
WRITTEN BY B .Kannan, New Delhi
Post No. 11,713
Date uploaded in London – – 26 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
WRITTEN BY B.KANNAN, NEW DELHI
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் பல.
மூக்குப்பொடிப் பிரியர்களுக்கு இக் கட்டுரை சமர்ப்பணம்…
இன்றைக்கு நாம் பார்க்கப் போவது ஒரு சாதாரண சின்னப் ‘பொடி’ விஷயமே! ஆம்,
‘ஸ்நஃப் பவுடர்’, நுகட்காரம், நாசிப்பொடி, மூக்குப் பொடி எனத் தென்னிந்தியாவிலும், நாஸ்,சுங்கனீ, நஸ்வார் என்றெல்லாம் வட இந்தியாவிலும் அழைக்கப்படும் விநோத பழக்க வழக்கத்தைப் பற்றிதான். இது பரவலாக மேட்டுக்குடி மக்களிடமும், புலவர் கள், கலஞர்களிடமும் அவர்களின் அந்தஸ்துக்கு ஒரு முக்கிய அடையாளமாக 70, 80-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளது. பின்பு அப்பழக்கத்துக்குச் சாதாரண பொது ஜனங்களும் அடிமையாகி விட்டனர். அந்தக் காலத்து தமிழ் வாரஇதழ்களில் டிஏஎஸ்
ரத்தினம் பட்டணம் பொடி விளம்பரம் நிச்சயம் இடம் பெற்றிருந்ததை மறக்க முடி யுமா? அப்பொடியை அதற்கென்றே பிரம்மதேவன் விசேஷமாக சிருஷ்டித்திருக்கும் வாயகல அண்டா அல்லது பீரங்கி போன்ற மூக்குத் துவாரத்தில் “சொர்..ர்” என்று இழுத்து ஏற்றிக் கொள்ளாவிட்டால் மற்ற காரியங்கள் எதுவும் சுறுசுறுப்பாகவும் சுமு கமாகவும் நடந்தேறாது என்றிருந்தது அக்கால நிலை!
அருகில் இருப்பவருக்குச் தர்மசங்கடம் கலந்த அருவருப்பு, துணி துவைப்போர்க்கு அவஸ்தை என்பதை இப்பிரியர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். கடைக்காரர் பிரத் தியேகமான பொடி ஜாடியிலிருந்து, போதை தருவதற்குப் புகையிலை, காரத்துக்குச் சுண்ணாம்பு, மணத்திற்கு நெய் சேர்க்கப்பட்டுள்ளச் சன்னமானத் துகளை, மிகவும் மெலிதான, நீண்ட, தலைப் பகுதியில் சின்னக் குழியுடனிருக்கும் கரண்டியால் தட் டித்தட்டி (விழும் ஆனால் அதிகம் விழாத மாதிரியும் இருக்கும்!) அதில் கலந்துள் ளப் பொருட்களின். சேர்மானத்தைப் பொறுத்து, பொடிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்” அதை மட்டைநார் இலையில் போட்டு, பாந்தமாக மடித்து, வாழை நார் கொண்டு கட்டிக் கொடுக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
“பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன், ஐயகோ!” என்கிறார் வள்ள
லார் (திரு அருட்பா,அவா அறுத்தல், பாடல் 12). “சோமசுந்தரன் கடையில் செய்த
பொடியினைப் போடா மூக்குப் புண்ணியம் செய்யா மூக்கு” என்று தமிழ்த் தாத்தா
உ.வே.சா. அவர்கள் ஒரு கவிதையே பாடியுள்ளார். சாதாரணமானவர்களுக்குத் தும்
மலைத் தரும்பொடி இங்கு புலவர் மூலம் புதிர் வெண்பாவைக் கொடுத்துள்ளதை
ரசிக்கலாம்….

கண்பார்வை இழந்தும் கல்வி-கேள்விகளில் வல்லுநராய், கலைச் சிறப்புடையவராய், வளமானக் கற்பனை நிறைந்தக் கவிச்சிங்கங்களாகத் திகழ்ந்தவர் பலருண்டு. இரட் டையருள் ஒருவரான இளஞ்சூரியர், வீரராகவ முதலியார், செட்டிநாட்டு வன்றோண் டச் செட்டியார், வங்காளத்தின் கவிஞர் சுபோத சந்திரர், சூர்தாசர்,ஆங்கிலக் கவிஞன் ஜான்மில்டன், கிரேக்க கவி ஹோமர், இன்றும் நம்மை வழி நடத்திக் கொண்டிருக் கும் வேதசாஸ்திர விற்பன்னர் பூஜ்யஶ்ரீ ராமபத்ராசார்யா ஆகியோரைப் போன்றே பழநி கவிச்சிங்க நாவலர் (மாம்பழக் கவிராயர்) அவர்கள், முகக்கண்களை இழந்த வராக இருந்தாலும் அகக் கண்ணொளிப் பெற்று அரும்பெருங் கவிஞராய் விளங்கிய வர். நையாண்டி, கேலி, பரிகாசம் தொனிக்கும் பாக்களை இயற்றி அனைவரையும் மகிழ்வித்தவர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு அவரது கீழ்வரும் பாடல்.
“மேலாடை யின்றிச் சபை புகுந்தால் இந்த மேதினியோர்
நூலாயிரம் படித்தாலும் எண்ணார் நுவல் பாற்கடலோ
மாலானவன் அணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே
ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே”
( உடுப்பு நெறி-DRESS CODE-விதி இருக்கிறது, அல்லவா? சிலவிடங்களில் நல்ல ஆடைகளை அணிந்திருப்பவர்களுக்கு வரவேற்பும், அப்படி இல்லாதவர்களுக்கு அவ மரியாதையும் ஏற்படுவதை நாம் பார்த்திருப்போம்.அவர்கள் எவ்வளவு நூல்கள் படித் திருந்தாலும் ஆசானாக- நுவல்- ஏற்கமாட்டார்கள். தெய்வங்களில் கூட இந்தப் பாகு பாடு இருக்கிறதே! திருமால் அலங்காரப் பிரியராகப் பட்டாடை அணிந்திருந்ததால் பாற்கடல் அவருக்குத் திருமகளைக் கொடுத்ததாம். சிவபெருமான் புலித்தோலை உடுத்தியிருந்ததால் தான் அதே பாற்கடல் ஆலகால விஷத்தை அவருக்குக் கொடுத் ததாம். ஆடையின் பெருமையை நையாண்டித் தொனியில் இந்த அழகியப் பாடலில் உணர்த்தியிருக்கிறார் புலவர்).
அப்படிப்பட்டவர் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, பொன்னுச்சாமி தேவர் ராஜசபையை அலங்கரித்தவர். அப்போது நடந்த ஒரு சுவாரசியமானப் “பொடி” சம்பவம்…….
நாவலர் பொடி போடும் பழக்கமுடையவர். எப்போதும் பொடி டப்பி ஒன்றைப் பக்கத் திலேயே வைத்திருப்பார். மூக்கு துறுதுறுக்கும் சமயத்தில் அரசரோ அவையினரோ அறியாதவாறு குனிந்து மரியாதை நிமித்தம்,மேல் உத்தரீயத்தால் முகத்தை மறைத் தபடி பயன்படுத்துவது வழக்கம் (‘சொர்..ர்’ என்ற சத்தம் கேட்டுத் தொலைக்கும்,என்ன செய்வது!). ஒருநாள் சொற்பொழிவின் நடுவில் மூக்கு அவசர சமிக்ஞை கொடுத்து விட, பக்கத்தில் பொடி டப்பியைத் தடவித் தேடியும் கிடைக்கவில்லை. அதைத்தான் தேவர் அவர்கள் விளையாட்டாக நாவலர் அறியாதவாறு முன்பே எடுத்துத் தன்வசம் வைத்துக் கொண்டுவிட்டாரே! சலிப்படைந்துவிட்டப் புலவரை நோக்கி ஏதும் தெரியா தவர் மாதிரி மன்னர் கேட்டார், “தாங்கள் ஏதோ ஒரு வஸ்துவை மறந்து தேடுவது போல் தோன்றுகிறதே! அது யாதோ? என்று
அதற்கு நாவலர், “வள்ளல் பெருமானே! தங்கள் அருமைச் சமூகத்தின் முன்னர் அஞ் சாது அறிவிக்கும் அளவிற்கு அது அத்துணைப் பெரிய காரியமில்லை!” எனவிநயமா கப் பதிலளித்தார்.
“அப்படியாயின் அது ஒரு பொடிக் காரியமாக இருக்குமோ?” என்றார் அரசர்.
புலவர் சங்கடத்துடன் நெளிந்தவாறு, “ஆம்,அரசே!” என்றார்
“தவறியப் பொருள் மீண்டும் கிடைக்க வேண்டுமாயின் ஒன்று செய்ய வேண்டியிருக் கும். அதாவது ஒரு வெண்பாவில் ஐந்து இடங்களில் பொடி என்ற சொல்வருமாறும் அதுவே முருகன் துதியாகவும் அமைந்திருக்குமாறுப் பாடிக் கொடுத்தால்,தங்களிடம் பொடி டப்பியை வரவழைத்துத் தருகிறோம், சம்மதமா?”
மூக்குப்பொடி மீது வைத்துள்ள அதீத வேட்கையால் உந்தப்பட்ட நாவலர் அக்கணமே ஒரு வெண்பாவைப் பாடினார். அப் ‘பொடி’ப் பாடல் இதோ…
“கரும்பொடி மாவஞ்ச வெறிகைப்பொடி சில்விற்பர்
தருங்கொம் பொடிசை தெய்வத்தையல்-விரும்புபுய
வான்பொடியா நின்ற கதிர்மானு மயிலோ எனையாள்
தேன்பொடியார் பூம்பதந் தந்தே”
(கரும்பொடி, கைப்பொடி, தருங்கொம்பொடி, வான்பொடி, தேன்பொடி என ஐந்து பொடிகள் அடங்கியப் பாடலின் பொருள்: கரும்பை ஒடித்துத் தின்னும் யானைகள் (மா) அஞ்சும்படியாக வீசும் பொடிசில் எனும் கையாயுதத்தைக் கொண்ட மலைக் குறவர் தரும் கொம்பு போன்ற வள்ளிதேவியுடன்,இசைந்த தெய்வகுஞ்சரி விரும்பும் பன்னிரு கரங்களைக் கொண்டவரே, வானில் சுடுகின்ற சூரியனைப் போன்ற வடிவே லரே, தேனின் மகரந்தப்பொடி பொருந்தும் உமது தாமரைப் பூம்பாதம் தந்து என்னை அருள்வாயாக! )
இப்பாடலைக் கேட்டு மனம் குளிர்ந்துபோன அரசர் தேவரவர்கள் தங்கத்தால் செய்து நவரத்தினங்கள் பதித்த விலையுயர்ந்தப் பொடி டப்பி ஒன்றை நாவலருக்குப் பரிசா கத் தந்து மகிழ்ந்தார்.
To be continued……………………………………..
tags – மூக்குப்பொடி