சிவனின் 25, விஷ்ணுவின் 10 வடிவங்கள் (Post.11,718)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,718

Date uploaded in London – –  27 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

முதல் பாடலில் அம்பலவாண கவிராயரை ஆதரித்த மதனவேளின் அருங்குணங்களை வருணித்து நன்றி செலுத்துகிறார் ; வீரம், புகழ், கல்வி, கொடை , செல்வம் முதலியன அவரிடம் உள்ளதை பல உவமைகள் மூலம் எடுத்துரைக்கிறார். வாடாத தாமரை, காட்டில் உலவாத சிங்கம், முழு மதி, மேகம் என்ற உவமைகள் ரசிக்கத்தக்கவை.

அடுத்த பாடலில் திருமாலின் 10 அவதாரங்களை விளம்புகிறார். இறுதியில் சிவ பெருமானின் 25 வடிவங்களை மொழிகிறார்.

விஷ்ணுவின் 10 அவதாரங்களை எல்லோரும் அறிவர் . அதில் பலராமனுக்குப் பதில் புத்தரைச் சேர்த்து அஷ்டபதி செய்தார் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயதேவர் ; அதைக் கவிராயர் விரும்பவில்லை. ஆகையால் புத்தர் இடம்பெறவில்லை. இருப்பினும் கிருஷ்ண பக்தர்கள் இன்றும் சம்பிரதாய பஜனைகளில் புத்தர் அவதாரமடங்கிய அஷ்டபதி பாட்டைப் பாடுகின்றனர். புத்த மதத்தை இந்துமதம் விழுங்கி “சுவாஹா” செய்ததை  சம்ஸ்க்ருத அஷ்டபதி காட்டுகிறது.

சிவனின் 25 வடிவங்களை அவதாரம் என்று சொல்லுவதில்லை; அவர் “பிறவா யாக்கைப் பெரியோன்”. அம்பலவாணர் போல ஒரே பாட்டில் அழகுபட 25 வடிவங்களையும் யாரும் கொடுத்ததில்லை. இது சிவ பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் .

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 97

            97. புகழ்ச்சி

பருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,

     பாரில்மறை யாத நிதியம்,

  பரிதிகண் டலராத நிலவுகண் டுலராத

     பண்புடைய பங்கே ருகம்

கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்

     கானில் உறை யாத சீயம்;

  கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்

     காசினியில் அருமை யாகும்!

தெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,

     சீரிதயம், ஈகை, வதனம்,

  திடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்! இச்

     செகமெலாம் கொண்டா டவே

அருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) இச் செகம் எலாம் கொண்டாட – இவ்வுலகெங்கும் புகழ,

அருள் கற்ப தரு என்ன – அருள் மிகுந்த கற்பகத் தருவைப்போல,

ஓங்கிடும் தானதுரைஆகும் – உயர்ந்த கொடைத்தலைவன் ஆகிய, எமது அருமை தேவனே!,

பருகாத அமுது – உண்ணாத அமுதம், ஒருவர் பண்ணாத பூடணம் –

ஒருவராற் செய்யப்படாத அணிகலம்; பாரில் மறையாத நிதியம் – உலகில் அழியாத செல்வம், பரிதிகண்டு அலராத நிலவு கண்டு உலராத பண்புடைய பங்கேருகம் – ஞாயிற்றைக் கண்டு மலராததும் திங்களைக் கண்டு வாடாததும் ஆகிய தன்மையுடைய தாமரை, கருகாத புயல் – கருநிறம் பெறாது பெய்யும் முகில், கலைகள் அருகாத திங்கள் – கலைகள் குறையாத திங்கள், வெங்கானில் உறையாத சீயம் – கொடிய காட்டில் வாழாத சிங்கம்கருத அரிய இக்குணம் அனைத்தும் உண்டானபேர் காசினியில் அருமையாகும் – நினைவிற்கு எட்டாத இப்பண்புகள் யாவும் உடையவர் இவ்வுலகிற் கிடைப்பது அருமையாகும், (எனினும், இவைகட்கு ஒப்பாக) தெரிய உரை செய்யின் – விளங்க எடுத்துக் கூறினால் (முறையே), மொழி, கீர்த்தி, வருகல்வியொடு, சீர்இதயம், ஈகை, வதனம், திடமான வீரம் இவை என்று அறிகுவார்கள் – உரையும்புகழும், வளரும் கல்வியும், சிறப்புள்ள உள்ளமும், கொடையும், முகமும், அசையாத வீரமும் ஆகிய இவை என்று தெரிந்துகொள்வார்கள்.

     (வி-ரை.) அமுது மொழி, அணிகலம் கீர்த்தி, நிதியம் கல்வி,

பங்கேருகம் இதயம், புயல் ஈகை திங்கள் வதனம், சீயம் வீரம் என ஒப்பிடுக. இங்கு மதவேளின் ஈகைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

xxxxxxxxxxxxxx

       98. திருமால் அவதாரம்

சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்

     சுருதிதந் ததுமச் சம்ஆம்;

  சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்

     சுருட்டிமா நிலம்எ டுத்தே

போமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;

     பொல்லாத கனகன் உயிரைப்

  போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியது

     புனிதவா மனமூர்த் திஆம்;

ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;

     இரவிகுலம் வேர றுத்தோன்

  ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்

     இப்புவி பயந்த விர்த்தோர்

ஆமினிய கற்கிஇனி மேல்வருவ திவைபத்தும்

     அரிவடிவம்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை ………. தேவனே!, முன் சோமுக அசுரனை வதைத்து

அமரர் துயர் கெடச் சுருதி தந்தது மச்சம் ஆம் – முற்காலத்தில் சோமுகன்

என்னும் அசுரனைக் கொன்று வானவர் துன்பங் கெடும்படி செய்து

மறைகளைக் கொண்டுவந்தது மீன் தோற்றம் ஆகும், சுரர் தமக்கு அமுது

ஈந்தது ஆமைஆம் – வானவர்க்கு அமுதளிக்கக் கொண்ட தோற்றம் ஆமை ஆகும், மாநிலம் பாய்போற் சுருட்டி எடுத்தே போம் இரணியாக்கதனை உயிர் உண்டது ஏனம் ஆம் – பெரிய நிலத்தைப் பாயைப் போற் சுருட்டி எடுத்துச் செல்லும் இரணியாக்கன் உயிரைப் பருகியது பன்றி ஆகும், பொல்லாத

கனகன் உயிரைப் போக்கியது நரசிங்கம் – கொடிய இரணியன் உயிரை

ஒழித்தது நரசிங்கம் ஆகும், உலகு அளந்து ஓங்கியது புனித வாமன மூர்த்தி

ஆம் – உலகத்தை (மாவலியிடம் தானம் பெற்று) அளக்க நெடிய

உருக்கொண்டது வாமன வடிவம் ஆகும், இரவிகுலம் வேர் அறுத்தோன் ஏர்

பரசு இராமன் – கதிரவன் மரபை அடியுடன் ஒழித்தவன் அழகிய கோடரி

ஏந்திய பரசுராமன் ஆவான், ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன்

– செருக்கு அடைந்திருந்த இராவணனை வெற்றிகொண்டவன் இரகுமரபிற்

பிறந்த இராமன் ஆவான், இப் புவி பயம் தவிர்த்தோர் வரு பலராமனொடு

கண்ணன் – இவ்வுலகின் அச்சத்தை நீக்கப் பிறந்துவந்தோர் பலராமனும்

கண்ணனும் ஆவர், இனிமேல் வருவது இனிய கற்கி ஆம் – இனிமேல் தோன்றக்கூடியதுஇனிய கற்கி ஆகும், இவை பத்தும் அரிவடிவம் – இவை பத்தும் திருமாலின் உருவங்கள்.

xxxxxx

           99. சிவமூர்த்தி

பிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்

     பெரியன், உயர் வதுவை வடிவன்

  பிச் சாடனன்,காம தகனன்,மற லியைவென்ற

     பெம்மான், புரந் தகித்தோன்,

மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடி

     வௌவினோன், வீரே சுரன்,

  மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்

     வனசரன்,கங்கா ளனே,

விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்தி

     மிக்கசக் கரம்உதவி னோன்,

  விநாயகற் கருள்செய்தோன் குகன்உமை யுடன்கூடி

     மிளிர்ஏக பாதன், சுகன்,

அறிவரிய தட்சிணா மூர்த்தியொ டிலிங்கம்ஆம்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) பிறைசூடி – பிறையணிந்தோன், உமைநேசன் – உமையின்

காதலன் (உமாமகேசன்), விடை ஊர்தி – சேக்கிழான் (இடபவூர்தி),

நடம்இடும் பெரியன் – நடனம் இடும் அண்ணல், உயர் வதுவை வடிவன் –

உயர்ந்த திருமணக் கோலத்தான், பிச்சாடனன் – பிச்சை யெடுப்

போன், காமதகனன் – மாரனை எரித்தோன், மறலியை வென்ற பெம்மான் –

காலனை உதைத்த பெரியோன் புரம் தகித்தோன் – முப்புரத்தை எரித்தவன்,

மறம் மலி சலந்தரனை மாய்த்தவன் – வீரம் நிறைந்த சலந்தரனைக்

கொன்றவன், பிரமன் முடி வௌவினோன் – பிரமன் தலையைக்

கிள்ளினோன், வீரேசுரன் – (வீரபத்திரன்), மருவும் நரசிங்கத்தை மாய்த்த

அரன் (சரபேசுரன்), உமை பாகன் – உமை பங்கன் (அர்த்தநாரீசன்)

வனசரன் – வேடன், கங்காளன் – என்பு அணிந்தோன், விறல் மேவு

சண்டேச ரட்சகன் – வலிமை பொருந்திய சண்டேசருக்கு அருளியவன்,

கடுமாந்தி – நஞ்சுண்டவன், மிக்க சக்கரம் உதவினோன் – (திருமாலுக்கு)

உயர்ந்த சக்கரத்தைக் கொடுத்தவன், விநாயகற்கு அருள்செய்தோன்- மூத்த

பிள்ளையாருக்கு அருளியவன், குகன் உமையுடன் கூடி – முருகன் உமை

ஆகிய இருவருடன் கூடியவன் (சோமாஸ்கந்தமூர்த்தி) மிளிர் ஏக பாதன் –

விளங்கும் ஒற்றைத் திருவடியான், சுகன் – இன்ப வடிவமானவன், அறிவு

அரிய தட்சிணாமூர்த்தியொடு – அறிய இயலாத தக்கிணா மூர்த்தியுடன்,

இலிங்கம் ஆம் – இலிங்கம் ஆகிய ஐயனே – தலைவனே!, அருமை ……..

தேவனே!,

     (வி-ரை.) சிவபெருமான் கொண்டருளிய 25 மூர்த்தி (வடிவம்)

எண்ணிக் காண்க.

To be continued………………………………………….

 tags—சிவன், விஷ்ணு, வடிவங்கள், அவதாரங்கள், சதகம் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: