பிபிசியின் இரத்தக்களரி திட்டம்: லண்டனில் அம்பலம் (Post.11,727)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,727

Date uploaded in London – –  29 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டுரையை எழுதும் லண்டன் சுவாமிநாதன், லண்டன் பி பி சி தமிழோசையில் ஆறு ஆண்டுக்காலம் ஒலி பரப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தவர். பி பி சி டெலிவிஷனில்  வெளியான சில டாகுமெண்டரிகளுக்கு தமிழ் டப்பிங் செய்தவர். தினமணிப் பத்திரிகையில் சீனியர்  உதவி ஆசிரியராக 16 ஆண்டு பணியாற்றியவர். நேற்று இரவு வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் 94 புஸ்தகங்களை எழுதியுள்ளார் . கால்  நூற்றாண்டுக்கு மேலாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார்.

இந்தியாவில் முஸ்லீம்களையும், உலகில் முஸ்லீம் நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராகத்தூண்டி விட்டு மோடியைத் தீர்த்துக்கட்ட பல வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டுள்ளன. இதில் முதல் வெடிகுண்டு FIRST BOMB SHELL  இந்துக்களுக்கு எதிரான பிபிசி-யின் டாகுமெண்டரி ஆகும்; இது முதல் வெடி குண்டுதான் . இன்னும் நிறைய வெடிகுண்டுகளை வெடிக்க பி பி சி போன்ற அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. லண்டனில் உள்ள பி பி சி பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு முன்னால் 29-1-23 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய தேச பக்தர்கள் 200 -க்கும் மேலானோர் பி பி சி-யின் சதித் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தனர்..

மோடியைத் தீர்த்துக்கட்டுவது வெளிநாட்டுச் சக்திகளின் முதல் குறிக்கோள். அப்படி அவர்கள் எதிர்பார்த்தது போல முஸ்லீம்களும் திராவிடங்களும் மார்க்ஸீயங்களும் காங்கிரஸ்கர்களும் இரத்தக் களரியை உண்டாக்காவிடில் வேறு வகையில் 2024 தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்புவது இவர்களுடைய இரண்டாவது குறிக்கோள்.

முதலில் இதற்கான காரணங்களைச்  சொல்லிவிட்டு நான் கண்ட லண்டன் போராட்டத்தையும் சொல்லுவேன்.

1. கிறிஸ்தவ அமைப்புகள் அனைத்துக்கும் மதம் மாற்றுவதற்காக வந்த வெளிநாட்டுப்பண உதவியை மோடி நிறுத்தினார். ராஜா போன்ற ஆடம்பர வாழ்க்கை நடத்திய கிறிஸ்தவ குருமார்களின் குரல்வளையை அது நெறித்தது . அவர்கள் கட்டுக்கடங்கத ஆத்திரத்தில் ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

2. அமெரிக்க தலைமையில் உள்ள  NATO நாட்டோ  நாடுகள் மோடியைக் கெஞ்சியும் மிரட்டியும் பார்த்தன. ஆனால்  உக்ரைன் விஷயத்தில் ரஷியாவுக்கு எதிராகப் பேச மறுத்துவிட்டார். ராகுல் காந்தி போன்ற இத்தாலிய விசுவாசியைப் பதவியில் அமர்த்தினால்தான் அவர்கள் ‘பாச்சா’ பலிக்கும் என்பது மேலை நாடுகளின் கணிப்பு. சுனக் ரவி பிரிட்டிஷ் பிரதமராக இருப்பதால் எல்லாம் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும் என்று எவரும் தப்புக்கணக்குப் போட்டு விடாதீர்கள். பிரிட்டிஷ் ராணுவத்திலும், எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியிலும் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலும் இந்திய விரோதிகள் அதிகம்.

3.மூன்றாவது அசுர சக்தி HUMAN RIGHTS ORGANISATIONS மனித உரிமை அமைப்புகள். இவைகளில் இந்து வி ரோதிகளே அதிகம். காஷ்மீர் படுகொலைகள் முதலியவை பற்றி ஒரு வரி எழுதாத அதி பயங்கர அசுர சக்திகள் அவைகளை நடத்திவருகின்றன. அவைகளும் மோடியைக் குறி வைத்துள்ளன.

4. நான்காவது அசுர சக்தி இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு இங்கு ஒளிந்து கொண்டிருக்கும் அயோக்கிய சிகாமணிகள் ஆவர் . மோடிக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியும் அவர் மசியவில்லை. அவர்களும் மோடியை சாடவே விரும்புகின்றனர்.

5.ஐந்தாவது அசுர சக்திகள் இந்தியாவிலேயே உள்ளன. அந்தக் காலத்திலேயே பிரிட்டிஷாருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிய ஜஸ்டிஸ் கட்சி, திராவிடக் கழகம் , மற்றும் அவ்வப்போது தனித் தமிழ் நாடு பற்றிப் பேசும் பேர்வழிகள், காலிஸ்தானிகள் போன்றோர் வெளிநாட்டு சதிகாரர் களுக்கு  உறுதுணையாக நிற்கின்றனர்.

முஸ்லீம்களை மட்டுமே தூண்டிவிட பி பி சி திட்ட மிட்டது . ஆனால் SURPRISE, SURPRISE சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் ஜே என் யூ JNU போன்ற இடங்களில் உள்ள மார்க்சீய ரவுடிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பி பி சிக்கு ஜே  போட்டுள்ளன.

இந்திய விரோத, இந்து விரோத கும்பலில் பத்திரிகையாளரும் அடக்கம். இந்திராகாந்தி ராஜீவ்  காந்தி போன்றோர் வெளிநாட்டுக்குச்  சென்றால் இரண்டு விமான லோட் LOAD அளவுக்குப் பத்திரிகையாளரும் சென்று கும்மாளம் அடிப்பார்கள் ; அவர்களுக்கு சாவு மணி அடித்தது மோடி அரசு; ஓசி விஸ்கி பாட்டிலை நம்பி வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள் JOURNALIST BEGGARS. அவர்களும் மோடி வெளியேற பிராத்தனை செய்து வருகின்றனர்.

பி பி சி தமிழ்  ஒலி பரப்பு முதலியன இந்திய விரோத சக்திகளால் நடத்தப்படுவதால், நாள் தோறும் இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்கி வருகின்றன.

XXXX

லண்டனில் கிளர்ச்சி

இந்திய தேசபக்தர்கள் 200 பேர் ஞாயிற்றுக் கிழமையன்று 29-1-23 பி பி சி ஒலிபரப்பு கட்டிடத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர் . அன்று பல ரயில் சர்வீஸ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டும் ஆண்களும் பெண்களும் இளைஞர்களுமாக 200 பேர் வந்தது இரண்டு லட்சத்துக்கு சமம். எல்லோரும் பி பி சி யை பகிஷ்கரிக்கவும் பி பி சியை ஒழிக்கவும் கோஷமிட்டனர். அத்தோடு மோடிக்கு ஆதரவான கோஷங்களும், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோஷங்களும் முழக்கப்பட்டன .

மஹாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் பாஞ்ச ஜன்யம் சங்கினை முழங்கியது போல், இருவர் அவ்வப்போது சங்கு முழக்கம் செய்தனர். ஒருவர் பி பி சியே! உன்னுடைய மறைவான ரகசிய திட்டத்தை துணிவாகச் சொல்ல முடியுமா என்ற அட்டையுடன் வந்தார். மற்றொருவர் ஒரு போர்டுடன் வந்து , பிரிட்டிஷ் உள் நாட்டு அரசியல் நாற்றம் எடுக்கிறது; உனக்கு இந்தியா  பற்றி என்ன கவலை? மக்களின் வறுமை நிலையைப் பார் என்று பட்டியல் காட்டினார்.

பிபிசி விஷமம்

பிபிசி விஷமம் செய்வது இது முதல் தடவை அல்ல. இந்திரா காந்தி இந்தக் கழிசடையை இரண்டு ஆண்டுகளுக்குத் தடை செய்து வைத்திருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் ஒரு மந்திரி விஜயத்தை இந்தியா 24  மணி நேரத்தில் ரத்து செய்தது. பம்பாயில் தாராவி சேரிப்பகுதி டாய்லெட்டுகளைக் காட்டி இதுதான் இந்தியா என்று பி பி சி டெலிவிஷன் காட்டியது. உடனே இந்தியா தக்க நடவடிக்கை எடுத்தது.

உள்நாட்டில் பி பி சி செய்யும் அக்கிரமங்களை பி பி சி ஒலிபரப்பாளர்களே புட்டுப் புட்டு வைக்கின்றனர். பெண் ஓளி பரப்பாளர்களின்  மேல்பக்கத்தைக் கவனித்து (மூளை) வேலை கொடுக்காமல் கீழ்பாகத்தை BOTTOM வைத்து வேலை கொடுக்கின்றனர் என்று ஒருவர் தாக்கினார். சார்லஸ்- டயானா குடும்பத்தைப் பிரித்து நாசம் செய்த ஒளிபரப்பு பொய்யான ஜோடித்த விஷயம் என்று இப்போது அம்பலமானதால் பெரிய ஒரு  தொகையை நஷ்ட ஈடாகக் கொடுத்தது.

இவ்வாறு மாதம் தோறும் பி பி சி க்கு எதிரான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்திரா காந்தி போல இந்தியா தக்க நடவடிக்கை எடுத்து அதன் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே இந்தியக் கிளர்ச்சியாளரின் எதிர் பார்ப்பு.

 இவ்வளவு பின்னணியில், போன வரம் நடத்திய சர்வேயில் மோடியும் அவரது பாரதீய ஜனதாவும் அமோக வெற்றி பெறும் என்று வந்த செய்தி, பி பி சி யின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போன்ற செய்தியாகும்.

 இந்திய பத்திரிகைகள் லண்டன் கிளர்ச்சிச் செய்தியை பெரிய செய்தியாக வெளியிடாவிடில் அவர்களை அயோக்கியர்களென்று நாம் இனம் காணலாம். கடவுளும் நல்லதற்கே எல்லாம் செய்கிறார். அயோக்கியர்களை இனம் பிரித்துக் காண இவை உதவுகின்றன. உண்மையே வெல்லும் என்ற நம்பிக்கை உடைய இந்துக்களுக்கு பி பி சி ஒலிபரப்பு , தேவ — அசுர யுத்தத்தின் ஒரு பகுதியே. ரிக் வேத காலத்திலிருந்து அசுரர்களுடன் சண்டை போடும் தேவர்கள், இதுவரை வெற்றியே கண்டு வருகின்றனர்.

 வாழ்க பாரதம் ; வெல்க சத்திய பராக்ரமர்கள் !

—subham—tags- பிபிசி,  இரத்தக்களரி திட்டம் , லண்டனில் அம்பலம், லண்டன் கிளர்ச்சி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: