
Post No. 11,704
Date uploaded in London – – 23 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
உலகத்தில் தோன்றிய காவியங்களில் முதல் காவியம் வால்மீகி ராமாயணம் ஆகும். இது ஆதி காவியம் என்று அழைக்கப்படுகிறது . இதில் 7 காண்டங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் சர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன . எளிய சம்ஸ்க்ருதம்; ஆனால் அற்புதமான கதையும் சொல்லாக்கமும் உடையது. சம்ஸ்க்ருதத்தில் பிற்காலத்தில் எழுதிய எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்தில் அவரைப் பின்பற்ற்றியதைக் காணலாம். சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் ராமாயணம் பரவியிருந்ததை அகநானூற்றுப் புறநானூற்றுப் பாடல்களில் காண்கிறோம். ராவணனை அரக்கன் என்றும் சங்கப் புலவர் வசை பாடுகிறார். பிற்காலத்தில் தேவாரம் பாடிய மூவரும் ராவணனை வசைபாடுவதோடு ராமனைப் புகழ்வதையும் காண்கிறோம். அதே போல ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலும் படிக்கிறோம் .
ராமாயணத்திலுள்ள 7 காண்டங்கள் – பால, அயோத்தியா , ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர காண்டங்களாகும். இதில் கடைசி காண்டம் உத்தர காண்டம். இதை சிலர் பிற்சேர்க்கை என்றும் வால்மீகி எழுதாதது என்றும் செப்புவர். ஆனால் இது பிற்சேர்க்கையாக இருந்தாலும் வால்மீகி தான் எழுதியிருக்க வேண்டும் என்பது சம்ஸ்க்ருத மொழியை அறிந்தோரின் வாதம். எது எப்படியாகிலும் அதிலுள்ள சுவையான விஷயங்கள் உண்மையில் நடந்தவையே.

இந்து மத்தில் நிறைய நாய்க் கதைகள் இருக்கின்றன. இது ரிக் வேதத்தில் துவங்குகிறது. சரமா, சரமேயஸ் என்ற நாய்கள் பற்றி ரிக் வேதத்தில் படிக்கிறோம். மஹாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் வடக்கு நோக்கி நடந்து உயிர் விடுகையில் யுதிஷ்டிரனை கடைசி வரை ஒரு நாய் தொடர்ந்து சென்ற கதையை நாம் கேட்கிறோம். அது போலவே ராமாயண உத்தர காண்டத்தில் ஒரு நாய்க் கதை வருகிறது. பலரும் கேட்டிருக்க மாட்டார்கள்.
காலையில் செய்யவேண்டிய கடமைகளை முடித்த பின்னர் பிராமணர்களையும் , BUSINESS COMMUNITY பிசினஸ் கம்யூனிட்டியைச் சேர்ந்த வர்த்தகர்களையும் சந்தித்து ராமர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் லெட்சுமணனை அழைத்து இன்று நம்மிடம் மனுக்கொடுக்க வந்துள்ள பொதுமக்களை அழைத்து வா என்கிறார்.
(இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள் — ராமபிரான் அரசன் என்ற முறையில் பிஸினஸ் கம்யூனிட்டி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியதாகும் . அதற்குப்பின்னர் பொது மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதையும் கவனிக்க வேண்டும் ).
இதற்குப்பின்னர் நடந்த சுவையான கதை இதோ:
ததா ப்ரபாதே விமலா க்ருத்வா பெளர்வாஹ்நிகீம் க்ரியான்
ராஜதர்மானவேக்ஷன் வை ப்ராஹ்மணைர் நைகமைஸ் ஸஹ
அத ராமோ அப்ரவீத் தத்ர லக்ஷ்மணம் சுபலக்ஷணம்
கார்யார்த்தி நச்ச ஸெளமித்ரே வ்யாஹார்த்தும் த்வமுபக்ரம
ஏவ முக்தஸ்து ஸெளமி த்ரீ :நிர்ஜகாம ந் ருபாலயாத்
அபச் யத் த்வார தேசே வை ச்வானம் தாவதிஸ்திதம்
இவ்வாறு கூறப்பட்ட லட்சுமணன் அரண்மனையிலிருந்து வெளியே சென்று ஒரு நாய் நிற்பதைக் கண்டான் ; புத்திசாலியான அவன், நாயை உள்ளே அழைத்துச் சென்று ராமனிடம் நாயை அறிமுகம் செய்துவைத்தான் .
அதா பச்யத தத்ரஸ்தம் ராமம் ச்வா பின்ன மஸ்தகஹ
ராமஸ்ய வசனம் ச்ருத்வா ஸாரமேயோ அப்ரவீத் இதம்
உடைந்த தலை யுடைய அந்த நாய், ராமரைப் பார்த்தது .
ராமரின் அனுமதி பெற்ற பின்னர் பேசத் தொடங்கியது.
பிக்ஷூ ஸர்வார்த்த சித்திச்ச பிராஹ்மணா வஸதே வஸத்
தேன தத்தஹ ப்ரஹாரோ மே நிஷ்காரண மாநாகசஹ
ஸர்வார்த்த சித்தி என்ற ஒரு பிராஹ்மண பிக்ஷூ ,அக்ரஹாரத்தில்
வசித்து வந்தான் . ஒரு பாவமும் அறியாத என்னை அவன் காரணமின்றி அடித்துவிட்டான்
ஆநீ தஸ்து ததஸ்தேன ராமம் த்ருஷ்ட்வா மஹாத்யுதிஹி
த்விஜஹ ஸர்வார்த்த சித்திஸ்து அப்ரவீத் ராம ஸன்னிதெள
பின்னர் அவனால் அழைத்துவரப்பட்ட , ஒளியுடன் கூடிய ஸர்வார்த்த சித்தி என்னும் அந்தணன் ராமன் முன்னிலையில் சொன்னான் :
மயா தத் தஹ ப்ராஹாரோ அயம் க்ரோதே நாவிஷ்ட்ட சேதஸா
பிக்ஷார்த்த மட மானேன காலே விகத பைக்ஷகே
பிக்ஷையின் பொருட்டு அலைந்தும் பிக்ஷை கிடைக்காததால் கோபம் வந்தபோது இந்த அடி என்னால் கொடுக்கப்பட்டது .
ஏதத் ச்ருத்வா து ராமேண கெளலபத்யே அபிசேஷிதஹ
ப்ரய யெள பிராஹ்மணோ ஹ்ருஸ்டோ கஜஸ் கந்தேன சோர்ச்சிதஹ

இதனைக் கேட்ட ராமனால் அவன் மணியக்காரர் பதவியில் அமர்த்தப்பட்டான். உடனே அந்த வேதியனும் மகிச்சியுடன் யானையின் முதுகில் அமர்ந்து சென்றான் ..
ச்வாப்ய கச்சன் மஹாதேஜாஹா யாத ஏவா கதஸ்ததஹ
வாரணஸ்யாம் மஹாபாகஹ ப்ராயம் சோபவிவேசஹ
ஒளிமிகுந்த முகத்துடன் அந்த நாயும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பிச் சென்றது .பின்னர் அந்த மஹிமைவாய்ந்த பிராணி , காசியில் சாகும் வரை உபவாசம் இருந்தது .
XXXXX SUBHAM XXXXXX
TAGS–பிராமணன் , நாய், தலையில் காயம், ராமன், உத்தர காண்டம்