
Post No. 11,736
Date uploaded in London – – 1 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அலெக்ஸ்சாண்டர் போப் ALEXANDER POPE என்னும் பிரபல ஆங்கில எழுத்தாளர் எழுதிய ஒரு கட்டுரையில் TO ERR IS HUMAN, TO FORGIVE IS DIVINE = தவறு செய்வது மனித குணம்; அதை மன்னிப்பது தெய்வீக குணம் என்று எழுதினார். இதை பலரும் அடிக்கடி மேற்கோள் காட்டி அவருக்குப் பெருமை சேர்ப்பர். ஆனால் அவருக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே இதை வால்மீகி எழுதியுள்ளார் ; உலகில் தவறு செய்யாதவன் உண்டா? மன்னித்து விடுங்கள் என்கிறான் சுக்ரீவன். அதை வால்மீகி சொற்களில் காண்போம் .
XXX
காட்சி 1
இராமபிரான் :
டேய் லெட்சுமணா ! இங்கே வாடா. இந்த சுக்ரீவன் அக்கினி சாட்சியாக நம்முடன் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்ட்டான் ; ஆளையே காணோமே , என்ன ஆச்சுன்னு கேட்டுட்டு வா
லெட்சுமணன் :
கிர்ர் , குர்ர்ர் , ம்ம்ம்ம் , வ்ர்ர்ர் , ப்ர்ர்ர்ர்
இராமபிரான் :
இந்தோ பார்; இதற்கெல்லாம் கோபப் படக் கூடாது ; அமைதியான முறையில் அழகாகப் பேசிவிட்டுவா
லெட்சுமணன் :
சர்ர் ரி அண்ண் ணா????????????
XXXXX
காட்சி 2
லெட்சுமணன் ஒரு முன்கோபக்காரன். அதுவும் ராமனுக்கு யாரேனும் தீங்கு நினைப்பரோ என்று நினைத்தாலே அவன் பொங்கி விடுவான் . என்ன சொல்லியும் கேட்கவில்லை. அவன் கிஷ்கிந்தை குஹை நகரத்துள் தடால் படால் என்று நுழைந்தான். எல்லா குரங்கு மனிதர்களும் எழுந்து நின்று மிலிட்டரி சல்யூட் MILITARY SALUTE அடித்தனர் . லெட்சுமணன் எடுத்தான் வில்லினை; தொடுத்தான் அம்பினை; அது வானத்தில் பாய்ந்தது. .கிஷ்கிந்தை குஹைகள் பூகம்பம் வந்தது போல நடு நடுங்கின. வாலியின் மனைவி தாரா ஓடிவந்து லெட்சுமணனை சமாதானம் செய்தாள் . அவனை நேரே அந்தப்புரத்துக்கே அழைத்துச் சென்றாள் ; சாதாரணமாகப் பெண்கள் இப்படிச் செய்யமாட்டார்கள். ஆயினும் எமர்ஜென்ஸி EMERGENCY DECLARED என்பதால் அழைத்துச் சென்றாள் ; சுக்ரீவன் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தான்.
XXX
மறப்போம் மன்னிப்போம்
வால்மீகி சொல்கிறார்
அவன் குடிபோதையில் இருந்தான்; அவனது விலை உயர்ந்த மாலையைப் பிய்த்தெறிந்தான் பின்னர் சொன்னான்:–
यदि किञ्चिदतिक्रान्तं विश्वासात्प्रणयेन वा।
प्रेष्यस्य क्षमितव्यं मे न कश्चिन्नापराध्यति।।4.36.11।।
யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாசாத் ப்ரணயே ன வா
ப்ரேஸ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே ந கஸ்ச்சின்னாபராத்யதி 4-36-11
विश्वासात् விசுவாசத்திலோ, प्रणयेन वा அன்பிலோ किञ्चित् கொஞ்சம் கூட अतिक्रान्तं यदि எல்லை மீறவில்லை , प्रेष्यस्य ஒரு வேலைக்காரனை, मे என் தவறுகளை क्षमितव्यम् எஜமானன்) எப்படி மன்னிப்பாரோ அப்படி மன்னிக்க வேண்டுகிறேன், कश्चित् (இந்த உலகத்தில்) எவனாவது ஒருவன் नापराध्यति इति न தவறு செய்யாமல் இருந்திருக்கானா ?
ராமன் மீதான அன்பினில் , விசுவாசத்தில் கொஞ்சமும் பிழை செய்யவில்லை கால வரையரையிலும் எல்லை மீறவில்லை. அப்படிச் செய்திருந்தால் ஒரு வேலைக்காரனை மன்னிப்பது போல என்னுடைய தவறுகளை மன்னித்துவிடுங்கள். இந்த உலகினில் பிழை செய்யாதவர் உண்டா?
உலக இயல்பினை வால்மீகி அருமையாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
XXXX

வள்ளுவனும் இதைச் சொல்கிறான் குறள் 159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்–159
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
மேலும் இரண்டு ஒப்புமை :
1.அக்கினி சாட்சியாக உடன்படிக்கை செய்வது இந்துக்கள் வழக்கம். இன்றும் திருமணங்களில் காண்கிறோம். கோவலனும் கண்ணகியும் வைஸ்ய ஜாதியினர். அவர்கள் தீயை வலம் வந்து கல்யாணம் கட்டியதாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் செப்புகிறார்.
2.அடுத்த ஒப்புமை குறள் 788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. -788
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
வால்மீகி சொல்கிறார் :-
तस्मिन्प्रतिगृहीते तु वाक्ये हरिगणेश्वरः।
लक्ष्मणात्सुमहत्त्रासं वस्त्रं क्लिन्नमिवात्यजत्।।4.36.2।।
தஸ்மின் ப்ரதி க்ருஹீதே து வாக்யே ஹரி கணேச்வரஹ
லக்ஷ்மணாத் சும ஹஸ்த்ராசம் வஸ்த்ரம் க்லின்னாமிவா த்யஜத்
தாரா சொன்ன சமாதான வார்த்தைகளை லெட்சுமணன் ஏற்றுக்கொண்டவுடன் வானர மன்னன் சுக்ரீவன் ஈரத்துணியை ஒருவன் கழற்றி எறிவது போல பயத்தை வெளியே எறிந்தான்.
XXXX
மன்னிப்பது தெய்வீகம்
மனிதன் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது இந்துக்களின் தினசரி வழிபாட்டிலேயே இடம்பெற்றுள்ளது. எல்லா பூஜைகளும் முடிந்தபின்னர் யானிகானிச பாபானி… என்ற மந்திரத்தைச் சொல்லி ஆத்ம ப்ரதக்ஷிணம் (தன்னையே சுற்றிக் கொள்ளல்) செய்வது வழக்கம். பிராமணர்கள் தினமும் 3 முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் பாவ மன்னிப்பு கோரும் மந்திரம் வருகிறது. ஆண்டுதோறும் வரும் உபாகர்மா (ஆவணி அவிட்டம்-பூணூல் மாற்றும் நிகழ்வு) மந்திரத்தில் பாபங்களின் நீண்ட பட்டியல் வருகிறது; பெரிய பாவவங்கள், சின்ன பாவங்கள் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பு கேட்பர். இந்த மாதிரியான அற்புத மந்திரம் உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை.
இந்துமதத்தில் தினசரி பிரார்த்தனையில் இருப்பது அதன் சிறப்பு. எல்லோரும் சொல்லும் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றிலும் “எத்தனை குறைகள்,எத்தனை பிழைகள் எத்தனையடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்” என்று வேண்டுகிறோம்.
—SUBHAM— tags- மன்னிப்பு, தவறு, போப் வால்மீகி , சுக்ரீவன், செய்வது, மனித குணம்