உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 3 (Post No.11,759)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,759

Date uploaded in London –  9 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 3

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஆரோக்கிய மாத இதழான ஹெல்த்கேர் பத்திரிகையில் பிப்ரவரி 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

How Food Powers Your Body

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 3

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)

தமிழில் : ச.நாகராஜன்

நாம் உண்ணும் உணவு கூட அணுக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது!

க்ரெப்ஸ் சுழற்சி மூலமாகவே, உண்ணும் உணவிலிருந்து நாம் ஆற்றலைப் பெறுகிறோம். இந்த சுழற்சி எப்படி வேலை செய்கிறது என்பதை உணர வேண்டுமானால், உணவு எதனால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுதல் பயனளிக்கும். 

பிரபஞ்சத்தில் மற்ற அனைத்தும் எப்படி இருக்கிறதோ அதே வண்ணம், நாம் உண்ணும் உணவும் கூட அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு அணு என்பது நியூக்ளியஸ் எனப்படும் உட்கருவைக் கொண்ட சூரிய மண்டல அமைப்புப் போன்றதேயாகும். சூரியனை கிரகங்கள் சுற்றி வருவது போலவே எலக்ட்ரான்கள் நியூக்ளியஸைச் சுற்றுகின்றன. (ஆனால் உண்மையில், க்வாண்டம் மெக்கானிக்ஸின்படி, எலக்ட்ரானானது எந்தக் கணத்தில் எங்கு இருக்கிறது என்பதை உங்களால் சரியாக அறியவே முடியாது – ஆகவே இந்த சுற்றுப்பாதை என்பது நிரந்தரமான ஒரு பாதையைக் கொண்டிருக்கிறது என்று சொல்வதை விட மேகங்கள் போல சாத்தியமான இடங்களில் இது இருக்கும் என்றே சொல்லலாம்.) ஒரு அணுவுக்குள் ஒன்றோ அதற்கு மேற்பட்ட பல எலக்ட்ரான்களோ இருக்கலாம்; அவை ஒரு குறிப்பிட்ட மாதிரியான தூரங்களில் சுற்றி வலம் வருகின்றன. அவற்றை இரசாயன வல்லுநர்கள் சுற்றுப்பாதைக் கூடு (ORBIT SHELL) என்று சொல்கின்றனர்.

ஒரு முற்றுப்பெற்ற எண்ணாக இருக்கும் எலக்ட்ரான்களே ஒரு சுற்றுப்பாதைக் கூட்டை எந்த ஒரு நேரத்திலும் கொண்டிருக்க முடியும்; முதல் கூட்டில் இரண்டு, இரண்டாம் கூட்டில் எட்டு, மூன்றாவதில் 18, நான்காவதில் 32 என்று இப்படி – பீரியாடிக் டேபிளில் எப்படி வரிசைகள் இடப்பட்டு ஒரு ஒழுங்குமுறை அமைப்பைக் காட்டி விவரிக்கிறதோ அதே போல இருக்கும்.

இரசாயான இயல் மொத்தமுமே, முழுவதும் நிரப்பட்ட கூடுகள் இல்லாத எலக்ட்ரான்கள் குறைந்த அளவே நிலைத்திருக்கும் தன்மையைக் கொண்டிருக்கும் – (அதிலும் குறிப்பாக அவை நியூக்ளியஸிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் போது) என்ற உண்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது! அதாவது ஒரு எலக்ட்ரானானது தனது வீட்டிலிருந்து அதிக தூரத்தில் சுற்ற முடியாது என்பது போல இது உள்ளது.

ஒரு அணுவுக்குள் அவ்வப்பொழுது ஏதோ ஒன்று மோதுகிறது. அது ஒரு போடான் என்றால் – லேசான அணுத்துகள் – அப்போது மோதுகின்ற இடத்திலிருந்து  ஆற்றலானது நியூக்ளியஸிருந்து அதிக தூரத்தில் உள்ள அணுவின் எலக்ட்ரான்களை சுற்றுப்பாதையில் தட்டுகிறது.

இந்த “அதி-ஆற்றல்” எலக்ட்ரான்கள் ஒரு கோப்பையின் மூடியில் உள்ள பளிங்கு போல – அவை தமது மறைந்திருக்கும் ஆற்றலை தங்களது கீழே இருக்கும் நடுப்பகுதியில் விட்டுவிட விரும்புவது போல, அல்லது இன்னொரு அணு அருகில் இருந்தாலோ, கோப்பை நிறைந்து தளும்பி விடுவது போலச் செயல்படும்.

எப்படி அது விழப்போகிறது என்பது ஒவ்வொரு அணுவின் துல்லியமான சமச்சீர்தன்மை எவ்வளவு நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், எந்தக் கூடு, தான் நிரப்பப்பட்டே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறதோ அதைப் பொறுத்தே இருக்கும்.

ஒரு அணுவானது, ஒரு ஆற்றல் வாய்ந்த எலக்ட்ரானை அதற்கு அருகில் இருப்பவர் அதிக ஆவலுடன் எடுக்கத் தயாராக இருக்கும் போது,  அதைக் கொடுக்கும். அந்த எலக்ட்ரானானது ஒரு கோப்பையின் விளிம்பிலிருந்து ஓடி இன்னொன்றிற்குள் செல்லும். அது விழும்போது ஆற்றலை வெளிப்படுத்தும்.

‘இது எவ்வளவு அதிநுட்பமாக இருக்கிறது’ என்று தோன்றினாலும் கூட, இதுவே வாழ்வின் சாரமாகும். சூரியனிடமிருந்து வரும் போடான்கள் தாவரங்களில் உள்ள க்ளோராபில்லில் உள்ள எலக்ட்ரான்களின்மீது மோதுகிறது; தொடர்ச்சியான இரசாயன எதிர்வினைகள் ஆந்த ஆற்றலூட்டப்பட்ட எலக்ட்ரான்களை ஒரு அணுவிலிருந்து இன்னொன்றிற்கு மாற்றுகிறது. இது பழங்கள்,தண்டுகள், விதைகள் ஆகியவற்றில்  இனிப்பாகவோ அல்லது மாவுச்சத்தாகவோ அவை சேமிக்கப்படும் வரை தொடர்கிறது.

மாலிக்யூல் எனப்படும் பேரணு என்ற மட்டத்தில் ஒரு உருளைக்கிழங்கானது  பெட்ரோலியத்தை விட  மாறுபட்ட ஒன்று அல்ல: அது அதி-ஆற்றல் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள பேரணுக்களைக் கொண்டதாகும்.

நமது வளர்சிதை மாற்றத்தால், இந்த எலக்ட்ரான்களை நிர்வகிக்கும்படியான விதத்தில் நாம் கைப்பற்ற விழைகிறோம்.

ஜெண்ட் கையோர்கி (Albert Szent-Györgyi),  ”வாழ்க்கை என்பது எலக்ட்ரான் தனக்கு ஒரு ஓய்வெடுக்கும் இடத்தை எதிர்பார்க்கும் ஒன்றைத் தவிர வேறல்ல” என்று கூறியது அனைவராலும் திருப்பித் திருப்பிக் கூறப்படுகிறது. பளிங்குக்கற்கள் மலைச்சரிவில் கீழே உருளுகின்றன, வாழ்க்கை தனது விசையைப் பயன்படுத்துகிறது.

அதிக ஆற்றல் உள்ள எலக்ட்ரான்கள் எடுக்கும்படியான நிலையில் தம்மை காட்டிக்கொள்வதில்லை என்பது தான் இதில் கஷ்டமான ஒரு விஷயம்.

உணவு என்பது சிக்கலான ஒன்று, அது வெவ்வேறு வகையான பேரணுக்களைக் கொண்டது, அவற்றில் பல நம்முடைய செல்களின் பௌதிக அமைப்புகளில்  மறு சுழற்சி செய்ய[ப்படக் கூடிய  மூலப் பொருள்களைக் கொண்டது. குறிப்பாக, ஆற்றலை அடர்த்தியாக நமது உணவில் கொண்டிருக்கும் அணுக்களைக் கண்டுபிடிப்பது என்பது குவியலாகக் கிடக்கும் ஓடாத கார்களில் இன்னும் சார்ஜுடன் இருக்கும் பேட்டரிகளைக் கண்டுபிடிக்க முயலும் முயற்சி போல இருக்கும்.

 **** 

– தொடரும்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: