பிப்ரவரி 2023 காலண்டர்: ஆண்டாள் பொன்மொழிகள் (Post No.11,729)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,729

Date uploaded in London – –  30 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 விழா நாட்கள் – 4/5 தைப்பூசம் 5- வடலூர் ஜோதி  தரிசனம்18- சிவராத்திரி ;  21 ராமகிருஷ்ணர் ஜயந்தி 26 ராகவேந்திரர் ஜயந்தி

பெளர்ணமி -5அமாவாசை -20ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 116

சுப முகூர்த்த தினங்கள்- 31012192324

இந்த மாத நற்சிந்தனை காலண்டரில் ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவையிலிருந்து 28 பொன்மொழிகளைக் காண்போம் :

பிப்ரவரி 1 புதன் கிழமை

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

xxx

பிப்ரவரி 2 வியாழக் கிழமை

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றுநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக

xxxx

பிப்ரவரி 3 வெள்ளிக் கிழமை

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

xxx

பிப்ரவரி 4 சனிக் கிழமை

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

xxx

பிப்ரவரி 5 ஞாயிற்றுக் கிழமை

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!

xxx

பிப்ரவரி 6 திங்கட் கிழமை

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

xxxx

பிப்ரவரி 7  செவ்வாய்க் கிழமை

சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

xxxx

பிப்ரவரி 8 புதன் கிழமை

பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

xxxx

பிப்ரவரி 9 வியாழக் கிழமை

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

xxxx

பிப்ரவரி 10 வெள்ளிக் கிழமை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

xxxx

பிப்ரவரி 11 சனிக் கிழமை

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.

xxxx

பிப்ரவரி 12 ஞாயிற்றுக் கிழமை

மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

xxxx

பிப்ரவரி 13 திங்கட் கிழமை

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

xxxx

பிப்ரவரி 14  செவ்வாய்க் கிழமை

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

xxxx

பிப்ரவரி 15 புதன் கிழமை

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

xxxx

பிப்ரவரி 16 வியாழக் கிழமை

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

xxxx

பிப்ரவரி 17 வெள்ளிக் கிழமை

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

xxxx

பிப்ரவரி 18 சனிக் கிழமை

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

xxxx

பிப்ரவரி 19 ஞாயிற்றுக் கிழமை

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

xxxx

பிப்ரவரி 20 திங்கட் கிழமை

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்

xxxx

பிப்ரவரி 21 செவ்வாய்க் கிழமை

மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா

xxxx

பிப்ரவரி 22 புதன் கிழமை

பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி

xxxx

பிப்ரவரி 23 வியாழக் கிழமை

கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே!

xxxx

பிப்ரவரி 24 வெள்ளிக் கிழமை

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக

xxxx

பிப்ரவரி 25 சனிக் கிழமை

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக

xxxx

பிப்ரவரி 26 ஞாயிற்றுக் கிழமை

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னை

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்.

xxxx

பிப்ரவரி 27 திங்கட் கிழமை

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி!

xxxxx

பிப்ரவரி 28  செவ்வாய்க் கிழமை

கருப்புரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?

திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?

மருப்பு ஒசித்த மாதவன் தன் சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண் சங்கே!

—–subham—–

tags-  ஆண்டாள்,  பொன்மொழிகள், பிப்ரவரி 2023 , காலண்டர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: