பாரத தேசத்தில் கப்பல் கட்டும் கலை! (Post No.11,753)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,753

Date uploaded in London –  7 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 பாரத தேசத்தில் கப்பல் கட்டும் கலை!

ச.நாகராஜன்  

பாரத தேசத்தில் கப்பல் கட்டும் கலை புராதன கலைகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது.

 வர்ணாசிரம தர்மத்தில் பிராமணர், க்ஷத்திரியர்,  வைசியர், சூத்ரர் என்று நான்கு வர்ணங்கள் இருந்தது போலவே மரங்களிலும் இப்படி நான்கு வகைகள் இருந்தன.

வர்ண சங்க்ரஹம் எனப்படும் கலப்பு வர்ண மரங்களும் உண்டு.

மிக நீண்ட கடினமான கடல் பயணங்களுக்கு க்ஷத்திரிய மரம்  பொருத்தமானதாக இருந்தது.

ஒரு கப்பலின் நீளம் 180 அடி, அகலம் 90 அடி, ஆழம் 90 அடி!

இன்னொரு கப்பல் 700 பயணிகளைச் சுமந்து சென்றது.

இன்னொரு கப்பலோ 800 பயணிகளை ஏற்றிச் சென்றது.

திடமான இருக்கை (Rocking Seat) என்ற ஒரு இருக்கை விசேஷமாக அமைக்கப்பட்டிருந்தது. இதில் உட்கார்ந்தால் ஆழ்ந்த அலைகடலில் சீறுகின்ற அலைகளால் கப்பல் அலைப்புண்டாலும் உட்கார்ந்தவர் விழ மாட்டார். கடலில் பயணப்படுவதால் வரும் கடல் வியாதியும் ஏற்படாது.

வங்காளத்தில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஒரு கப்பல் கட்டும் தளத்தைக் கொண்டிருந்தது.

1781ஆம் ஆண்டு முதல் 1850ஆம் ஆண்டு முடிய 19 ஆண்டுகளில் 35 கப்பல்கள் 17020 டன் எடை கொண்டவையாக கட்டப்பட்டன. கல்கத்தாவில் ஹூக்ளியில் கட்டப்பட்ட இவற்றின் சரசரி எடை 5000 டன்கள் எனக் கொள்ளலாம்.

பிரெஞ்சுக்காரரான எஃப். சால்வின்ஸ் (F.Solvyns) என்பவர் தனது புத்தகமான லெஸ் ஹிந்துஸ்’ (‘Les hindous’) என்ற 1811 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில், “ஹிந்துக்கள் கப்பல் கட்டும் கலையில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். இன்றைய ஹிந்துக்களும் கூட ஐரோப்பியர்களுக்கு சிறந்த வடிவமைப்புகளைத் தர முடியும். கப்பல் கட்டுவதில் பல புதிய முன்னேற்றங்களை ஐரோப்பியர்கள் ஹிந்துக்களிடமிருந்து கடன் வாங்கினர்.  இந்திய கப்பல்கள் அழகுடன் பயன்பாட்டுத் தன்மையை ஒருங்கிணைத்து நேர்த்தியான வேலைப்பாடு கொண்டவையாக அமைந்திருந்தன.” என்கிறார்.

அவர் மேலும் எழுதுகையில் தெரிவிப்பது:-

“இந்திய கப்பல் கட்டும் கலையானது 1840ஆம் ஆண்டு முதல் சீரழிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மகுடத்தின் பேரால் அது அழிக்கப்படலாயிற்று”.

சர் ஜான் மால்காம் (Sir John Malcolm) என்பவர் ஏஷியாடிக் சொஸைடி இதழில்  (Journal of Asiatic Society) எழுதுகிறார் இப்படி:-

“இந்திய கப்பல்கள், ஐரோப்பிய விஞ்ஞானம் ஒரு புதிய மேம்பாட்டையும் தர முடியாதபடி வெகு நேர்த்தியாக கட்டப்படுகின்றன.

மார்க்கோபோலோ என்ற வரலாற்று பிரசித்தி பெற்ற கடல் பயணி, இந்திய கப்பல் கட்டும் திறமைக்குச் சான்றிதழ் அளிக்கிறார். 300 பேர் செலுத்தினால் கடலில் செல்லும்படி அமைக்கப்பட்ட கப்பல்களை அவர் பார்த்து வியந்தார். கப்பலின் அடிப்பாகங்கள் ஒரு புதிய வடிவமைப்பால் நீடித்து இருக்கும்படி செய்யப்பட்டன. இவை பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் மரக்கட்டைகள் வெகு நேர்த்தியாகப் பொருத்தப்பட்டிருந்ததால், ஏதேனும் ஒரு சமயம் கடல் நீர் அதற்குள் புகுந்து ஒழுக ஆரம்பித்தால் ஒரு அடுக்கில் உள்ள ஒழுகல் இன்னொரு அடுக்கிற்குச் செல்ல முடியாதபடி அவை வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தன.

இல்லஸ்ட் ரேடட் வீக்லி (The Illustrated Weekly) தனது கட்டுரையில் தெரிவிப்பது இது :

“இந்திய கப்பல்களின் உயரிய தரமானது அதைச் செலுத்தும் மாலுமிகளின் திறமையையும் தைரியத்தையும் போலவே இருந்தது. அவை மலபார் தேக்கு மரங்களால் கட்டப்பட்டிருந்தன.  உலகில் மிக வலிமையானதாகவும் நீடித்து நெடுங்காலம் இருக்கக் கூடியதாகவும் உள்ளவை அவை மட்டுமே. பிரிட்டிஷ் கடற்படையில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கப்பல்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் இந்திய கப்பல்களோ நூறு ஆண்டுகளுக்கு மேலானாலும் அப்படியே இருந்தன.  ஒரு பழம் பெரும் கப்பல் 125 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அப்படியே இருந்தது.  ஸ்காண்டிநேவியாவில் இன்றும் கூட 100 ஆண்டுகள் பழமையான ஒரு இந்திய கப்பல் ஓடிக் கொண்டிருக்கிறது. வியத்தக்கும் இவற்றின் வலிமை ஒரு புறமிருக்க, இவை மிகவும் விலை குறைவானவை.  நெல்ஸனின் கடற்படையில் உள்ள கப்பல்களில் இருந்த தேக்கு இரண்டு அடி கனம் உடையவை. அவை குண்டுகளால் துளைக்கப்பட முடியாதவை. என்றாலும் கூட அவை வேகமாகச் செல்லும்படி எடை குறைந்தவை.  ‘பஞ்சாப்’ (The Punjab) என்ற இன்னொரு இந்தியக் கப்பல் அதி வேகமாகச் செல்லும் ஒரு கப்பல். அது ஒரு சமயம் சிங்கப்பூர்- ஹாங்காங்கில் ஓடும் நீராவிக் கப்பலை அது வேகத்தில் தோற்கடித்தது.

இந்தியாவில் மஹாபாரத காலத்தில் இயந்திரங்கள் மூலம் செல்லும் கப்பலகளும் இருந்தன.

நன்றி : ட்ரூத் ஆங்கில வார இதழ் தொகுதி 84 இதழ் 14 தேதி : 15-7-2016

இந்தக் கட்டுரை தொகுதி 11 இதழ் 19 தேதி 20-8-1943 இதழில் வெளியான கட்டுரையின் மறு பிரசுரம் ஆகும்.

Sincere Thanks to Truth, a Kolkata Weekly

***

tags- கப்பல், கட்டும் கலை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: