
MRS.AHALYAA GAUTAMA AND ESCAPING INDRA; GAUTAMA RISHI CURSING HIM.
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,697
Date uploaded in London – 22 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பெரிய சந்தேகங்கள்! பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா? அஹல்யை! – என்னம்மா, இப்படிச் செய்யலாமா?
ச.நாகராஜன்
புராண இதிஹாஸங்களின் மீது மிக்க மதிப்பு வைத்திருப்பவர்களுக்கு பெரிய சந்தேகங்கள் உண்டு.
அதைப் போற்றாதவர்களுக்கோ கேட்கவே வேண்டாம், அவர்களுக்குச் சந்தேகமே கிடையாது, இவையெல்லாம் அபத்தக் களஞ்சியம் என்று பரப்புவர். அதாவது திராவிட மாடல்!
சரி, முதலில் முக்கியமான சில சந்தேகங்களை மட்டும் வரிசைப் படுத்துவோம்.
பின்னர் பதிலைப் பார்க்க முயற்சி செய்வோம்.
இதோ கேள்விகள் :
1) த்ரிசிரஸ் என்னும் பிராமண உத்தமரை இந்திரன் கொல்லலாமா?
2) பாண்டவர் ஐவர், ஒருத்தியை – திரௌபதியை மணக்கலாமா?
3) காமவேகத்தால் அஹல்யையை இந்திரன் கெடுக்கலாமா?
4) மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?
5) பரசுராமர் சொந்தத் தாயை கொல்லலாமா?
6) சந்திரன் குரு பத்னியை சேர்த்துக் கொள்ளலாமா?
7) பகவான் கிருஷ்ணர் கோபிகளை ரமிக்கலாமா?
இவர்களே இப்படிச் செய்தால் சாமானியனான ஒருவன் அப்படிச் செய்தால் என்ன தப்பு?
விளக்கம் தேவை.
இதிஹாஸ, புராணங்களைப் போற்றுவோருக்கு எழும் நியாயமான சந்தேகங்களை அவர்கள் கேட்கின்ற போது அவர்களைத் திட்டி, அவமானப்படுத்தி அப்புறப்படுத்தி விடக் கூடாது.
தக்க விளக்கங்களை அளிக்க வேண்டும்.
முதலில் இவர்களே இப்படிச் செய்தால் சாமானியனான நான் இது போலச் செய்தால் அதில் என்ன தப்பு என்ற கேள்வியைக் கவனிப்போம்.
இதே சந்தேகம் எழுந்தபோது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள சந்தேகம் கொண்டவர்கள், போதாயன மஹரிஷியை அணுகினர்.
அவர் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறினார்.
“தேவர்களைப் போல நடக்க முயலாதே;
அவர்கள் சொல்லியதைப் போல நட”
“தேவர்களால் எது அனுஷ்டிக்கப்பட்டதோ, முனிவர்களால் யாது அனுஷ்டிக்கப்பட்டதோ அது மனிதர்களால் கடைப்பிடிக்கக் கூடியதல்ல. அவர்கள் சொல்லியதை அனுஷ்டிக்க வேண்டும்.
ஏன் நாம் அப்படிச் செய்யக் கூடாது?
இதற்கு மனு காரணத்தை (ஹேது) கூறி விட்டார்:
“முன்னோர்களாகிய அந்த மஹான்களின் சரீரங்களும் இந்திரியங்களும் தேஜோ மயங்கள். ஆகையால் தாமரை இலையானது ஜலத்தினால் பற்றாமல் இருப்பது போல, அவர்கள் தோஷத்தினால் பற்றப்படுகின்றவர்கள் அல்ல”
நம் போன்றவர்களின் அறிவுக்கு எட்டாத யோகப் பெருமை பெற்றவர்கள் அவர்கள். அவர்களது வடிவம், உருவம், அமைப்பு, குணாதிசயங்கள் மனித விதிகளுக்கு உட்பட்டதல்ல.
அது மட்டுமல்ல, ஒவ்வொரு சரிதத்தையும் எடுத்து உன்னிப்பாக ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால் நமக்குக் கிடைக்கும் உண்மைகள் நம்மை வியப்படையவே செய்யும்.
பரசுராமர் தந்து தந்தையின் சொற்படி கேட்டார்; சித்தி பெற்றார்.
யாக்ஞவல்க்யர் ஆதித்தனை நோக்கித் தவம் செய்தார், சுக்ல யஜூர் வேத உபதேசத்தைப் பெற்றார்.
இந்திரன் மூன்று லோகங்களும் க்ஷேமம் அடையவேண்டியதன் பொருட்டு அதன் நிமித்தமாகவே பிரம்மஹத்தி தோஷத்தைத் தானே அங்கீகரித்துக் கொண்டான்.
உண்மையில் பார்த்தால், ஆதிசேஷ பகவானாகிய இறைவன் தேவர்கள் மற்றும் பிராமணர்களின் நன்மைக்காகவே அவர்களின் காரியத்தை முன்னிட்டே சுக்ல யோனி சம்பந்தமாக உள்ள யோனியை அடைந்து பலபத்ரராகப் பிறந்தான்.
பாண்டவர் ஐவரும் தனது தாயின் வசனம் சத்தியமாக ஆதல் வேண்டும் என்பதன் பொருட்டாகவே ஆச்சரியமான பல நிபந்தனைகளோடு திரௌபதியுடன் இல்லறம் நடத்தினர்.
சந்திரன் தனது தவத்தால் மஹேஸ்வரனுடைய பரம கருணைக்கு ஆளானதோடு மிகுந்த மேன்மையை அடைந்தான்.
பிரும்ம தேவன் சத் புத்திரன் ஜனிப்பதால் ஏற்படும் அபாரமாகிய சித்தியை விளக்கிக் காட்டினான்.
இவை எல்லாம் சாஸ்திரத்திற்கு விரோதமான செய்கைகள் அல்ல. புனிதமான செயல்களே. .

AHALYAA SAAPA VIMOCHANAM
இப்படி தைத்திரீய உபநிஷத் தீபிகையில் விளக்கத்தைக் காணலாம்.
சாஸ்திரங்களையும் வேத, இதிஹாஸ புராணங்களையும் நன்கு கற்றறிந்த சங்கரானந்த சரஸ்வதி போன்ற மஹான்களால் எழுதப்பட்டுள்ள விளக்கவுரைகளைப் படித்தால் நமக்குப் பல உண்மைகள் புரியும்; சந்தேகங்கள் விலகும்.
இனி இது பற்றி விளக்கமாக இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போமே
***