
Post No. 11,763
Date uploaded in London – – 10 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

ஆக்சிஜன் பற்றி மேலும் சுவையான செய்திகள் உண்டு.
வணிக ரீதியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் அரைவாசி எஃகு (Steel) தயாரிப்பிலும் , கால் வாசி ரசாயனத் தொழிற்சாலைகளிலும் (Chemical Industries) , மீதி மருத்துவ மனை, ராக்கெட் ஏவுதல், தண்ணீரை சுத்திகரித்தல் , உலோகங்களை வெட்டுதல் (Metal Cutting) முதலியவற்றிலும் பயன்படுகிறது ரசாயன தொழிற்சாலைகளில் இதனால் எத்திலீன் ஆக்ஸைடை உற்பத்தி செய்து அதன் மூலம் பாலியஸ்டர் பாட்டில்கள், துணிகள் வரை ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன .
xxxx
ரசாயன குணங்கள்
குறியீடு – O
அணு எண் 8
கொதி நிலை – மைனஸ் 229 டிகிரி C
உ ருகு நிலை – மைனஸ் 183 டிகிரி C
xxx
பொருளாதார உபயோகம்
தொழிற்சாலைகளில்தான் அதிகம் இது பயன்படுகிறது. ஆண்டுக்கு 10 கோடி டன் ஆக்சிஜனை காற்றிலிருந்தே கறந்துவிடுகிறார்கள் . காற்றினை மிகக்குளிர்ந்த நிலையில் திரவம் ஆக்கிவிட்டால். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். முதலில் நைட்ரஜனை எடுத்துவிட்டால் பின்னர் ஆக்சிஜன் எஞ்சி நிற்கும். மருத்துவத்திலும் வெல்டிங், உலோகத்தை வெட்டும் தொழில்களிலும் பயன்படுத்த இதை சிலிண்டரில் வைத்திருப் பார்கள். பெரிய அளவு திரவ ஆக்சிஜன், பாதுகாப்பு செய்யப்பட்ட பெட்டகங்களில் வைக்கப்படும். ஒரு லிட்டர் திரவ ஆக்சிஜன் 840 லிட்டர் வாயுவை அளிக்கும்
காற்றிலிருந்து ஆக்சிஜன் எடுக்கவும் பலமுறைகள் இருக்கின்றன
நமது பூமியில் பூமியின் மேல் ஓட்டில் 47 சதவீதமும் காற்றில் 21 சதவீதமும் ஏனைய பகுதி கடல் நீர், தாதுப் பொருட்களிலும் (Minerals) இருக்கிறது .
பெரும்பாலான தாதுப் பொருட்கள் ஆக்சைட் வடிவில் கிடைக்கின்றன. ஏதாவது ஒரு பொருளுடன் ஆக்சிஜன் கிரியையில் ஈடுபட்டால் அந்தப் பொருட்களின் ஆக்சைட் OXIDE உண்டாகும்.
ஆக்சிஜன் வாயுவுக்கு நிறமோ மணமோ கிடையாது. திரவம் ஆக்கினால் லேசான நீல நிற திரவம் ஆகிறது. அப்போது காந்த சக்தியும் ஏற்படும் இது ஒரு வினோதமான குணம். 4 அபூர்வ வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்களுடன் செயல்பட்டு ஆக்சைட் உப்புக்களை உண்டாக்கும்; தண்ணீரில் கரையும்,
xxxx
வியப்பான ஐசடோப்புகள்
இதற்கு மூன்று ஐசடோப்புகள் ISOTOPES இருக்கின்றன .
கடந்த காலத்தில் பூமியில் எத்தகைய வானிலை/ காலநிலை இருந்தது என்பதை அறிய இந்த ஐசடோப்புகள் பயன்படுகின்றன. ஆக்சிஜன் 18, ஆக்சிஜன் 16 ஐசடோப்புகள் மூலம் எந்தெந்தக் காலத்தில எவ்வாறான பருவ நிலை இருந்தது என்று அறிய முடிகிறது .
வியப்பான விஷயம் என்னவென்றால் பழங்கால எலும்புக்கூடுகள் கிடைத்தால் அவற்றின் பற்களில் இருக்கும் ஆக்சிஜன் ஐசடோப்புகள் அ வர்கள் குளிர்ப்பிரதேசத்தில் வாழ்ந்தார்களா இல்லையா என்று காட்டிவிடும். பூமத்திய ரேகைக்கு அருகில் வசித்தால் அவர்களுக்கு பற்களில் ஆக்சிஜன் 18 அதிகம் இருக்கும்.
xxx

ஓசோன் மண்டலம்
நமது காற்று மண்டலத்தில் பல அடுக்குகள் உள்ளன. அங்கு ஓசோன் OZONE என்னும் வகை ஆக்சிஜன் இருக்கிறது இதை ஓ 3 என்று சொல்லுவார்கள். ஆக்சிஜனின் 3 அணுக்கள் V வடிவத்தில் அமைந்திருக்கும். ஓஸோன் என்றால் மணம் / வாசனை என்று பொருள். முதலில் இதைக் கண்டுபிடித்தவர் இதை புது தனிமம் என்று கருதினார். பின்னர் இது ஆக்சிஜனின் மறு வடிவம் என்று தெரிந்தது.இதற்கு காற்று மண்டலத்தில் இரண்டு பங்கு பணிகள் உண்டு. கீழ்மட்டத்தில் இது புறச் சூழலை கெடுக்கும் ஆனால் பூமிக்கு 20 முதல் 40 கிலோமீட்டர் உயரத்திற்கு வியாபித்திருக்கும் ஸ்ட்ராடோஸ்பியர் (Stratosphere) என்னும் மண்டலத்தில் இது பூமியைக் காக்கும் கேடயமாக செயல்படுகிறது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் (Ultra Violet Rays) மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அந்தக் கதிர்களை பூமிக்கு வரவொட்டாமல் வடிகட்டும் வேலையை ஓசோன் செய்கிறது.
நம் பயன்படுத்தும் ரெப்ரிஜிரேட்டர் என்னும் குளிர்ப்பதன பெட்டிகள், ஏரோ சால்கள் (aerosols) , பிளாஸ்டிக் போம் (Plastic Foam) – கள் ஆகியன இந்த ஓஸோன் மண்டலத்தைக் கரைத்து விடும் ரசாயனங்களைப் (CFC = Chlorofluorocarbon) பயன்படுத்துவதால் அண்மைக்காலத்தில் இந்த சாதனங்கள் வேறு விதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன .

இந்த வாயு, நீச்சல் குளம் முதலியவற்றை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது. இதை நீல நிற திரவமாகவோ, வயலெட் நிறக் கட்டியாகவோ குளிர வைக்கலாம். ஆனால் இரண்டும் பயங்கரமான (Explosives) வெடிப்பொருட்கள்
மனித குலம் ஓசோன் மண்டலத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. அதைத் தேய்க்கும் (CFC) சாதனங்களை நாம் பயன்படுத்தக்கூடாது. இப்போது பல நாட்டு சட்டங்களே அத்தகைய ரசாயனங்களை (CFC) பயன்படுத்த தடை விதித்துள்ளது நற்செய்தியாகும்
–சுபம்—
Tags- ஓஸோன் ,ஐசடோப்புகள் , ஆக்சிஜன், CFC