
Post No. 11,769
Date uploaded in London – – 4 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்த மாத நற்சிந்தனைக் காலண்டரில் ரமண மஹரிஷியின் புனித மொழிகள் இடம்பெறுகின்றன
xxx
பண்டிகை நாட்கள் – மார்ச் 6- மாசி மகம் ; 8-ஹோலி ; 15- காரடையான் நோன்பு ; 22- யுகாதி , தெலுங்கு வருஷப் பிறப்பு ; 30 – ஸ்ரீ ராம நவமி
பெளர்ணமி -7; அமாவாசை – 21; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 3, 18; சுப முகூர்த்த தினங்கள் – 9, 10, 13, 17, 23, 27
xxx
மார்ச் 1 புதன் கிழமை
சத்சங்கம், மனதை இதயத்தில் மூழ்கச் செய்யும்
xxx
மார்ச் 2 வியாழக்கிழமை
ஸ்தூல இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது .ஆனால் நான் பேசும் இதயம் வலப்பக்கத்தில் இருக்கிறது . இது எனது அனுபவம் . இதற்கு வேறு சான்று எதுவும் தேவை இல்லை .இருப்பினும் மலையாள நூல் அஷ்டாங்க ஹ்ருதயத்திலும் , சீதா உபநிஷத்திலும் இது உறுதிபடக் கூறியிருப்பதைக் காணலாம் .
xxx
மார்ச் 3 வெள்ளிக்கிழமை
இதய குகையின் நடுவே பிரம்மம் மட்டுமே ஒளிர்கிறது .நான் – நான் என்ற நேரிடையான ஆன்ம அனுபவமே இது.ஆன்ம விசாரத்தினாலோ அல்லது மூச்சடக்கத்தினாலோ இதயத்தில் நுழைந்து அதாகவே இரு.
xxx
மார்ச் 4 சனிக்கிழமை
பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது .எனவே பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம்.
xxx
மார்ச் 5 ஞாயிற்றுக்கிழமை
உலகத்தில் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம் . சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது .
xxx
மார்ச் 6 திங்கட் கிழமை
சுருக்கமாகச் சொன்னால் நான் என்ற எண்ணமே எல்லாவற்றிற்கும் மூலம் . அது உதிக்கும் இடம் இதயம்.
xxx
மார்ச் 7 செவ்வாய்க் கிழமை
இந்த இதயம் ரத்தம் சுத்திகரிக்கும் அங்கம் அல்ல. ‘ஹிருதயம்’ என்பதற்கு இதுவே மையம் என்று பொருள. ஆகவே அது ஆன்மாவைக் குறிக்கிறது .
Xxx
மார்ச் 8 புதன் கிழமை
முயற்சி செய்து மனதை எண்ணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்நிலையில் நாம் தொடர்ந்து இருப்போமானால் அதுவே சஹஜ நிலை (இயல்பு நிலை)
xxx
மார்ச் 9 வியாழக்கிழமை
மனத்தின் இயல்பான நிலை ஆத்மாவில் நிலைத்து இருப்பதே. ஆனால் அதற்குப் பதிலாக நம் நம் மனம் வெளிப்பொருள்களைப் பற்றி நிற்கிறது .
xxx
மார்ச் 10 வெள்ளிக்கிழமை
நமது ஆரம்ப நிலையிலிருந்து தவறுவதால் உடம்பாகவே நம்மைப் பார்க்கும் தவறான போக்கு ஏற்படுகிறது. தவறான எண்ணங்ககளை விட்டுவிட்டு நமது மூலத்தைத் தேடிப்பிடித்து நமது இயல்பான நிலையில் இருப்பது அவசியம் .
xxx
மார்ச் 11 சனிக்கிழமை
நமது சொரூபத்தை மறப்பதே உண்மைச் சாவு. அதை நினைவுகொள்ளுதல் உண்மைப் பிறப்பு. தொடர்ந்து வரும் பிறப்புகளுக்கு அது முற்றுப்புள்ளி வைக்கிறது .
xxx
மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை
நாம் ஆனந்தத்தைப் புதிதாகச் சேர்ப்பதில்லை .நம் சொரூபமே ஆனந்தம்தான் . செய்யவேண்டியதெல்லாம் மகிழ்ச்சியின்மையை நீக்குவதே . இந்த வழிகள் அவ்வாறு செய்கின்றன .
Xxx
மார்ச் 13 திங்கட் கிழமை
மனம் என்பது என்ன? தேடிக்கண்டு பிடித்தால் மனம் என்று தனியாக ஒரு பொருள் இல்லை என்பது தெரிய வரும் .
xxx
மார்ச் 14 செவ்வாய்க் கிழமை
மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பே. அவை நான் என்ற எண்ணத்தையே சார்ந்து இருக்கின்றன . நான் என்ற எண்ணமே மனம் என்று அறி
xxx
மார்ச் 15 புதன் கிழமை
மனம் என்று ஒன்றுமில்லை. எண்ணங்கள் உதயமாவதால் , அவை தொடங்கும் இடத்தை வைத்து ஏதோ ஒன்றை மனம் என்கிறோம் .
xxx
மார்ச் 16 வியாழக்கிழமை
உள் திரும்பிய மனமே ஆன்மா . வெளிப்புறம் திரும்பினால் அதுவே அகந்தையாகவும் உலகமாகவும் மாறுகிறது .
xxx
மார்ச் 17 வெள்ளிக்கிழமை
எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணமும் எப்பொழுதாவது ஒரு பயனை விளைவிக்கும் . எண்ணத்தின் ஆற்றல் ஒருபோதும் வீண் போகாது .
xxx
மார்ச் 18 சனிக்கிழமை
நீ எண்ணத்திலிருந்து வேறானவனா ? அவை இல்லாமல் நீ இருக்கிறாயா ? ஆனால் நீ இல்லாமல் எண்ணங்கள் இருக்க முடியுமா ?
Xxxx
மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை
வலிமையாகச் சிந்திக்கும்போதுதான் மனம் வலிமை பெறுகிறது எனப்து பொதுவான எண்ணம். ஆனால் எண்ணங்களிலிருந்து விடுதலைப் பட்ட மனமே வலிமையானது .
Xxx
மார்ச் 20 திங்கட் கிழமை
தன்னைப் பற்றிய அறிவை ஒதுக்கிவிட்டு , வெளி விஷய அறிவையே எப்போதும் நாடுகிறது மனம் .
xxx
மார்ச் 21 செவ்வாய்க் கிழமை
மனம் அலைபாயும்போது , சக்தி எண்ணத்தினால் சிதறிப்போய் , பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது , சக்தி சேமிக்கப்படுகிறது. மனம் வலிமை பெறுகிறது
Xxx
மார்ச் 22 புதன் கிழமை
நமது நோக்கு ஞான வழியில் அமையுமானால் , உலகமே கடவுளாகத் தெரியும்
xxx
மார்ச் 23 வியாழக்கிழமை
தேடினால் அகந்தை ஓட்டம் பிடிக்கும் . எஞ்சி நிற்பது ஆத்மாவே .
xxx
மார்ச் 24 வெள்ளிக்கிழமை
நான் யார் என்று விசாரித்து இதயத்தில் நுழைந்தால் , அகந்தை வேரோடு சாயும் .
xxx
மார்ச் 25 சனிக்கிழமை
அகந்தை உண்டாயின் எல்லாம் உண்டாகும். அது அடங்கினால் எல்லாம் அடங்கும். எனவே அகந்தையே எல்லாம். அது என்ன என்று நாடுதலே எல்லாவற்றிலும் வெற்றியைத் தரும்
Xxx
மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை
மூச்சைக் கட்டுப்படுத்தி வலிமையற்ற மனத்தை அடக்கவேண்டும். பின், அது கட்டப்பட்ட மிருகத்தைப் போல அலையாது நிற்கும் .
xxx
மார்ச் 27 திங்கட் கிழமை
மூச்சை நெறிப்படுத்துவதால் எண்ணங்கள் ஒழுங்கு செய்யப்படும். பின் அவற்றின் மூலத்தில் வசிக்கலாம் .
xxx
மார்ச் 28 செவ்வாய்க் கிழமை
ஒரு மடங்கு வெளி விடுதல் ,ஒரு மடங்கு உள்ளிழுத்தல் , நான்கு மடங்கு உள்ளடக்குதல் என்ற நெறியில் செல்லும்போது மூச்சுக் காற்று செல்லும் நாடிகள் தூய்மை அடைகின்றன .
Xxx
மார்ச் 29 புதன் கிழமை
தினமும் ஞானிகள் சங்கத்தில் இருப்பதால் , நம் மனம் அதன் மூலத்தில் கலந்துவிடும்.
xxx
மார்ச் 30 வியாழக்கிழமை
மூச்சை நெறிப்படுத்தினால் , வலையில் பிடிபடும் பறவை போல மனம் அமைதியாகும். மனத்தை அடக்க இது ஒரு வழி .
மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம் ஒன்றாகிப் போகும்.
xxx
மார்ச் 31 வெள்ளிக்கிழமை
எண்ணங்களை அடக்கும்போது விழிப்புணர்வு தேவை. இல்லையேல் தூக்கம் உண்டாகும் .
Xxx
பயன்படுத்திய நூல்- ரமணரின் தெய்வ வாக்கு, தொகுப்பு ஏ ஆர் நடராசன், தமிழாக்கம், பிரணாதார்த் திஹரன்
Xxx subham xxx
Tags- மார்ச் 2023, காலண்டர், நற்சிந்தனை, ரமண மகரிஷி , பொன்மொழிகள்