
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,716
Date uploaded in London – 27 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சப்தரிஷிகளைப் பற்றி குழப்பமா! குழப்பமே இல்லை!
ச.நாகராஜன்
நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார் :”சார்! சப்தரிஷிகள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள புத்தகங்களை நாடினேன். ஒவ்வொரு புத்தகத்தில் ஒவ்வொரு பட்டியல் இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பம். ரிஷிகளின் பெயர்களைச் சொல்வதில் கூடவா குழப்பம்?”
அவர் கேள்வி நியாயமானது தான்.
பட்டியல்கள் வெவ்வேறு மாதிரி தான் உள்ளன.
அவரிடம் நான் சொன்னேன்:
“இதில் ஒருவிதக் குழப்பமும் இல்லை. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேறு வேறு ஏழு ரிஷிகள் சப்தரிஷிகள் என அழைக்கப்படுகின்றனர். ஆகவே நீங்கள் பார்க்கும் பட்டியல் எந்த கல்பத்திற்கு உரியது என்பதைக் கவனிக்க வேண்டும்.”
இந்த பதில் அவருக்குப் புதிதாக இருந்தது. அவர் தெளிந்தார்.
விஷ்ணு புராணத்தை எடுத்துக் கொள்வோம். இதில் மிகத் தெளிவாக இந்த உண்மை எடுத்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் பிரத்யேகமாக சப்தரிஷிகள் உள்ளனர் என்று.
7வது மன்வந்தரமாகிய வைவஸ்வத மன்வந்தரம் இப்போது நடக்கிறது. இந்த மன்வந்தரத்தில் உள்ள ரிஷிகளைப் பற்றி சதபதப்ராஹ்மணம் (14.5.2.6 இல்) தெளிவாகக் கூறுகிறது.
இப்போது சப்தரிஷி மண்டலத்தில் உள்ள ஏழு ரிஷிகள் : கஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர்.
இதில் மிகப் பெரிய வானவியல் உண்மையும் ஒளிந்திருக்கிறது. கோடானு கோடி ஆண்டுகளில் நக்ஷத்திரமண்டலங்கள், கிரகங்கள், கிரக மண்டலங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, சுழன்று கொண்டே இருக்கின்றன.
ஆகவே ஒவ்வொரு மன்வந்தரத்திலும் அப்போது யார் வானவியல் ரீதிப்படி இருக்கிறார்களோ அவர்களையே அந்தந்த மன்வந்தரத்திற்கு உரிய ரிஷிகளாகச் சொல்கிறோம்.

மஹாபாரதத்தில் சாந்திபர்வத்தில் (201/26) சப்த ரிஷிகளைப் பற்றிச் சொல்லப்படும் போது அவர்கள் நான்கு திசைகளுக்குமான அதிபதி என உரைக்கப்படுகிறது.
மரீசி, அத்ரி, புலகர், புலஸ்யர், க்ரது, ஆங்கிரஸ், வசிஷ்டர் ஆகிய ஏழு ரிஷிகள் நான்கு திசைகளுக்குமான அதிபதிகள்.
புராணங்களை எடுத்துப் பார்த்தால் இவர்கள் த்வாபர யுகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும்.
இவர்கள் சனி கிரகத்திலிருந்து ஒரு லக்ஷம் யோஜனை தூரத்தில் இருப்பதாக விவரம் தரப்படுகிறது.
புராணங்களில் இன்னொரு விவரத்தையும் காண்கிறோம். இவர்கள் ஏழு குணங்களுக்கு (அல்லது துறைகளுக்கு அல்லது விஷயங்களுக்கு) அதிபதிகள் என்பதை புராணங்கள் கூறுகின்றன.
1) தீர்க்க ஆயுள் சம்பன்னம் 2) மந்த்ர கர்த்தா 3) ஐஸ்வர்யவான் 4) திவ்ய த்ருஷ்டி சம்பன்னம் 5) குணம் 6) வித்யா 7) ஆயுளில் விருத்த மற்றும் ப்ரத்யக்ஷ தர்ம பராயணம் மற்றும் கோத்ர ப்ரவர்தகர்கள்.
ஆகவே பல்வேறு புராணங்களையும் இதிஹாஸங்களையும் முற்றும் கற்று உணர்ந்தவர்களே சிக்கலான கேள்விகளுக்குப் பதிலைச் சொல்ல முடியும்.
ரிக்வேதத்தில் சர்வானுக்ரமணியில் ஏழு ரிஷிகள் ஏழு சூக்தங்களை த்ருஷ்டியில் கண்டவர்கள் என்று சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
1) பரத்வாஜர் 2) கஸ்யபர் 3) கௌதமர் 4) அத்ரி 5) விஸ்வாமித்ரர் 6) ஜமதக்னி 7) வசிஷ்டர் ஆகியோர் இதனால் சப்தரிஷிகள் என்று சொல்லப்படுகின்றனர்.
அதர்வ வேதத்திலும் (6/40/1) சப்தரிஷி மண்டலம் பற்றிய தெளிவான வர்ணனையும் விவரத்தையும் பார்க்கலாம்.
இவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
வானவியல் மர்மங்களையும் அனைத்துப் புராணங்களில் வரும் கால மாறுதல்கள் பற்றியும் நன்கு அறிந்தவர்கள் இந்தக் கூற்றுக்கள் அனைத்தும் உண்மையானவையே என்று அறிந்து பிரமிக்கலாம்.
அமரகோசத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சப்தரிஷிகளைப் பற்றிச் சொல்லப்படுவதைக் காணலாம்.
ரத்னகோசத்திலும் சப்தரிஷிகளைப் பற்றிப் பார்க்க முடிகிறது.
ப்ரம்ஹ ரிஷி – வசிஷ்டர் முதலியவர்கள்
தேவ ரிஷி – நாரதர் முதலியவர்கள்
மஹரிஷி – வியாஸர் முதலியவர்கள்
பரமரிஷி – முனிமேலப்ரப்ருதர்,
காண்டரிஷி – வேத காண்டங்களில் உபதேசம் தருவோர்
ஸ்ருத ரிஷி – பவித்ரமான கதைகளைக் கூறுவோர்
ராஜ ரிஷி – விஸ்வாமித்ரர் உள்ளிட்டவர்கள்
ஸப்த ப்ரம்ஹரிஷி தேவரிஷி, மஹரிஷி, பரம்ர்ஷய: |
காண்டர்ஷிஸ்ச ஸ்ருதர்ஷிஸ்ச ராஜர்ஷிஸ்ச க்ரமாவரா: ||
அடுத்து பத்ம புராணத்தில் (ஸ்வர்க காண்டம் அத்யாயம் 11இல்) மரீசி ப்ர்யா சம்பூதி, அத்ரி ப்ரியா- அனுசூயா, புலஹ ப்ரியா-க்ஷமா, புலஸ்ய ப்ரியா- ப்ரீதி, க்ரது ப்ரியா-சன்னதி, ஆங்கீரஸ் ப்ரியா- லஜ்ஜா, வசிஷ்ட ப்ர்யா-அருந்ததி என ரிஷிபத்னிகள் பற்றிய விவரத்தைக் காணலாம்.
இவர்கள் ‘லோக மாதா’ என அழைக்கப்படுகின்றனர்.
இன்னும் ஏராளமான ரிஷிகள், ரிஷி பத்னிகள் பற்றிய பிரமிக்கும் வரலாறுகளை நமது வேத, இதிஹாஸ, புராணங்களில் காணலாம்.**
Old articles in this blog

https://tamilandvedas.com › tag › சப…
சப்த ரிஷிகளின் ஒரு வருடமானது தேவர்களின் ஏழு வருடங்களுக்குச் சமமாகும் என்று மத்ஸ்ய …
இந்து ரிஷிகள் வெளி நாட்டில் கரடி ஆன கதை! (Post …
https://tamilandvedas.com › இந்த…
2 Sept 2019 — இந்து ரிஷிகள் வெளி நாட்டில் கரடி ஆன கதை! (Post No.6968). Written by London Swaminathan. swami_48@yahoo.com.
· நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் – Tamil and Vedas
· https://tamilandvedas.com › நாம…
·
·19 Aug 2014 — வானில் தெரியும் ஏழு நட்சத்திரங்களான சப்த ரிஷி மண்டலத்தை “கை தொழு எழுவர்” …
· எகிப்திய அதிசயம்- 11 | Tamil and Vedas
· https://tamilandvedas.com › tag › எ…
·
· 27 Feb 2017 — வானில் தெரியும் ஏழு நட்சத்திரங்களான சப்த ரிஷி மண்டலத்தை “கை தொழு எழுவர்” …
சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்! – Tamil and Vedas
https://tamilandvedas.com › சப்த-…
8 Aug 2012 — இதையே பண்டைய காலம் தொட்டு சப்தரிஷி மண்டலம் என அழைக்கிறோம்.மேற்கில் உள்ள …
Saptarishi mandalam – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › saptarishi-mandalam
2 Aug 2013 — Saptarishi constellation (other names: Big Dipper, Ursa Major, Great Bear constellation). All South Indian Temples have special places for …
https://tamilandvedas.com › tag › sap…
28 Sept 2017 — Satapata Brahmana, part of Shukla Yajur Veda, says that women are stars. They mean that women become stars in the sky and lead their husbands to …—subham—