
Post No. 11,700
Date uploaded in London – – 22 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
.jpg)
Xxx
கண்துடிப்பு (Twitching eye, throbbing eye) சாஸ்திரம் பற்றி உலகெங்கிலும் நம்பிக்கை இருக்கிறது. கிரேக்க அறிஞர், ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், கதாசிரியர் ஜொனதான் ஸ்விப்ட் (Shakespeare and Jonathan Swift) ஆகியோர் சொன்னதை என்னுடைய 2018-ம் ஆண்டுக் கட்டுரையில் சொன்னேன். அத்தோடு சங்கப் புலவர் கபிலன், அவருக்கு முந்தைய காளிதாசன் ஆகியோர் சொன்னதையும் எழுதினேன்.
ஆனால் இவர்களையெல்லாம் தோற்கடித்து விடுகிறார் வால்மீகி முனிவர்;
அவரிடமிருந்துதான் (Bollywood, Hollywood ) பாலிவுட், ஹாலிவுட் டைரக்டர்கள் எல்லாம் சில உத்திகளைக் கற்றார்கள் போலும்.
மனிதர்கள் இறந்து போகும் காட்சிகளை மேடையில் காட்டக்கூடாது என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனிவர் (Natya Shastra by Bharata Muni) சம்ஸ்க்ருத நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறார். அதை ஒருவர் அழுகை, ஓலமிடுதல் மூலமே குறிப்பால் உணர்த்தலாம். தமிழ் சினிமா டைரக்டர்கள் இதே செய்தியை ஒரு விளக்கு அணைவது மூலம் காட்டினார்கள் . அதேபோல ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியைக் காட்டாமல் ரோஜா மலர் கசங்கி அழிவதையோ வாடி வதங்கி விழுவதையோ காட்டினார்கள்.

1993-ம் ஆண்டில் ஜுராஸ்ஸிக் பார்க் திரைப்படம் எடுத்து டைனோசர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய (Jurassic Park directed by Steven Spielberg) ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என்ன செய்தார்? முதலில் டைனோசர் என்னும் ராட்சத மிருகங்களைக் காட்டாமல், பிரமாண்டமான சப்தத்தையும் அப்போது மேஜை மீதிருந்த கண்ணடிக் கோப்பையில் தண்ணீர் சலசலப்பதையும் காட்டினார். இவர்களுக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தவர் வால்மீகி முனிவர். கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகத்தை நமக்கு அளிக்கிறார்.
மூன்று கண் துடிப்புகள்
ராமனும் சுக்ரீவனும் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டபோது மூன்று பேரின் கண்கள் ஒரே நேரத்தில் துடித்ததாம்.
வாலி, ராவணன், சீதாதேவி ஆகிய மூன்று பேரின் இடது கண்களும் துடித்தன என்று ஸ்லோகம் செய்து இருக்கிறார். பெண்களுக்கு இடது கண்ணும், ஆண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் நல்ல சகுனம்; ஆனால் இங்கே மூன்று பேர்களுக்கும் இடது கண் துடிப்பதை அவர் அப்படியே மனக் கண்களில் பார்த்து பாடல் செய்கிறார். இதன் மூலம் ராவணன், வாலி ஆகியோரின் மரணத்தையும் சீதைக்கு விடிவு காலம் வந்து விட்டது என்ற செய்தியையும் அழகுபட மொழிகிறார்.
இதோ அந்த ஸ்லோகம் ,
सीता कपीन्द्रक्षणदाचराणां
राजीवहेमज्वलनोपमानि।
सुग्रीवरामप्रणयप्रसङ्गे
वामानि नेत्राणि समं स्फुरन्ति4.5.32
ஸீதா கபீந்த்ர க்ஷண தாசராணாம்
ராஜீவ ஹேமஜ்வல நோபமாநி
ஸுக்ரீவ ராமப்ரணய ப்ரஸங்கே
வாமானி நேத்ராணி ஸமம் ஸ்புரந்தி
——–கிஷ்கிந்தா காண்டம் , ஐந்தாம் சர்க்கம் வால்மீகி ராமாயணம்
பொருள்
சுக்ரீவனும் ராமனும் தோழமை கொண்டபொழுது தாமரை மலர்போன்ற ஸீதையின் இடது கண்ணும் , தங்க நிறமுள்ள வாலியின் இடது கண்ணும், நெருப்பைப் போன்ற ராவணனின் இடது கண்ணும் ஒரே சமயத்தில் துடித்தன. .
என்ன அற்புதமான வருணனை ; நம்மூர் திரைப்பட டைரக்டர்கள் உடனே மூவரையும் மியூசிக் ஸஹிதம் மாற்றி, மாற்றி காண்பித்திருப்பார்கள். உடனே பத்திரிகை விமர்சனங்களும் அடடா! அடடா! அற்புதம்! என்று அந்த டைரக்டரைப் புகழ்ந்து தள்ளி இருப்பார்கள்; இந்த ஐடியாவை எங்கிருந்து திருடினார் என்பதை டைரக்டரும் சொல்லமாட்டார்!!!!!!
XXXX
MY OLD RTICLE
கண் துடிப்பது நல்லதா – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…

·
14 Oct 2018 — காளிதாஸன், கபிலன், ஷேக்ஸ்பியர் செப்புவது என்ன? கண் துடிப்பதற்கு டாக்டர்கள் …
—-subham—
Tags–ஹாலிவுட் , பாலிவுட், வால்மீகி , கண்துடிப்பு , இடது, வலது