
Post No. 11,714
Date uploaded in London – – 26 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
முதல் பாடலில் இல்லறம் என்பதற்கு இலக்கணம் கற்பிக்கிறார் கவிராயர்.; மாதா, பிதா, குரு , உறவினர்கள், சகோதர்கள், நல்ல விருந்தினர்கள் , உபசரிக்க வேண்டிய அந்தணர்கள், எல்லாம் அடங்கியது ஒரு பேமிலி; Family அதாவது குடும்பம். இப்படி நடப்பதே இல்லறம். இது துறவறத்துக்கும் மேலானது என்று முடிக்கிறார். மனு, வள்ளுவன் ஆகியோரும் அதையே செப்பினர். அதற்கு காரணத்தையும் சொல்லிப் போந்தனர்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை- குறள் 41
பிரம்மச்சாரி, வானப்ரஸ்தர், சந்நியாசி ஆகிய மூன்று வகை மக்களுக்கும் உதவுவதால் இல்லறம் நடத்துவோர்தான் அவர்களைவிடச் சிறந்தவர் என்று பரிமேல் அழகர், மண க்குடவர் முதலியோர் உரை கூறுகிறது. அடுத்த இரண்டாவது குறளிலேயே தென்புலத்தார், தெய்வம், விருந்து , ஒக்கல் , தான் என்ற ஐவருக்கும் உதவும் பஞ்சயக்ஞம் பற்றியும் மனுவும் வள்ளுவரும் கூறுவர். இல்லறம் அல்லது நல்லறம் அல்ல என்று அவ்வையார் கூறியதற்கும் இதுவே காரணம் . அதாவது இல்லறத்தார் இல்லாவிடில் நான்கு பிரிவினர் என்ற இந்து தர்மம் இல்லாமல் போய்விடும். 4 பிரிவினர் – மாணவர்/ பிரம்மச்சாரி, கிரஹஸ்தன்/ இல்லறத்தான், வானப்ரஸ்தன்/ பென்ஷனர் அல்லது ஓல்ட் ஏஜ் மக்களுக்கான முதியோர் இல்லத்தில் Pensioners or Residents of Old Age Homes வசிக்கும் பெற்றோர், நாலாவது வகை- சன்யாசிகள் Ascetics. இவர்கள் நால்வருக்கும் உணவு கொடுப்பதோடு தினமும் பஞ்ச யக்ஞமும் செய்கிறான் என்பார் வள்ளுவர் .
Xxxxx

அடுத்த பாடலில் சைவ, வைணவ, பிரம்மா தொடர்பான புராணங்கள் எவை எவை என்று வகைப்படுத்துகிறார் புலவர். அந்தப் பாடல்களை படிப்பதற்கு முன்னர் புராணம் பற்றிய செய்திகள் இதோ:
18 புராணங்கள்
வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்
18 உபபுராணங்கள்
சிறிய, முக்கியமற்ற புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.
புராணங்கள் பெரிய கலைக் களஞ்சியங்கள்; உலகிலேயே மாபெரும் இலக்கியம்; பல லட்சம் பாக்களை கொண்டவை; வராலாறும் பூகோளமும் பாடுபவை ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம். தாவரவியல் அறிவியல்,விலங்கியல் , வறட்சி, பூகம்பம் முதலியன பற்றி அவற்றில் உள. பல லட்சம் பாக்களை ஆராய நமக்கு ஒரு 100 ஆண்டு ஆயுள் போதாதே! என்ன செய்வது!
புராணங்கள் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் காலப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரே மன்னனின் தம்பிகள் அண்ணன்கள், தாயாதிகள் ஆண்டதையும் குழப்பிக்கொண்டு ஆண்டுகளை மாற்றி எழுதினர். பாண்டியர்களில் ஒரே நேரத்தில் ஆண்ட சஹோதரர்கள் உண்டு. சேர மன்னர்களில் இரண்டு வம்சங்கள் ஒரே நேரத்தில் ஆண்டதும் உண்டு. இவை பிற்காலத்தியவை; ஆகையால் குழப்பம் மிகக் குறைவு. பழங்கால விஷயங்களில் இது அதிகம்
மக்களைக் கவர்வதற்காக மிகைப்பட்ட கூற்றுகளைப் புராணம் சொல்லுவோர் மொழிந்தனர். தசரதனுக்கு 60,000 மனைவியர், காசி மன்னன் அலார்கா 36, 000 ஆண்டுகள் ஆண்டான்; ராமன் 24,000 ஆண்டுகள் ஆண்டான் என்றெல்லாம் கதை விட்டனர். ஆனால் வேதங்களோ மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகளே என்று திரும்பத் திரும்ப பாடுகின்றன. தீர்க தமஸ் 100 ஆண்டு வாழ்ந்ததையும், மஹீதாஸ ஐதரேயர் 116 வயது வரை இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. உண்மையில் ஆயிரம் என்பதில் மூன்று பூஜ்யங்களை நீக்கி விட வேண்டும்; ஏனெனில் இது போன்ற ‘கப்ஸா’க்கள் சுமேரியாவிலும் உண்டு; மூன்று தமிழ்ச்சங்கங்கள் வரலாற்றிலும் உண்டு. ஆதிகால மக்கள் இப்படி ஆயிரம் என்பதைச் சேர்த்துச் சொல்லுவர். மஹாபாஷ்யம் யாத்த பதஞ்சலி முனிவர் மட்டும் அறிவியல் முறையில் கணக்கிட்டு ராமன் 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்று அறுதியிட்டுக் கூறினார்.
ஆக மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் புராணங்களுக்கு புளுகு மூட்டைகள் என்ற அவப்பெயரை சம்பாத்தித்துத் தந்தன.
ஆதிகாலத்தில் வரலாற்றை வாய் மொழியாக, பாடல் வாயிலாக, பாமர மக்களுக்கு என படைக்கப்பட்டவை புராணங்கள். இதற்கு ஐந்து லட்சணங்கள் உண்டு. அதில் வரலாறும், பூகோளமும் அடக்கம். ஆயினும் இந்துக்கள் மஹா புத்திசாலிகள், ‘ரொம்ப அட்வான்ஸ்ட்’ (far advanced) என்பதால் அவ்வப்பொழுது புது வரலாற்றைப் (updating) புகுத்தினர். இப்படி உலகில் அவ்வப்பொழுது புது வரலாற்றை எழுதியோர் இந்துக்கள் மட்டுமே. வெளிநாட்டுப் பேதைகள் கடைசி தேதியைப் பார்த்துவிட்டு புராணங்கள் பிற்காலத்தியவை என்று முத்திரை குத்திவிட்டனர். பெயரிலேயே புராண (பழையவை) என்ற சொல் இருக்கையில் புதியவை என்று அரை வேக்காடுகள் செப்பியது ‘சூடான ஐஸ்க்ரீம்’ (Hot Icecream!!!) என்று சொல்லுவதற்கு இணையானது. குப்தர் காலம் வரை பிற்சேர்க்கை இருந்ததால் புராணங்கள் குப்தர் காலத்தியவை என்பது காமாலைக் கண்ணர்களின் வாதம்.
புராணங்களில் ஐந்து பகுதிகள் இருக்கவேண்டும் என்பது மரபு:
1.சர்கம்: பிரபஞ்சத்தின் தோற்றம்
2.பிரதி சர்கம்: மற்ற உயிர்களின் தோற்றமும் மறைவும்
3.வம்சம்: ரிஷிகள், தேவர்களின் சரிதம்
4.மன்வந்தரம்: 14 மனுக்களின் காலம்
5.வம்சானுசரிதம்: சூரிய, சந்திர குல அரசர்களின் வரலாறு
xxxxx
அறப்பளீசுர சதகப் பாடல் எண் 95
95. இல்லறம்
தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்
சன்மார்க்கம் உளமனை வியைத்
தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்
தனைநம்பி வருவோர் களைச்
சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்
தென்புலத் தோர் வறிஞரைத்
தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
தேனுவைப் பூசுரர் தமைச்
சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாது
தான்புரிந் திடல்இல் லறம்;
சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்
தம்முடன் சரியா யிடார்!
அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்
கன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு
அன்பனே – பார்வதியும் எவ்வுயிர்க்கும் அன்னையினும் நல்லவளுமான
உமையம்மைக்குக் காதலனே!, அருமை ……. தேவனே!, தந்தைதாய்
சற்குருவை – தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை
– வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம்உள மனைவியை –
நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை – நீங்காத
உறவினரையும், ஏவாத மக்களை – குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும்,
தனைநம்பி வருவோர்களை – தன்னை நம்பிப் புகலடைந்தோர்களையும்,
சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை – மனம் மகிழத்
தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை –
தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை – குற்றமற்ற
விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை – அன்புமிக்க
உடன்பிறப்பாளர்களையும், தேனுவை – பசுக்களையும், பூசுரர்தமை –
அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய்கடனை – எப்போதும்
செய்யும் கடமைகளையும், இவை – (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது
– எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் – ஒருவன் இயற்றுவது
இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர்
தம்முடன் சரிஆயிடார் – பொருந்திய நன்மையையுடையராகிய துறவு
நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.
(வி-ரை.) ‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன்பழிப்ப
தில்லாயின் நன்று’ என்னும் வள்ளுவர் வாய்மொழியை ஒப்புநோக்குக.
Xxxxxxxxxxxxxxxxxxxxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 96
96. புராணம்
தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
சாரும்வா மனம், மச் சமே,
சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த
சரிதமே, பிரமாண் டமும்,
தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;
நெடியமால் கதை;வை ணவம்
நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,
நீடிய புராணம் நான்காம்;
கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,
கமலா லயன்கா தைஆம்;
கதிரவன் காதையே சூரிய புராணமாம்;
கனல் காதை ஆக்கி னேயம்;
அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அலைகொண்ட நதியும் வெண்மதியும் அறுகும் புனையும்
அத்தனே – திரையெறியும் கங்கையாற்றையும் வெண்திங்களையும்
அறுகையும் மிலைந்த தலைவனே!, அருமை …….. தேவனே!, தலைமைசேர்
பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும் வாமனம், மச்சம், சைவம்,
பெருங்கூர்மம், வருவராகம், கந்தசரிதம், பிரமாண்டமும் – நிலைமைசேர்
இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம் – நிலையான இவை பத்தும் உயர்ந்த
சிவபுராணங்கள் ஆகும், நெடிய மால் கதை – நெடியவனான திருமாலின்
கதைகள், வைணவம், நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம், நீடிய
புராணம் நான்கு ஆம் – பெருமையுடைய புராணங்கள் நான்கும் ஆம்,
கலைவளர் சொல் பதுமமொடு பிரமகை வர்த்தமே கமலாலயன் காதை ஆம்
– கலைவல்லார்கூறும் பதுமபுராணமும் பிரமகைவர்த்த புராணமும் தாமரை
மலரவன் காதைகள் ஆகும், கதிரவன் காதையே சூரிய புராணம் ஆம் -,
கனல் காதை ஆக்கினேயம் – அக்கினியின் கதை ஆக்கினேய புராணம்.
(வி-ரை.) சைவபுராணம் பத்து; வைணவபுராணம் நான்கு; பிரமபுராணம்
இரண்டு, கதிரவன் புராணம் ஒன்று; ஆக்கினேய புராணம் ஒன்று; ஆகப்
பதினெண் புராணங்கள்.
To be continued……………………………………………………..