
Post No. 11,711
Date uploaded in London – – 25 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
வால்மீகி ராமாயண உத்தர காண்டத்தில் நிறைய சுவையான செய்திகள் உள்ளன . சங்கத் தமிழ்ப் புலவர்கள் இதை அப்படியே பின்பற்றியுள்ளனர். அரசனை இந்திரனுக்கும், யமனுக்கும், முருகனுக்கும் ஒப்பிடுவதை சம்ஸ்க்ருத நூல்களில், காளிதாசன் காவியங்களில் காணலாம்.
ததாபிஷேக வவ்ருதே சத்ருக்நஸ்ய மஹாத்மநஹ
அபிஷிக்தஸ்து சத்ருக்நோ பபெள சாதித்ய ஸன்னிபஹ
அபிஷிக்தஹ புரா சேந்த்ரைரிவ மருத் கணை ஹி
பொருள் மஹிமையுள்ள சத்ருக்நனுக்கு திரு அபிஷேகம் நடந்தது . கதிரவனையொத்த ஒளிமிக்க சத்ருக்நனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதும் , முன்பு இந்திரன் தலைமையில் தேவர்களால் அபிஷேகம் செய்யப்பட்ட முருகன் போல அவர் இருந்தார்.
சங்க இலக்கியத்தில் மன்னர்களை முருகனுக்கு ஒப்பிடும் இடங்கள் :
புறம் 56 நக்கீரர்பாடியது; பாண்டிய மன்னனை வருணிக்கையில் நீ யமன், முருகன், பலதேவன், கண்ணன் போன்றவன் என்று புகழ்கிறார். அதில் நினைத்தை முடிப்பதில் நீ முருகனையொத்தவன் என்கிறார். முருகனை சேனாதிபதி என்று புராணங்கள் வருணிக்கின்றன. சங்க புலவர்களும் நீ சீற்றமிகு முருகன் என்று மன்னனை வருணிக்கின்றன.
XXXX

சீதைக்கு இரட்டைக் குழந்தை TWINS IN VEDAS, RAMAYANA, MAHABHARATA & ASTROLOGY
உலகிலேயே முதல் இரட்டையர்கள் TWINS பற்றிப் பேசுவது ரிக் வேதம் . அங்கே அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரைப் பார்க்கிறோம். பின்னர் சீதைக்குப் பிறந்த குசன், லவன் என்ற இரட்டையரைப் பார்க்கிறோம். ராமாயணத்தில் தசரதன் பிள்ளைகளான லெட்சுமணனும் சத்ருக்கனனும் சுமித்ரைக்குப் பிறந்த இரட்டையர் ஆவர் .அதன் பின்னர் மஹாபாரதத்தில் நகுலன் சகாதேவன் என்ற இரட்டையரைப் பார்க்கிறோம். பின்னர் மிதுன ராசி இரட்டையரை ஜோதிட நூல்களில் படிக்கிறோம்.. இவ்வளவு இரட்டைக் குழந்தைகளை வேறு எந்த மத நூலிலும் காண முடியாது
இதில் சுவையான விஷயம் என்னவென்றால், காட்டிலுள்ள வால்மீகி ஆஸ்ரமத்துக்குள் சத்ருக்னன் நுழையும்போது சீதைக்கு குசன் -லவன் என்ற இரட்டையர் பிறக்கின்றனர். உடனே வால்மீகி மகரிஷி குழந்தைகளை பூத ,பிசாசுகள் நெருங்காமல் இருக்க குசம் என்ற தர்ப்பைக் கட்டை எடுத்து நுனிப் பாகத்தையும் அடிப்பக்கத்தையும் எடுத்து வந்து காப்புக் கட்டுகிறார் இவ்வவாறு குசப் புல்லைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு குச , லவ என்ற பெயர் ஏற்பட்டது .
இதோ அந்த ஸ்லோகம் :
குச முஷ்டிமுபாதாய லவம் சைவ ஸ து த்விஜஹ
வால்மீகி பிரததெள தாப்யாம் ரக்ஷாம் பூத விநாசினீம்
ஏவம் குசலவெள நாம்நா தாவுபெள யமஜாதகெள
பொருள்
அந்த வேதியர் பெருமானான வால்மீகி, தர்ப்பக் கற்றையை நறுக்கி நுனிப்பாகத்தையும் அடிப்பாகத்தையும் எடுத்துக்கொண்டு வந்து குழந்தையைப் பீடிக்கவல்ல பூத பைசாசங்களை அழிக்கவல்ல காப்பை அக்குழந்தைகளுக்கு அளித்தார் . இதனால் இரட்டைக் குழந்தைகளான அவர்கள் முறையே குசன் என்றும் ,லவன் என்றும் பெயர் உடையவர் களாயினர்.
XXX
2015 மார்ச் 24 ல் நான் எழுதிய கட்டுரை:—
சங்க இலக்கியத்திலும் குழந்தைகளைப் பேய் பிசாசுகள் நெருங்காமலிருக்க ஐயவி என்னும் வெண்கடுகைப் புகைக்கும் செய்தி உளது .
பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.
EIGHT POINT GHOST BUSTING PLAN OF ANCIENT TAMILS
பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-
1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்
2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்
3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்
4.யாழ் இசைக்க வேண்டும்
5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்
6.மணி அடிக்கவேண்டும்
7.காஞ்சி பாட வேண்டும்
8.அகில் புகை போட வேண்டும்
இதோ பாடல்கள்:—
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)
தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)
பொருள்:
போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.
இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)
நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்.370)
பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்……………..
நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்…………….
திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.
XXXX
விஞ்ஞானிகளுக்குத் தெரியாத அதிசய விமானம் THOUGHT POWERED SPACESHIP- PLANE
இதுவரை உலகில் எந்த நாட்டு விஞ்ஞானிகளுக்கும் தெரியாத அதிசய விமானம் இந்தியாவில் அக்காலத்தில் இருந்தது. இது பிரம்மாவினால் குபேரனுக்குக் கொடுக்கப்பட்டு பின்னர் ராவணனால் பறிமுதல் செய்யப்பட்டது. இதை வைத்துக்கொண்டு ராவணன் இமயமலை, நர்மதை நதிக்கரை, மற்றும் கிஷ்கிந்தை ஆகிய இடங்களுக்கு வந்து வால் ஆட்டியதும் சிவ பெருமான், கார்த்த வீர்ய அர்ஜுனன், வாலி ஆகியோரிடம் அடி வாங்கியதும் அனைவரும் அறிந்ததே.. இது எண்ணத்தால் — மனதின் சக்தியால் — இயக்கப்படும் THOUGHT POWERED விமானம். வேண்டிய இடத்துக்குச் செல்லும்; வேண்டிய அளவுக்கு பயணிகளுக்கு இடம் கொடுக்கும். இதை காமகாமி புஷ்பக விமானம் என்று ராமாயணம் புகழ்கிறது. இது போன்ற விமானம் சோதனைச் சாலையில் செய்யப்பட்டத்தை உலகப் புகழ்பெற்ற விஞ்ஞான சஞ்சிகை வெளியிட்டது. ராமர் விமானம் பறந்தது எப்படி ? என்ற என்னுடைய விஞ்ஞானக் கட்டுரையில் அது பற்றி எழுதியுள்ளேன். இதோ அது பற்றிய ராமாயண ஸ்லோகம்:-
அயோத்யாம் ப்ராப்ய காகுஸ்தஹ புஷ்பகம் காமகாமி தத்
விசர்ஜயித்வா கச்சேதி ஸ்வஸ்தி தே அஸ்து இதி ச ப்ரபுஹு
பொருள்
ராமபிரான் அயோத்திக்குச் சென்று இஷ்டப்படி செல்லும் ஆற்றல் படைத்த புஷ்பக விமானத்தை உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று கூறி அனுப்பிவிட்டார் .
இதில் கவனிக்க வேண்டிய சொல் காமகாமி = இஷ்டப்படி செல்லக்கூடிய என்பதாகும் .
விஞ்ஞானிகள் இப்போதுதான் இதைப்பற்றி ஆராயவே துவங்கியுள்ளனர் .
இதே போல வலவன் ஏவா வான ஊர்தி PILOTLESS PLANE IN PURA NAANURU என்று புறநானூற்றுப் புலவர் பாடிய வின் ஊர்தி, இப்போது DRONE ட்ரோன் என்ற பெயரில் பறப்பதைப் பார்க்கிறோம் .
—SUBHAM—
ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?
https://tamilandvedas.com › ராமர…
22 Jun 2013 — ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought …
புஷ்பக விமானம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ப…
ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered …
—subham—
Tags- காமகாமி , புஷ்பக விமானம், இரட்டைக் குழந்தை, வால்மீகி, சத்ருக்னன்- முருகன் ஒப்பீடு