Post No. 11,775
Date uploaded in London – – 6 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நாகபுரி முதல் நாகர்கோவில் வரை எங்கு நோக்கினும் பாம்பு பெயர்களில் ஊர்களைக் கொ ண்ட ஒரே நாடு இந்தியா. காஷ்மீரில் இமயமலை உச்சியில் உள்ள அனந்த நாகம் ஜில்லாவிலுள்ள சேஷசநா கம் ஏரியிலி ருந்து தமிழ்நாட்டிலுள்ள திருப் பாம்பு புரம் வரை எங்கும் பாம்பின் பெயர் உண்டு. இந்து தெய்வங்களில் பாம்புகளை அணியாத தெய்வங்கள் மிகக் குறைவு.. சிவன் கழுத்திலும், திருமாலின் படுக்கையிலும் பாம்பு இருப்பதை பாடாத நாயன்மார்களோ , ஆழ்வார்களோ கிடையாது .
எனது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தில், பாம்பின் பெயர்களை உடைய மூன்று ஊர்களுக்குச் சென்றேன்.
திருப்பாம்புரம்
திருநாகேஸ்வரம்
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்
xxxx
இந்து தெய்வங்கள் பாம்புகளைக் கழுத்திலோ கையிலோ வைத்திருப்பது ஏன்?
பாம்பு என்பதை குண்டலினி சக்தி என்ற வடிவத்தில் நேர்முகமாகக் காண்பர்.
பாம்பு என்பதை தீய சக்திகளான வடிவத்தில் புலன் இன்பத்தை அடக்குவதற்கும் பயன்படுத்துவர். கிரேக்க நாட்டில் பாம்புகளைக் கையில் கொண்ட பெண் தெய்வங்களும் ரிக்வேதத்தில், சிந்து சமவெளியில் உள்ள பாம்பு ராணிகள் பற்றியும் உலகெங்கிலும் பாம்பு வழிபாடு என்ற என்னுடைய நூலில் விளக்கியுள்ளேன். பாம்பாட்டிச் சித்தர் பாடல்களை உங்களில் பலரும் அறிவீர்கள்.
முதலில் நான் கண்ட திருப்பாம்புரத்திற்குச் செல்வோம்.
திருப்பாம்புரம்
ராகுவும் கேதுவும் ஒரே உடலுடன் (ஏக சரீரி) இறைவனை வழிபட்ட தலம் இது என்பதால் ஜாதகத்தில் ராகு, கேது திசை நடந்தாலோ, அவ்விருவருக்கும் பரிகாரம் செய்ய வேண்டியிருந்தாலோ இந்தக் கோவிலுக்குச் செல்லும்படி , ஜோதிடர்கள் பரிந்துரைப்பார்கள். ஆகையால் நவக்கிரக பரிகாரத் தலங்களில் இதுவும் ஒன்று.
வன்னிமரத்துக்கு அடியில் பெரிய நாகர் சிலைகளைக் காணலாம்.
பாம்பு புரம் என்பது மருவி பாம்புரம் ஆகியது. நாகராஜன் பூஜித்த தலம் . ஆதி சேடனுடைய மூல விக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் கோவிலில் உள்ளன
இறைவன் திரு நாமம் – பாம்புரேஸ்வரர் , திருப்பாம்புரமுடையார்
இறைவி – வண்டார் குழலி , மாமலையாட்டியாள்
தல விருட்சம் – வன்னி மரம்
பேரளத்திலிருந்து மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது.
15 கல்வெட்டுகள் இருக்கின்றன ; அவை ராஜராஜன், ராஜேந்திரன், திரிபுவன வீரதேவன் , மூன்றாம் குலோத்துங்கன்,, சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர் காலத்தவை .
xxxx
கல்வெட்டு தரும் செய்திகள் :
சோழியதரையன் வேளான் தாமோதரையானால் மண்டபம் கட்ட நிலம் தானம் கொடுக்கப்பட்டது.
சரபோஜி மன்னன் பிரதிநிதியான சுபேதார் ராகு பண்டிதராயன் வசந்த மண்டபத்தைக் கட்டினான் .
திருப்பாம்புரத்தில் 1209-ம் ஆண்டில் கடும் பஞ்சம் நிலவியது. ஒரு பொற்காசுக்கு மூன்று படி நெல்தான் கிடைத்தது. பஞ்சத்தால் வாடிய ஒரு வேளாளன் தன்னுடைய இரண்டு பெண்களை 100 பொற்காசுக்குக் கோயிலுக்கு அடிமையாக விற்றான் .
Xxxx
கோவிலுக்குள் 8 அடி நீள பாம்பு அதிசயம்


2002ம் ஆண்டில் கோவில் கர்ப்பகிரகத்தைத் திறந்தபோது , பட்டர் ஒரு அதிசயத்தைக் கண்டார். ஒரு ஏழரை அடி நீளப் பாம்பு, தனது சட்டையை (பாம்புத் தோல்) அழகாக சிவலிங்கத்தின் மீது மாலை போல விட்டுச் சென்றிருந்தது. இதை அறிந்தவுடன் ஏராளமான மக்கள் வந்து அதைத் தரிசித்தனர். கோவில் நிர்வாகம் அந்தப் பாம்பின் சட்டையை அப்படியே கண்ணாடி பிரேமுக்குள் வைத்து , சந்நிதியில் பாதுகாக்கிறது . இன்றும் அதைக் காணலாம்.
26-5-2002 பெளர்ணமி ஞாயிற்றுக்கிழமையன்று பாம்பு தனது தோலை சிவ லிங்கம் மீது மாலையாக அணிவித்துச் சென்ற காட்சி. இதன் நீளம் 8-3 அடி
21-3-2002 அன்று பாம்பு தனது தோலை அம்மன் வண்டார் பூங்குழலி மீது மாலையாக அணிவித்துச் சென்ற காட்சி. இதன் நீளம்- 7-5 அடி
Xxxx
குழந்தை பிறக்காதோர் , பாம்புகளை வழிபட்டால் குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் தமிழ் நாட்டில் எல்லா கோவில்களிலும் நாகர் பிரதிஷ்டைகளைக் காணலாம். பாம்பின் பெயர்களுடைய ஊர்களில் பெரிய நாகர் (பாம்பு) சிலைகளைக் காணலாம். ஆங்கிலத்தில் உள்ள ஸ்நேக் , ஸர்பண்ட் என்பற சொற்கள் தூய ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்!!!
S+ naaka= SNAKE
Sarpa= Serpent
xxx
திருப்பாம்புரம் தேவாரம்
துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
பித்தராய்த் திரியும்எம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே. 1.41.3
குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
குற்றுவிட்டுடுக் கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
கையர்தா முள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரண முரிசெய்து போர் த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னக ராரே. 1.41.10

பார்மலிந்தோங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந்தழகார் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நான்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
சிவனடி நண்ணுவர் தாமே. 1.41.11
திருச்சிற்றம்பலம்
அடுத்த கட்டுரையில் மேலும் இரண்டு நாகேஸ்வரர்களைத் தரிசிப்போம்.
—subham—
Tags- வன்னிமரம், நாகர் சிலை, திருப்பாம்புரம், ராகு, கேது, பரிகாரத் தலங்கள் , கோவில்