இந்தியாவின் வளர்ச்சி : வெளியுறவுத் துறை அமைச்சர் உரை! (Post.11,712)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,712

Date uploaded in London –  26 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

வெல்க பாரதம்!

இந்தியாவின் வளர்ச்சி : வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெயசங்கரின் உரை!

ச.நாகராஜன்

ஒரு குறிப்பிடத்தக்க உரையை நமது வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெயசங்கர்  பங்களூரில் நிகழ்த்தியுள்ளார்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மானேஜ்மெண்ட் (Indian Institute of Management)  மாணவர்கள் மற்றும் ஆசிரியர் குழாமிடையே அவர் 2022 ஜூன் 10ஆம் தேதி  இந்த அருமையான உரையை நிகழ்த்தியுள்ளார்.

உரையின் சாராம்சமாவது:

“நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களோ, இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் அனைவரும் ஒரு மாபெரும் புரட்சி நடக்கும் போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் இது ஒரு புரட்சி என்பதை நீங்கள் உணராமல் இருக்கக்கூடியதற்கான காரணம் இது ஜனநாயக ரீதியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு விதங்களில் நடந்து கொண்டிருப்பதால் தான்.

‘ஆகவே, உங்களைச் சுற்றியும் நிஜமாக, வாழ்க்கையானது நாடக பாணியில் ஆழ்ந்து வியக்கத்தகும் விதத்தில் மிகப் பெரும் மாறுதலை அடைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த கல்வி நிலையத்தில் நுழைந்திருக்கும் சமயத்தை விட இப்போது பணியை ஏற்கும் நிலையில் நீங்கள் வெளியேறும் போது அடிப்படையிலேயே மாறுதலை அடைந்துள்ள ஒரு இந்தியாவில் காலடி எடுத்து வைக்கப் போகிறீர்கள்.

கடந்த 8 வருடங்களில் ஜன தான் யோஜனா திட்டத்தின் மூலமாக அமெரிக்காவின் 80 சதவிகித ஜனத்தொகை என்று சொல்லக்கூடிய அளவிலான 30 கோடி பேர்கள் வங்கிக் கணக்கைக் கொண்டிருக்கின்றனர்; இந்தக் கணக்கில் தேவைப்படும் மக்களுக்காக பணத்தை அரசு சேர்ப்பிக்கிறது.

ஹர் கர் ஜல்’ என்ற திட்டமானது சுத்தமான குடிநீரை 45 கோடி மக்களுக்கு கடந்த 8 வருடங்களில் கொடுத்து வருகிறது.  இந்த எண்ணிக்கை முழு ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தின் ஜனத்தொகையாகும். இவர்கள் அனைவருக்கும் இது வரை குழாய் இணைப்பு இல்லாமல் இருந்தது; இப்போது கிடைத்திருக்கிறது.

ஜெர்மனியின் ஜனத்தொகை அளவிலான 8 கோடி பேர்கள் இதுவரை சமையலுக்கு விறகைப் பயன்படுத்தி வந்தவர்கள், இப்போது எல்பிஜி இணைப்பைப் பெற்று சமையலுக்கு சமையல் வாயுவைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ப்ரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக  ஏறக்குறைய ஜப்பானின் ஜனத்தொகை என்று சொல்லக்கூடிய அளவிலான 11.5 கோடி மக்களுக்கு வீடுகள் (நகரங்களிலும் நகர்ப்புறங்களிலும்) கட்ட நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் காலம் கடுமையான காலம். அப்போது தேவைப்பட்ட ரேஷன் கார்ட் வைத்திருக்கும் எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது; இன்னும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 81 கோடி பேர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர்.  இந்த எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் ஜனத்தொகைக்குச் சமம்.

கடந்த 8 வருடங்களில் சௌபாக்யா என்ற திட்டத்தின் மூலமாக 13 கோடி பேர்கள் நாம் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் முதல் முறையாக மின் இணைப்பை பெற்றுள்ளனர். இந்த 13 கோடி என்ற எண்ணிக்கை ரஷியாவின் ஜனத்தொகை அளவாகும்.

ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக 17 கோடி பேர்கள் உடல்நல பாதிப்பின் போது உதவியைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை மெக்ஸிகோவின் ஜனத்தொகையைப் போல 125 % (125 சதவிகிதம்) ஆகும்.

நாம் எவ்வளவு பெரிய மாறுதலை புரட்சி என்று சொல்லும் அளவில் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அறிய (இளைய தலைமுறையினராகிய) நீங்கள் இந்த எண்ணிக்கையை மனதிலே ஏற்றிக் கொள்ள வேண்டும்.

நான் ஏன் இந்த எண்ணிக்கைகளை உங்களிடம் சொல்கிறென் என்றால்  நீங்கள் இந்தியாவானது மாபெரும் சமூக -பொருளாதார மாறுதல்களை அடைந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தின் நடுவில் நீங்கள் இருப்பதால் தான். நமது சமூகத்தின் கீழ் மட்டத்தில் நாம் உண்மையிலேயே ஒரு சமூக பத்திரத்தன்மையை, பாதுகாப்பைஉருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

 ஆகவே தான் அடிப்படையான எதிர்பார்ப்பு இப்போது வேறு ஒரு மட்டத்தில் இருக்கிறது. 

இந்த உரையை ஒவ்வொரு இந்தியனும் மனதிலே ஏற்றிக் கொண்டு இளைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அவர்கள் மனதில் ஏற்றிக்கொள்ளும் படியாகச் சொல்ல வேண்டும்.

வாழிய பாரத மணித் திருநாடு! 

***

நன்றி : ஜெய்சங்கர் அவர்களின் ஆங்கில உரையைப் பிரசுரித்துள்ளது  கல்கத்தாவிலிருந்து வெளிவரும் வார இதழான ட்ரூத் (TRUTH) Volume 90 Issue 38 Dated 13th January 2023)

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: