விடக் கூடாத மூன்று விஷயங்கள்! (Post No.11,765)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,765

Date uploaded in London –   3 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

விடக் கூடாத மூன்று விஷயங்கள்!

ச.நாகராஜன்

விடக்கூடாதவை மூன்று!

மூன்று காரியங்கள் செய்வதை ஒரு போதும் விடக்கூடாது.

அவையாவன:

1) யாகம் 2) தானம் 3) தபஸ்

யாகத்தைச் செய்வதை நிறுத்தாதே.

தானம் கொடுப்பதை நிறுத்தாதே.

தவம் செய்வதை நிறுத்தாதே.

பகவத் கீதையின் 18ஆம் அத்தியாயமான மோக்ஷசந்யாஸ யோகம் இதைத் தெளிவாகக் கூறுகிறது.

யக்ஞ தான தப: கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் |

Actions based upon sacrifice, charity, and penance should never be abandoned; they must certainly be performed. Indeed, acts of sacrifice, charity, and penance are purifying even for those who are wise.

ஆகமங்கள் மூன்று!

மூன்று ஆகமங்கள் நம்மிடம் உள்ளன.

1) வைஷ்ணவாகமம் 2) சிவாகமம் 3) சாக்தாகமம்

கவிதைக்குத் தேவையான மூன்று!

ஒரு நல்ல கவிதைக்குத் தேவையானவை மூன்று குணங்கள்.

1) மாதுர்யம் – இனிமை

2) ஓஜஸ் – கம்பீரம், பிரம்மாண்டம்

3) ப்ரஸாதம் –  தெளிவு

பண்டிதருக்குத் தேவையான மூன்று குணங்கள்!

ஒரு நல்ல பண்டிதருக்கு மூன்று குணங்கள் இன்றியமையாதவை.

1) க்ரந்தார்த்த பரிஞானம் – நூலைப் பற்றிய முழு அறிவு தேவை

2) தாத்பர்யார்த்த நிரூபணம் – நூலில் சொல்லப்பட்டதை நிரூபிக்கும் திறமை வேண்டும்.

3) ஆத்யந்தமத்ய வ்யாக்யானசக்தி –  முழு நூலையும் திறம்பட விளக்கும் சக்தி

க்ரந்தார்தஸ்ய பரிஞானம் தாத்பர்யார்த்தநிரூபணம் |

ஆத்யந்தமத்ய வ்யாக்யானசக்தி: சாஸ்த்ரவிதோ குணா: ||

கிடைத்தற்கரிய மூன்று பேறுகள்!

மூன்று பேறுகள் கிடைப்பதற்கு தெய்வ அனுக்ரஹம் வேண்டும்.

அவையாவன:

1) மனுஷ்யத்வம் – மனிதப் பிறவி

2) முமுக்ஷத்வம்

3) மஹாபுருஷ சம்சர்கம் – பெரியோரின் தொடர்பு

இப்படி விவேக சூடாமணியில் ஆதி சங்கரர் அருளியிருக்கிறார்

துர்லபம் த்ரயமேவைத்தைவானுக்ர: ஹேதுகம் |

மனுஷ்யத்வம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ சம்ஸ்ரய: ||

 மூன்று ரத்னங்கள்!

மஹாமாயாவின் மூன்று ரத்தினங்கள் என்று சொல்லப்படுபவர்கள் இதோ:

1) சிவன் 2) சக்தி 3) விஷ்ணு.

இவர்கள் ‘ரத்ன த்ரி’ அல்லது ‘த்ரி ரத்ன’ என்று சொல்லப்படுகின்றனர்.

வீரர்கள் மூவர்!

வீரர்கள் மூன்று வகை உண்டு

1) ரண வீர் (போர்க்களத்தில் சண்டையிடுபவர்)

2) வித்யா வீர் (கல்வியில் சிறந்து விளங்குபவர்)

3) தான வீர் (தானங்களில் சிறந்து விளங்குபவர்)

தூரத்திலிருந்து சந்தோஷப்பட மூன்று!

தூரத்திலிருந்து சந்தோஷம் அடைய உள்ளவை மூன்று.

1) பர்வதம் – மலை

2) முகமண்டன வேஷ்யா – முகப்பூச்சு அலங்காரம் செய்து கொண்டவள்

3) யுத்தாவர்தா – யுத்தம் பற்றிய செய்தி

மலையை எங்கிருந்து பார்த்தாலும் ரம்யமே.

அலங்காரம் செய்து கொண்ட வனிதை காண்பதற்கு மகிழ்ச்சிக்கு அளிப்பவள்.

யுத்தம் பற்றிய சுவாரஸ்யமான செய்தி கேட்பதற்கு சுவை தான் ( நாம் கலந்து கொள்ளாமல் இருந்தோமானால் – அல்லது நம் சுற்றமும் நட்பும் பாதிக்கப்படவில்லை என்றால்!)

தூரஸ்தா: பர்வதா ரம்யா” வேஷ்யா ச முகமண்டனே |

யுத்தஸ்ய வார்தா ச த்ரீணி ரம்யாணி தூரத: |

 இப்படி சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் உள்ள சுபாஷித ஸ்லோகம் கூறுகிறது.

                           சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 158/218

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: