
Post No. 11,738
Date uploaded in London – – 2 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
வால்மீகி ராமாயண கிஷ்கிந்தா காண்டத்தின் முக்கிய ஸ்லோகங்களைக் காண்போம். இந்தக் காலத்தில் நல்ல விஷயங்களுக்கு நல்ல உவமைகளையும் தீய விஷயங்களுக்கு தீய உவமைகளையும் பயன்படுத்துவோம். அந்தக் காலத்தில் அப்படி இல்லை; வாலி அடிபட்டு இறந்துகொண்டிருக்கிறான். அவனை லெட்சுமி போல ஜொலித்தான் என்கிறார் வால்மீகி .
தஸ்ய மாலா ச தேஹச்ச மர்மகாதீ ச யச்சரஹ
த்ரிதேவ ரசிதா லக்ஷ்மீஹீ பதிதஸ்யாபி சோபிதஹ
பொருள்
அந்த வாலியின் மாலையும் திருமேனியும் அவன் மர்ம ஸ்தானத்தைத் தாக்கிய ராமபாணமும் , அ வன் கீழே விழுந்த பின்னரும் கூட மூன்றாக வகுத்து அமைக்கப்பட்ட செளந்தர்ய லக்ஷ்மீ போல சோபித்தான் .
என் கருத்து
இந்திய பெண்களின் சிலைகள் , விக்ரகங்களை ஆராயும் மக்கள் பிறநாட்டுப் பெண்கள் சிலைகளிலிருந்து எளிதில் வேறுபடுத்த இரண்டு விஷயங்கள் உதவும்.
1. இந்தியப் பெண்கள் , கிரேக்க, எகிப்திய பெண்கள் போல நேராக நிற்க மாட்டார்கள் . அவர்கள் த்ரி பங்க — மூன்று வளைவுகளுடன் —நிற்பார்கள் . இதை எல்லா அம்மன் விக்ரகங்களிலும் காணலாம். வால்மீகியும் இந்த ‘த்ரி பங்க’ நிலையில் வாலியின் உடல் இருந்ததைக் கண்டார் போலும்.
2. இந்தியப் பெண்களின் உடலில், தலை முடி முதல் கால் அடி வரை நகைகள் இருப்பதைக் காணலாம். எகிப்தில் கூட உடலின் மேல்பாகத்தில் மட்டுமே பெண்களின் நகைகளைக் காண முடியும் .
XXXX
பஹுமான்ய ச தம் வீரம் வீக்ஷமாணம் சனைரிவ
லக்ஷ்மணானுகதோ ராமோ ததர்சோப ஸஸர்ப ச
மெள்ள உன்னிப்பாக நாற்புறமும் கவனித்த அந்த வீரனான வாலியை, பெறுமதிப்புடன் பார்த்த ராமர், லக்ஷ்மணன் பின்தொடர, அவனை நெருங்கி வந்தார் .
XXX

தம் த்ருஷ்ட்வா ராகவம் வாலி லக்ஷ்மணம் ச மஹாபலம்
அப்ரவீத் ப்ரச்ரிதம் வாக்யம் பருஷம் தர்ம ஸம்மிதம்
பலசாலிகளான ராமனையும் லக்ஷ்மணனையும் பார்த்து தர்மத்தோடு இணைந்ததும் , கடுமையானதுமான வார்த்தைகளை வணக்கத்தோடு மொழிந்தான்
XXXX
யுக்தம் யத் ப்ராப்னுயாத் ராஜ்யம் ஸு க்ரீவஸ் ஸ்வர்க்தே மயி
அயுக்தம் யத தர்மேண த்வயாஹம் நிஹதோ ரணே
நான் வானுலகு சென்றதும் சுக்ரீவன் நாட்டை அடைவது நியாயமானதே. ஆனால் நான் வேறு ஒருவனுடன் போரிடுகையில் உன்னால் தவறான மு றையில் கொல்லப்பட்டது நியாயமாகாது .
என் கருத்து
1.வாலி, தான் ஸ்வர்கத்துக்குப் போவதாக சொல்வது குறிப்பிடத்தக்கது ; போரில் இறந்த வீரர்கள் சொர்கத்துக்குப் போவார்கள் என்பது பகவத் கீதையிலும் புற நானூற்றிலும் உள்ளது .
2.இரண்டாவது, யுக்தம் , அயுக்தம் என்று எதுகை மோனையுடன் கவி இயற்றுகிறார் முனிவர்.
3. மூன்றாவது, எங்கேயாவது நாட்டை ராமன் அபகரித்துவிடுவானோ என்ற அச்சத்தில் தனக்குப் பின்னர் சுக்ரீவனும் அதற்குப் பின்னர் அங்கதனும் ஆள வேண்டும் என்றும் வேண்டுகிறான். ஆனால் ராமன் எந்த நாட்டையும் அபகரிக்காமல், சந்தேகத்துக்கு இடமேயன்றி, சுக்ரீவனையும் பின்னொரு கட்டத்தில் விபீஷணனையும் மன்னன் ஆக முடி சூட்டுகிறான் . உலகில் அமைந்த முதல் FIRST EXILE GOVERNMENT IN THE WORLD வெளிநாட்டு அரசு விபீஷண அரசு ஆகும்.
4.இது ராமனுடைய குணம் மட்டும் அன்று; சூரிய வம்ச மன்னர் அனைவரின் குணமுமாம் . காளிதாசனின் அற்புதமான ரகு வம்ச காவியத்தில் முதல் 20 ஸ்லோகங்களுக்குள் ரகு வம்ச மன்னர்களின் அபூர்வ குணங்களின் பட்டியலைத் தருகிறான் . அதில் ஒன்று- அவர்கள் வீரத்தைக் காட்டவே பிற நாடுகளின் மீது படையெடுப்பார்கள்; நாட்டை ஆக்கிரமிக்க அல்ல என்கிறான் . இதை அலெக்சாண்டர் கதையிலும் காணலாம். தோற்றுப்போன புருஷோத்தமன் (ALEXANDER Vs PORUS) என்ற மன்னரிடம் அலெக்ஸ்சாண்டர் உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்ட போது என்னை மன்னனாக நடத்த வேண்டும் என்று கம்பீரத்துடன் சொல்லவே, அவனிடமே அலெக்சாண்டர் நாட்டைக்கொடுத்து விடுகிறான்.
ஆனால் பிற் காலத்தில் சண்டையிட்ட சங்கத் தமிழ் மன்னர்கள் உள்பட அனைவரும் எதிரிகள் நாட்டை அடியோடு அழித்து விட்டனர். அதனால் நமக்கு வரலாற்றுச் சான்றுகளே இல்லாமற் போய்விட்டன..
XXXXX
தம் நிஷ் ப்ரபம் இவம் ஆதித்யம் முக் தோயம் இவம் அம்புதம்
அதி க்ஷிப்தஸ் ததா ராமஹ பச்சாத் வாலிமப்ரவீத்
ஒளியிழந்த சூரியனையும் நீரை இழந்த மேகத்தையுமொத்த அந்த வாலியைப் பார்த்து, கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்ட ராமர் பிறகு கூறினார் :—
ஸூ க்ஷ் ஷமஹ பரம துர்ஜ்ஞேய ஹ ஸதாம் தர்ம ப்லவங்கம
ஹ்ரு திஸ்த ஹ ஸர்வ பூதானாமாத்மா வேத சுபாசுபம்
வானர வீரனே ! பெரியோர்களின் தர்ம நெறி மிக நுட்பமானது புரிந்து கொள்ளுவதற்கு மிக அரியது
எல்லோருடைய உள்ளத்தில் உறையும் பரமாத்மா ஒருவரே நன்மை தீமைகளை உள்ளபடி உணர்வார்.
இதுதான் மிக முக்கியமான ஸ்லோகம் . வாலி செய்த தவறு எல்லோருக்கும் தெரியும். பிறன் மனைவியை அபகரித்தான். தம்பிக்கு உரிய பங்கினை அளிக்காமல் நாட்டை விட்டே விரட்டினான். இது போன்ற பல கட்டங்கள் மஹாபாரதத்திலும் நவீன உலகிலும் வருகின்றன. முடிவு நன்றாக இருந்தால் அதற்கு முன்னர் நடந்த அக்கிரமச் செயல்களை யாரும் கண்டுகொள்வதில்லை .
END JUSTIFIES MEANS
வள்ளுவனும் ஆதிசங்கரரும் கூட பொய் சொல்லலாம் ; ஆனால் அது புரை தீர்த்த நம்மை பயக்கும் எனின் என்பர். முடிவு நன்மையாக இருக்குமானால் பொய் சொல்லலாம் என்பது அவர்கள் தீர்ப்பு
XXX
வயம் து பரதா தேசம் விதிம் க்ருத்வா ஹரீ ச்வர
த்வத் விதான் பின்னமர்யாதான் நியந்தும் பர்யவஸ்திதாஹா
வானரர்தம் தலைவா ! பரதனது ஆணையை என் பணியாக ஏற்று யாம், தர்ம வரம்பை மீறும் உன்னைப் போன்றவர்களை அடக்கும் செயலில் ஈடுபட்டுள்ளோம் .
இது பின்னர் நடக்கப்போகும் ராவணன் வதத்துக்கும் பொருந்தும் . என் மனைவி, உன் மனைவி கடத்தப்பட்டாள் என்பது மட்டுமல்ல. பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் என்பதே அரசாங்கத்தின் அணுகுமுறை
XXXX
அமெரிக்க அணுகுண்டு AMERICAN ATOM BOMBS
இரண்டாவது உலக மஹா யத்தத்தில் ஒன்றுமே அறியாத அப்பாவி புத்த- ஷிண்டோ மத மக்கள் தலையில் இரண்டு அணுகுண்டுகளைப் போட்டு 20 லட்சம் பேரை நொடிப்பொழுதில் படுகொலை செய்தது அமெரிக்கா . யாராவது அந்தப் படுகொலையைக் கண்டித்தார்களா ? சம்பந்தப்பட்டவர்களை உலக கோர்ட்டில் வழக்குத் தொடுத்து சிறையில் அடைத்தார்களா ? அட, ஹிட்லர் வாழும் ஜெர்மனி மீது அணு குண்டு போட்டு கிறிஸ்தவர்களையும் அங்கு வாழும் பிற மக்களையும் அல்லவா கொன்றிருக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்களா ? இல்லையே. அதாவது முடிவுதான் முக்கியம்; வழி முறைகள் பிழையாக இருக்கலாம் என்பதே வாதம்
ஒசாமா பின் லாடனை , சட்ட விரோதமாக வேறு ஒரு நாட்டில் அமெரிக்க ஏஜெண்டுகள் கொல்கிறார்கள் ; அதை அமெரிக்க அதிபர் ஒபாமா வாயில் ஈ புகுந்தது தெரியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதை சட்ட விரோதமான கொலை என்று எவரும் சொல்லவில்லையே. பிரிட்டிஷ் பார் லிமெண்ட்டில் பொய் சொல்லி டோனி பிளேர் இராக் மீது படை எடுத்து ஸதாம் ஹுசைனைக் கொன்றார். இப்போது அவர் சொன்னது பொய் என்று அம்பலமாகியும் அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லையே. ஆகவே மஹாபாரதம், ராமாயணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்றும் என்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்.
உலகம் முழுதும், குற்ற வழக்குகளில் நீதிபதிகள் குறைவான, வினோதமான தண்டனைகளை வழங்குகின்றனர். அதை விமர்சனம் செய்யக்கூட நமக்கு உரிமை இல்லை. அப்படிச் செய்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கில் நாம் தண்டிக்கப்படுவோம்.
இதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வால்மீகி ராமாயணத்துக்குச் சென்றால், அங்கு வாலியே ராமனைப் புகழ்ந்து நீ செய்தது சரியே என்று சொல்லிவிடுகிறார். வால்மீகி போன்ற மஹரிஷிகள் பொய்யா சொல்லுவார்கள் ?
–சுபம்—
tags — வாலி, ராமன், கேள்வி, பதில், கிஷ்கிந்தா ,