில் சிரார்த்தம் செய்வதன் மூலமாக முக்தி
பெறலாம்.
3) கோக்ரஹ மரணம் – கோசாலையில் – பசு தொழுவத்தில் – மரணம்
அடைவதன் மூலம் முக்தி பெறலாம்.
4) குருக்ஷேத்ர நிவாஸம் – குருழக்ஷேத்ரத்தில் வசிப்பதன் மூலமாக
முக்தி பெறலாம்.
ப்ரஹ்மஞானம் கயாச்ரார்த்தம் கோக்ருஹே மரணம் ததா |
வாஸ: பும்ஸாம் குருக்ஷேத்ரே முக்திரேஷா சதுர்விதா ||
நரகத்திற்குச் செல்ல நான்கு வழிகள்
நரகத்திற்குச் செல்ல நான்கு வழிகள் உண்டு.
1) காமம் – காமம்
2) க்ரோதம் – கோபம்
3) லோபம் – பேராசை
4) தம்பம் – தற்பெருமை
இவையே நரகத்திற்குச் செல்லும் நான்கு வழிகள்.
காமோ லோபஸ்ததா க்ரோதோ தம்பஸ்சத்வார் இத்யமி |
***
tags- நான்கு , புத்திகள், போகங்கள்