வாரியார் சொன்ன பட்டினத்தார் கதை: ரமாவும் உமாவும் (Post. 11743)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,743

Date uploaded in London – –  3 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

நீண்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசங்களை செவிமடுத்தேன் . அந்தக் காலத்தில் நேரில் கேட்டேன் . இப்பொழுது யூ டியூபில் You Tube கேட்டேன் .

வாரியார் அவர்கள் எந்த ஒரு பெரிய கருத்தையும் சுவைபடச் சொல்ல வல்லவர். இதோ அவர் சொன்ன குட்டிக்கதை.

பெரும் செல்வந்தரான பட்டினத்தார், செல்வம் அனைத்தையும் துறந்து ஊருக்கு வெளியேயுள்ள வயல் வெளியில் துறவற வாழ்க்கை நடத்தி வந்தார் . வயல் வரப்பையே தனக்குத் தலையணையாக (தலகாணி) பயன்படுத்தி எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். ஒரு நாள் அந்தப் பக்கமாக ரமா , உமா என்ற இரண்டு பெண்கள் தண்ணீர் கொண்டு வருவதற்காக அருகிலுள்ள கிணற்றை நோக்கி நடந்து கொண்டிருந்தனர் . ரமாவும் உமாவும் பட்டினத்தாரைப் பார்த்துவிட்டனர்.

XXXX

காட்சி 1

ரமா ; ஏய் , உமா, பாரடி ! அங்கே பாரடி ! எவ்வளவு பெரிய பணக்கராரராக இருந்தவர் எப்படித் துறவறம் ஏற்று வயல் வெளியில் படுத்திருக்கிறார், பாரடி ; இவர் அல்லவோ முற்றும் துறந்தவர் .

உமா : அதெல்லாம் சரிதான்; ஆளுக்கு இன்னும் பக்குவம் போதாது. நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இவர் 70 சதவிகிதம்தான் துறவி .

ரமா : என்னடி இப்படி வாய் கூசாமல் பெரிய துறவியை மட்டம்தட்டுகிறாயே .

உமா – அது இல்லடி; உலகத்தையே துறந்த வருக்கு தலையணை தேவையா ? ஏன் வரப்பைத் தலையணையாகப் பயன்படுத்த வேண்டும்?

ரமா : போடி , நீ எதைச் சொன்னாலும் வாதம் செய்வாய்.; வா, வா போய் தண்ணீர் எடுத்துவருவோம்.

காட்சி 2

பெண்களின் பேச்சைக் கேட்ட பட்டினத்தாருக்கு அவர்கள் சொல்லுவது சரியென்று பட்டதால். வயல்  வரப்பினை விட்டு நிலத்தில் தலைக்கு அணைப்பு எதுவுமின்றி படுத்துக்கொண்டார். அரை மணி நேரத்துக்குப் பின்னர் இருவரும் தண்ணீர் குடங்களுடன் அதே பாதையில் திரும்பிவந்தனர்.

ரமாவுக்கு ஒரே அதிசயம்

ரமா : ஏய் , உமா பாரடி ; நீ சொன்ன பேச்சைக்கேட்டு ஆள் தலையணை தேவையில்லை என்று நிலத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறார் பாரடி ; இப்போதாவது ஒத்துக்கொள் ; இவர் முற்றும் துறந்த

முனிவர் என்பதை .

உமா: அடிப்  பைத்தியக்காரி!

உனக்கு உலகமே தெரியல்ல, பாரு .

இன்னும் முழுத் துறவி ஆவதற்கு ஒரு degree டிகிரி பாக்கி இருக்கு.

ரமா :என்னடி இப்படிச் சொல்லலறே ?

உமா : பின்ன என்னடி? இந்தப் பக்கம் போய்  வரும் பெண்களின் அரட்டைக்  கச்சேரிகளைக் கேட்கும்— பெண்களின் பேச்சைக் காது கொடுத்து உன்னிப்பாகக் கேட்கும் — ஆளை எப்படியடி முழுத்துறவி என்று சொல்லுவது?

காட்சி 3

இதைக் காதில் கேட்ட பட்டினத்தார் ஓடிவந்து அவர்கள் காலில் விழுந்து, “தாயே நீங்கள் ராஜ ராஜேஸ்வரி ; தேவியின் வடிவங்கள் ; எனக்குப் பூரண ஞானத்தை உபதேசித்து அருளினீர்கள் – என்கிறார்.

இருவரும் அவரவர் வழியே செல்ல காட்சி முடிந்தது; திரையும் விழுந்தது

Xxxxx

என் கருத்து

இது போன்ற விஷயங்களை மாணவ, மாணவியர் நாட்டிய அல்லது நாடகமாக நடித்துக் காட்ட வேண்டும். அத்தோடு பட்டினத்தாரின் பாடல்களையும் பயன்படுத்தலாம் .

ராம கிருஷ்ண பரமஹம்சர் இதே விஷயத்தை வேறு ஒரு கதை மூலம் விளக்குகிறார். முன்னரே எழுதியதால் மிகவும் சுருக்கமாக இதோ:

ஒரு ஜோடி கணவனும் மனைவியும் துறவற வாழ்க்கை நடத்தப் போய்க்கொண்டு இருக்கின்றனர் ; திடீரென கீழே பூமியில் ஒரு வைரக் கல் Diamond Stone  விழுந்து கிடப்பதைக் கணவன் பார்த்துவிட்டான். பெண்களுக்கு வைரம் என்றால் உயிர் ஆயிற்றே Diamonds are Girls’ Friend; அதைப் பார்த்தால் அவளுக்கு ஆசை வந்துவிடப் போகிறதே என்று கணவன் , அவசரம் அவசரமாகக் காலால் மணலைத் தள்ளி அதை மூடுகிறான் . இதை ஓரக் கண்ணால்  பார்த்துவிட்ட அவன் மனைவி பெரிதாகச் சிரிக்கிறாள். அவன் காரணத்தை வினவியபோது, அவள் கேட்கிறாள்? ஏன் அந்த வைரத்தை காலால் மூடினீர்கள்? அவனும் தான் எண்ணியத்தைச் சொல்லுகிறான். உமக்கு இன்னும் பூரண ஞானம் வரவில்லையே! கல்லுக்கும் வைரத்துக்கும் இன்னும் வித்தியாசம் தெரிகிறதே! சமலோஷ்ட காஞ்சனஹ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் இரண்டு ஸ்லோகங்களில் சொல்லியிருக்கிறாரே 6-8; 14-24; அதையே

ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான பராபரமே என்று தாயுமானவர் பாடி, யோகிக்கு இலக்கணம் ஓட்டையும் தங்கத்தையும் ஒன்றாகக் காண வேண்டும் என்று சொன்னாரே; பெரிய புராணம் பாடிய  சேக்கிழாரும்  பகவத்  கீதைப்  பாடலை எதிரொலிக்கும் வண்ணம்

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் என்று சொன்னாரே; நீவீர் அறியவில்லையா? என்று  சொன்னவுடன் கணவன் வெட்கத்தால் தலை குனிந்தான்; மனைவி மூலம் ஞானோதயம் பெற்றான்

–சுபம்–

XXXX

நான் எழுதிய பழைய கட்டுரைகள்:–

பட்டினத்தார் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

13 Oct 2017 — பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது: ‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’.

பட்டினத்தார் பாடல் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

பட்டினத்தார் பாடல்களிலிருந்து முக்கிய 31 மேற்கோள்கள் இந்த அக்டோபர் மாத காலண்டரை …

பட்டினத்தாரின் 31 முக்கிய பாடல்கள் – Tamil and Vedas

https://tamilandvedas.com › பட்ட…

·

29 Sept 2014 — ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே. அக்டோபர் 17 வெள்ளிக் கிழமை ஆரூரர் …

பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1 | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

6 Jan 2017 — Tagged with பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1. ‘இருப்பது பொய், போவது மெய்’ –பட்டினத்தார் …

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை (Post No …

https://tamilandvedas.com › பட்ட…

10 Jan 2017 — எல்லோருக்கும் தெரிந்த பஞ்சதந்திரக் கதையைக் கூட அவர் ஆன்மீகச் செய்தியைப் …

‘கையொன்று செய்ய, விழியொன்று நாட …

https://tamilandvedas.com › கைய…

24 Apr 2017 — Tamil and Vedas · ‘கையொன்று செய்ய, விழியொன்று நாட’- பட்டினத்தார் பாடல் (Post No.3846).

பட்டினத்தாரும் பம்பர விளையாட்டும்! (Post No.3563)

https://tamilandvedas.com › பட்ட…

21 Jan 2017 — Written by London swaminathan Date: 21 January 2017 Time uploaded in London:- 9-17 am Post No.3563 Pictures are taken from different sources …

விலைமாது – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

10 Jan 2017 — Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com. பட்டினத்தார் பாடல் எளிமையான …

‘தாதி மனம் நீர்க்குடத்தே தான்’: பட்டினத்தாரும் …

https://tamilandvedas.com › தாத…

9 Jan 2017 — Written by London swaminathan Date: 9 January 2017 Time uploaded in London:- 9-35 am Post No.3528 Pictures are taken from different sources; …

பட்டினத்தார் கேள்வி யார் கொலோ சதுரர் …

https://tamilandvedas.com › tag › ப…

28 Jan 2017 — Written by London swaminathan. Date: 28 January 2017. Time uploaded in London:-9-50 am. Post No.3585. Pictures are taken from different …

—-

TAGS- பட்டினத்தார், ஞானோதயம், பெண்கள் பேச்சு, ஓடும் பொன்னும் , சமலோஷ்டன காஞ்சன, வாரியார் கதை

     
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: