32வகை தர்மங்கள் பற்றி அம்பலவாணர் (Post No.11,710)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,710

Date uploaded in London – –  25 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

32 தர்மங்களின் பட்டியலை அறப்பளிச்சுர சதகத்தில்,   ஒரே பாடலில், அம்பலவாணக் கவிராயர்  அழகாகக் கொடுத்துள்ளார் . இதில் வியப்பான விஷயம் சிறைக் கைதிகளுக்கு உணவு கொடுப்பது, அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது , மிருகங்களுக்கு தீவனம்  கொடுப்பது, கல்யாணம் செய்ய உதவுவது, பிள்ளைகளுக்கு கல்வி சாலைகள் அமைப்பது , மருந்து கொடுப்பது ஆகியன அனைத்தும் உள . இவை அனைத்தும் புராண , இதிகாசங்களில் உள்ள விஷயங்கள்.

இதிலுள்ள தண்ணீர் பந்தல் வைக்கும் விஷயம் பெரிய புராணத்தில் அப்பர் காலத்தில் இருந்ததை படிக்கலாம் . மணிமேகலை காவியத்தில் அவள் சிறைச் சாலை சேவை செய்ததையும் உணவு கொடுத்ததையும் காணலாம். அசோகர் கல்வெட்டு முதல் இன்று ராமகிருஷ்ண மிஷன் வரை இந்த சேவைகளைக் காண்பதால் இது வாய்ச் சொல் வீரமில்லை ; உண்மைக் கதை என்றும் தெரிகிறது

.  தமிழ் நாட்டில் பல ஊர்ப்பெயர்களில் கூட ‘சத்திரம்’ என்ற சொல் இருப்பது அக்கால மன்னர்களின் தர்மத்துக்குச் சான்றாக நிற்கின்றன. மதுரை மங்கம்மாள் சத்திரத்திலும், அதற்கு அணித்தேயுள்ள மார்வாடி தர்மசத்திரத்திலும் நானே பலர் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன் ; கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறைச் சின்னம் திறக்கப்பட்ட போது ஆர் எஸ் எஸ் (R S S)  ஸ்தாபனம் மூலம் இதைச் செய்தோம் ; ஏதோ வெளிநாட்டினர் வந்து நமக்கு மருத்துவ மனை கட்டவும், காலேஜ் கட்டவும் சொல்லிக்கொடுத்தனர் என்பதெல்லாம் தவறு என்பதை சதகப் பாடலும் புராணங்களும் காட்டுகின்றன.

சமணர்கள் , மிருகங்கள், பறவைகளுக்கும் கூட இலவச மருத்துவ மனை வைத்ததை உலகில் வேறு எங்கும் காண முடியாது .

32 வகை தர்மங்கள்

1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் (Choultries; free lodging and boarding) கட்டிவைப்பது.

2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு (Free Hostels for students or Food Distribution)  உணவு வசதி அளிப்பது.

3. அறுவகைச் சமயத்தார்க்கும் (food for Mendicants) உணவு கொடுப்பது.

4. பசுவுக்கு வைக்கோலும் (fodder for cows) புல்லும் வழங்குவது.

5. சிறைச் சாலையில்(Food for prisoners துன்புறுவோர்க்கு சோறளிப்பது

6. வீடு தேடி வரும் ஆதரவற்ற (Giving alms) ஏழைகட்குப் பிச்சை அளிப்பது.

7. தின்பண்டம் (Anna Dhanam) நல்கல்.

8. மகப்பேறு மருத்துவ (Setting up Maternity Homes) மனைகள் அமைத்தல்

9. தாய்மைப் பேறுபெற்ற (Helping pregnant women; pre-natal and post natal care) பெண்கட்கு உதவி செய்வது.

10. குளம் வெட்டுதல் (Excavating Tanks, Lakes for Irrigation)

11. அனாதைப் பிணங்களை (cremating dead bodies of orphans or the poor) அடக்கம் செய்வது.

12. சுண்ணாம்பு tamilandvedas.com, swamiindology.blogspot.com

 (giving lime for betel-nut chewers) அளிப்பது.

13. நோயாளிகட்கு மருந்துகள் (Free distribution of medicines; setting up of hospitals for men and animals) கொடுத்து உதவுவது.

14. துணிவெளுக்கும் (Providing laundry service) தொழிலாளர் சேவை செய்து கொடுத்தல்

15. நாவிதர் (providing barber shops) சேவை செய்து கொடுத்தல்

16. காது குத்தி (Piercing ear for both boys and girls; also provide them ear studs) காதோலை/தோடு கொடுத்து உதவுவது.

17. மறைமொழி , தர்ம சாத்திரம் (Setting up schools to teach them Vedic Hymns and Morals ) கற்பித்தல்; பிள்ளைகளுக்கு கல்வி சாலைகள் அமைப்பது

18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது tamilandvedas.com, swamiindology.blogspot.com (helping children to take oil bath).

19. ஆலயம் கட்டல் (Building Temples)

20. பிறர் துன்பம் தீர்ப்பது.(Helping the downtrodden and the bereaved)

21. தண்ணீர்ப் பந்தல் வைத்து உதவுவது.(Setting up sheds for water distribution)

22. மடம் கட்டிச் சமய அறிவை வளர்ப்பது (Setting up Mutts for religious teachings).

23. அறைதல் = சாலைகளை அமைத்துக் கொடுப்பது அல்லது  தமுக்கு முதலியன (Communication facilities) மூலம் செய்தி வழங்குவது. 

24. சோலைகளை உண்டாக்கி வைப்பது (Creating gardens and parks for general public).

25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள தூண்களை நிறுவுவது (Constructing pillars and water holes for animals; they come there to relieve their itching).

26. விலங்கினங்கட்கு உணவளிப்பது (Giving food to animals and birds; both domestic and wild). tamilandvedas.com, swamiindology.blogspot.com

27. வெற்றிலை பாக்கு (distributing betel-nuts) கொடுத்து உதவுவது.

28. விலை கொடுத்து (saving lives) உயிரைக் காப்பாற்றுதல்.

29. கன்னிகாதானம் செய்து கொடுத்தல். திருமணமாகாத ஏழை களுக்குத் திருமணம் (Helping boys and girls to get married; Free Matrimonial Service) செய்து வைப்பது.

30. குழந்தைகட்குப் (Provision of Free Milk to Children) பால் வழங்குதல்.

31. கண்ணாடி (distributing mirrors for women to help with their look) வழங்குதல்.

32. விலைமாதர் (setting up brothels for the amorous so that common women are not disturbed) சேவை நல்குதல் tamilandvedas.com,

Xxxx

மாதவியின் மகளாக அவதரித்துப் பேரெழிலுடன் விளங்கிய மணிமேகலை!, ஒரு கட்டத்தில் சிறைச் சாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள கைதிகளைச் சந்திக்கிறார். அமுதசுரபி என்னும் வற்றாத உணவளிக்கும் அற்புத பாத்திரம் மூலம் அங்குள்ள கைதிகளுக்கு அறுசுவை உணவு படைக்கிறார். வயிற்றுக்குச் சோறிட்டதோடு நில்லாமல் மனதுக்கும் ஆறுதல் தரும் அன்பு மொழிகளையும்  நல்ல வாழ்க்கை நடத்தத் தேவையான அறிவுரைகளையும் வழங்குகிறார். அற்புதம்! அனைவரும் மனம் மாற்றம் அடைந்துவிடுகின்றனர். இதை அறிந்த சோழ மன்னன் அவளை அரண்மனைக்கு அழைக்கிறார். சிறைக் கைதிகளை உடனே விடுவிக்கும் படியும் சிறச்சாலைகளை சாது சந்யாசிகள் தங்கும் திரு மடங்களாக மாற்றவும் ஆலோசனை வழங்குகிறார். மன்னனும் அதை ஏற்று செயல் படுத்துகிறான்.

சிறைக் கைதிகள் சீர்திருத்தம் Prisoners rehabilitation என்பது மேலை நாட்டில் புதிதாகப் பின்பற்றப்படும் கருத்து. இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திக் காட்டியவர் மணிமேகலை!

Xxxx

பெரிய புராண, மஹா பாரத தண்ணீர் பந்தல் கதைகள்

12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி பற்றி வேதங்கள் முதல் திருவிளையாடல் புராணம் வரை பிரஸ்தாபிக்கின்றன. அத்தகைய காலங்களில் அக்ஷய பாத்திரம், அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், உலவாக்கிழி என்ற அற்புதக் கலயங்களும் சின்னங்களும் இந்திய மக்களைக் காப்பாற்றி வந்துள்ளன. இதை நம்பாதோரும் கூட கஷ்ட காலங்களில் மனிதர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை மலர்ந்த பூமி இப் புனித பாரதம் என்பதையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.

அப்பூதி அடிகள் கதை

பெரியபுராணத்தில் வரும் அப்பூதி அடிகள் கதையும் மஹா  பாரதத்தில் வரும் சல்லியன் கதையும் நாம் அறிந்ததே. அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நால்வரில் ஒருவர். சம்பந்தராலும் போற்றப்பட்ட புனிதர். ஆனால் அந்தணர் அல்ல. அவர் திங்களுர் சென்றபோது அவர் பெயரில் திருமடங்களும் தண்ணிர் பந்தல்களும் இருந்ததைக் கண்டு வியந்தார். யார் என்று வினவியபோது அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் இவ்வாறு செய்ததை அறிந்தார். அவரிடமே சென்று

“ஏனைய்யா இப்படி அப்பர் பெயரை வைத்தீர்? அவர் என்ன சாதனை செய்து கிழித்துவிட்டார்?” என்று வினவ, அப்பூதி அடிகள் புலி எனச் சீறி அப்பர் தம் பெருமையை விளக்கி வந்தவரை விரட்டப் பார்த்தார். தாம்தான் அப்பர் என்று அவர் தம்மையே அறிமுகப் படுத்தியபோது அப்பூதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. நாம் இங்கே கவனிக்கவேண்டியது தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் 1300 ஆண்டுகளாக இன்றும் தமிழகத்தில் நீடித்திருக்கும் ஒரு சமூகப் பணி என்பதாகும்.

மாத்ர தேச அதிபதி சல்லியன் கதை

இதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மஹாபாரத காலத்தில் இப்படி ஒரு கதை வருவதைப் பார்த்தால் இமயம் முதல் குமரி வரை 5000 ஆண்டுகளாக இப்படி நற்பணி நடந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். பாண்டவ சகோதரர் நகுலன் சகாதேவனின் மாமன் மாத்ர தேச அதிபதி சல்லியன். மாபாரத போருக்கு முன் இவனை தம் பக்கத்தில் இழுத்துக் கொள்ளவேண்டும் என்று பாண்டவர்களும் கவுரவர்களும் முனைப்புக் காட்டினர். கள்ளத்தனத்தில் கெட்டிக்காரன் துரியோதணன். சல்லியன் வரும் வழியில் தண்ணீர் பந்தல்கள் வைத்து அவன் தாக சாந்தி செய்யவே அவனிடம் உதவி கேட்டனர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரல்லவா? வனும் அப்படியே உதவி தருவதாக வாக்களித்தான். கர்ணனின் தேரோட்டியாக அமர்ந்த சல்லியன், 18ஆம் நாளில் உயிர் துறக்கிறான். வாக்கிற்குக் கட்டுப்பட்ட சத்திய சீலன்!

ஆக தண்ணிர் பந்தல், அன்ன தானம் என்பன பாரதீய வாழ்வில் இரண்டறக் கலந்த அம்சங்கள். வட இந்தியாவில் காளி கம்பளவாலா சத்திரங்கள் என்று வழி நெடுகிலும் உண்டு. அந்தக் காலத்தில் இமய மலையின் புனித தலங்களுக்குச் செல்லுவோருக்கு கம்பளி ஆடைகளை கொடுத்துதவிய ஒரு தர்மாத்மாவின் பெயரில் அமைந்த சத்திரங்கள் அவை. நம் தமிழ் நாட்டிலும் வழி நெடுகிலும் அன்ன சத்திரங்கள் இருந்த காலம் ஒன்று உண்டு.

எறும்புக்கும் கொசுவுக்கும் கூடத் தீங்கு செய்யாத சமண சமயத்தினர் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் மருத்துவ மனை நடத்திய நாடு இது!

Above article 32 வகை தர்மங்கள் பட்டியல் (Post No.7683) was written by me on 12 March 2020

xxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 94

 94. முப்பத்திரண்டு அறங்கள்

பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்

     பிள்ளைகள் அருந்தி டும்பால்,

  பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்

     பெண்போகம், நாவிதன், வணான்,

மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு

     வாயின்உறை, பிணம்அ டக்கல்,

  வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்

     வழங்கல், சுண் ணாம்பு தவுதல்,

சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்

     செய்தல், முன் னூலின் மனம்,

  திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,

     தேவரா லாயம்,அ வுடதம்;

அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்

     அன்னைசெயல்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே.

     (இ-ள்.) அருமை ……. தேவனே!, பெறும் இல் – மகவு பெறுதற்கு

வீடு விடுதல், பெறுவித்தலொடு – மகவு பெறுதற்கு வேண்டியவற்றை

உதவுதல், காது ஓலை – காதணி அளித்தல், நாள்தொறும் பிள்ளைகள்

அருந்திடும் பால் – அன்றாடம் குழந்தைகள் பருகும் பால் அளித்தல்,

பேச அரிய சத்திரம் – சொலற்கரிய சத்திரம் கட்டல், மடம் – (துறவிகள்

இருக்கும்) மடம் அமைத்தல், ஆவுரிஞ்சு கல் – பசுக்களின் தினவு நீக்கும்

கல்நடுதல், பெண்போகம் – பெண்களுக்கு இன்பம் அளித்தல், நாவிதன் –

அம்பட்டனுக்கு உதவுதல், வணான் – வண்ணானுக்கு உதவுதல், மறைமொழி

கண்ஆடி – மறையில் கூறுமாறு கண்ணாடி யீதல், தண்ணீர் – நீர்

வேட்கையைத் தணித்தல், தலைக்கு எண்ணெய் – தலைக்கு எண்ணெய்

கொடுத்தல், பசுவின்வாய் உறை – பசுக்களுக்குத் தீனி, பிணம் அடக்கல் – (ஆதரவு அற்ற)

பிணத்தை அடக்கம் செய்தல், வாவி – குளம் வெட்டுதல், இறும் உயிர்

மீட்டம் – இறக்கும் உயிரைக் காத்தல், தின்பொருள் – தின்பண்டம்

அளித்தல், அடைக்காய் வழங்கல் – வெற்றிலைபாக்குக் கொடுத்தல்,

சுண்ணாம்பு உதவுதல், சிறை உறுபவர்க்கு அமுது – சிறையில்

அகப்பட்டவர்க்கு உணவு கொடுத்தல், வேறு இலம் காத்தல் – பிறர்

துயரைப் போக்குதல், பொழில் செய்தல் – சோலை வைத்தல், முன் நூலின்

மணம் – பழைய நூல் முறைப்படித் திருமணம் செய்வித்தல், திகழ் விலங்கு

ஊண் – விளங்கும் விலங்குகளுக்கு உணவளித்தல், பிச்சை – இரப்போர்க்கு

ஈதல், அறு சமயருக்கு உண்டி – அறுவகை அகச் சமயத்தாருக்கும் உணவு

அளித்தல், தேவராலயம் – திருக்கோயில் கட்டுதல், அவுடதம் – மருந்து

கொடுத்தல், அறைதல் கற்போருக்கு அன்னம் – பாடம் படிப்போர்க்கு

உணவு அளித்தல், நாலெட்டு அறங்களும் – (ஆகிய) முப்பத்திரண்டு

அறங்களும், முன் அன்னை செயல் – முற்காலத்தில் உமையம்மையார்

காஞ்சியிற் செய்தவை ஆகும்.

To be continued……..

Tags– 32 வகை தர்மங்கள்,அம்பலவாணர் , சத்திரங்கள்,மணிமேகலை, தண்ணீர் பந்தல் ,அக்ஷய பாத்திரம், அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், உலவாக்கிழி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: