
Post No. 11,771
Date uploaded in London – 5 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 2
ச.நாகராஜன்
ஆகவே எல்லாமே வேகத்தைப் பொறுத்தே தான் இருக்கிறது. காலமும் பொருண்மையும் வேகத்தால் நிர்ணயிக்கப்படுபவையே.
பிரபஞ்சத்தில் நாம் பார்ப்பதெல்லாம் .நிஜமல்ல.
மனோசக்தியை வளப்படுத்தும் குருமார்கள் தீடா அல்லது வேறு மாறுபட்ட நிலையில் மனதை இயக்குகின்றனர். அவர்கள் காலமற்ற பிரதேசம் ஒன்றில் நுழைந்து கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றை மிகத் தெளிவாக பார்க்க முடியும் என்கின்றனர்.
காலம் எப்போதுமே முன்னோக்கிச் செல்லும் ஒன்று என்று கருதப்பட்டு வந்தது. இதை வில்லிலிருந்து புறப்பட்ட அம்பானாது எப்படி ஒரு நேர்கோட்டில் செல்லுமோ அதே போலத் தான் என்று சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் க்வாண்டம் பிஸிக்ஸ் என்னும் அணு இயற்பியல் அது எதிர்திசையிலும் கூடச் செல்லும் தன்மை கொண்டது என்று சொல்கிறது. இந்தப் புது இயற்பியலின் உள்ளே செல்லச் செல்ல அதிகமதிகம் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வந்து நம்மை பிரமிக்க வைக்கின்றன.
இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா?
ஒரு திரையில் ஒரு குறுகிய வெட்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் வழியே ஒளிக்கற்றை பாய்ச்சப்பட்டது. இது அபெர்சர் டெஸ்ட் (aperture test) என்று சொல்லப்படுகிறது.
இந்த ஒளியானது ஒரு துகள் சித்திரமாகவோ அல்லது அலை வடிவிலோ சோதனையாளரின் விருப்பப்படி திரையில் தெரிந்தது.
இப்போது ஒரு புதிய சிந்தனை தோன்றுகிறது. சாதாரணமாக நாம் பார்க்கும் நிகழ்வுகள் அலைவடிவில் தோன்றுபவையா, அவை நாம் துகள் வடிவில் பார்க்க வேண்டும் என்று உணர்வுடன் சோதனை செய்யப்படும் போது அப்படித் தோன்றுகின்றனவா?
ஒரு திடப் பொருளில் உள்ளே மிக அதிகமான வெற்றிடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் இந்த துகள் கொள்கை தன் பங்கிற்கு தனது செல்வாக்கைச் செலுத்தலாம்.
சூரிய மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். அவற்றில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவற்றிற்கு இடையே உள்ள தூரமோ மிக மிக அதிகமானவை. இந்தப் பெரிய சூரிய மண்டலத்தை ஒரு அணு அளவிற்குச் சுருங்கியதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இருக்கும் இடத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் இப்போது :- 99.9999999999% திடப் பொருளை வெளியாக (Space) வைத்துக் கொள்வோம்.
அப்போது ஒரு அபூர்வமான மதிப்பீடு பிரபஞ்சம் பற்றி நமக்கு வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா “வெளிகளும்” எடுக்கப்பட்டு விட்டால், “திடப் பொருள்” மட்டுமே விடப்பட்டால், பிறகு இதை உங்கள் உள்ளங்கையில் வைத்து விடலாம்!
**** தொடரும்
tags- பார்ப்பதெல்லாம், நிஜமல்ல