
Post No. 11,737
Date uploaded in London – 2 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புத்திமதி மூன்று வகைப்படும்!
ச.நாகராஜன்
மூன்று வகை புத்திமதி!
உலகத்திலேயே மிகவும் சுலபமான விஷயம் ஒருவருக்கு புத்திமதி வழங்குவது தான்!
உலகத்திலேயே மிகவும் கஷ்டமான விஷயம் கொடுக்கப்பட்ட புத்திமதியை அப்படியே பின்பற்றுவது தான்.
இது உலக வழக்கம் என்றாலும் கூட புத்திமதியை யார் வழங்கவேண்டும் என்பதை நமது ஆன்றோர்கள் நன்கு கூறியுள்ளனர்.
புத்திமதி மூன்று வகைப்படும்.
1) வேதம் தரும் புத்திமதி
2) புராணம் தரும் புத்திமதி
3) காவியம் தரும் புத்திமதி.
வேதம் தரும் புத்திமதியானது குருவானவர் தனது சீடர்களுக்குத் தரும் புத்திமதியைப் போல ஆகும்.
இது பிரபு சம்மிதா எனப்படும்.
புராணம் தரும் புத்திமதியானது நண்பன் ஒருவன் தரும் புத்திமதியைப் போல ஆகும்.
இது சுஹ்ருத சம்மிதா எனப்படும்.
காவியம் தரும் புத்திமதியானது மனைவி கணவனுக்குத் தரும் புத்திமதியைப் போல ஆகும்.
இது காந்தா சம்மிதா எனப்படும்.
யத்வேதாத் ப்ரபுசம்மிதாததிகதம் சப்தப்ரதானாச்சிரம்
யச்சாத்ரப்ரவணாத் புராணவசனாதிஷ்டம் சுஹ்ருத்சம்மிதா |
காந்தாசம்மிதா யயா சரஸதாமாபாத்ய காவ்யஸ்ரியா
கர்தவ்யே குதுகீ புதோ விரசிதஸ்தஸ்யை ஸ்புர்ஹாம் குர்மஹ ||
என்று இதை இப்படி நாயகப்ரகரணத்தில் ப்ரதாபருத்ரீயம் (8) கூறுகிறது.

மூன்று வகை கடன்கள்!
பிறந்த ஒவ்வொருவருக்கும் மூன்று வித கடன்கள் உண்டு.
1) ரிஷிகள்
2) தேவர்கள்
3) பிதிர்
இவர்களுக்கான கடனை எப்படி அடைப்பது? அதற்கும் வழிகள் உண்டு.
ரிஷிகளின் கடனை பிரமசரியம் அனுஷ்டிப்பதன் மூலம் தீர்க்கலாம்.
தேவர்களின் கடனை யாகம் செய்வதன் மூலம் தீர்க்கலாம்.
பிதிர்களின் கடனை ப்ரஜா உற்பத்தி மூலம் தீர்க்கலாம்.
ஜாயாமானோ வை ப்ராஹ்மணா ஸ்தீரி மித்ரர் ருணவான் ஜாயதே ப்ரஹ்மசர்யேண ருஷிப்ய:
யக்ஞேன தேவேப்ய: ப்ரஜயா பித்ருப்ய: |
என்று இப்படி தைத்ரீய சம்ஹிதை கூறுகிறது தைத்ரீய சம்ஹிதை (VI.3.10)
மூன்று வகை ஆசைகள்! மூன்று காரணங்கள்!!
மூன்று ஆசைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு.
1) புத்ரன் – மகனைப் பெற வேண்டும்.
2) வித்தம் (செல்வம்) பணத்தைச் சேர்த்துக் குவிக்க வேண்டும்.
3) லோகம் (உலகியல் ஆசைகள்) உலகில் அனைத்தையும் பெற வேண்டும்.
புத்ரைஷணா ததா வித்தைஷணா லோகைஷணா ததா |
ஏஷணாத்ரயமித்யுக்தம் தத்தி ஸ்யாத் பந்தகாரணம் ||
என்று இப்படி வேதாந்தசம்ஞாவளி (86) கூறுகிறது.
ஏன் இந்த ஆசைகள்?
1) வாழ்வதற்கு!
2) தானம் – கொடுப்பதற்கு
3) பரலோகம் – ஸ்வர்க்கம் அடைய
இதை சரக சம்ஹிதை சூத்ரம் (XI.3) கூறுகிறது.
யாராலும் அறிய முடியாத மூன்று விஷயங்கள்!
உலகில் எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும் சரி, ஒருவரால் அறிய முடியாத விஷயங்கள் மூன்று உண்டு.
1) ஒரு மனிதனின் ஆயுள்.
2) வயது
3) கர்ப்பிணியின் லக்ஷணம்
எவராலும் ஒருவரின் ஆயுளைச் சரியாகக் கூற முடியாது. வயதைக் கூற முடியாது. ஒரு கர்ப்பிணியின் குணாதிசயங்களையும் கூற முடியாது.
ஆயுர்ஞானம் வயோஞானம் கர்பிணீநாம் லக்ஷணம் |
த்ருஷய ஷ்சாபி முக்ராந்தி கிம் புன: மாம்சக்ஷுஷ: ||
இப்படி கௌதம தர்ம சூத்ரத்திற்கான (IX.35) மாஸ்கரி பாஷ்யம் கூறுகிறது.
தர்ம சாஸ்திரங்கள் இப்படிக் கூறும் அரிய ரகசியங்கள் ஏராளம் உண்டு.
இவற்றை அறிந்தால் மனித வாழ்க்கையில் நிம்மதி கிட்டும்.
***