
Post No. 11,774
Date uploaded in London – 6 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 3
ச.நாகராஜன்
உங்கள் வீட்டு வீடியோவை எடுத்துக் கொள்வோம்.
நீங்கள் இப்போது வீடியோ மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா, அது வெற்றிடத்தைத் தான் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சப் அடாமிக் பார்டிகிள்ஸ் (Sub atomic particles) தம்மைச் சுற்றிலும் பெரும் ஸ்பேஸ் (Space) எனப்படும் வெளியைக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பார்த்தால் அதிலுள்ள அனைத்துமே அதே போன்ற சப் அடாமிக் பார்டிகிள்ஸினாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
திரையிலிருந்து கண்ணை உயர்த்துங்கள், சுற்றிப் பாருங்கள். பார்க்கும் அனைத்துமே சப் அடாமிக் பார்டிகிள்ஸினாலேயே தான் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் வளர்ப்பு பூனையையும் சேர்த்துத் தான் சொல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிடம் தான்! இது பற்றிய சந்தேகம் உங்களுக்கு எழுவது நியாயம் தான்! எல்லாமே அதே போலத்தான் – ஒன்றே ஒன்றைத் தவிர – அது தான் மனித பிரக்ஞை!
ஆம், இந்த விதிக்கு ஒரே ஒரு விலக்கு உண்டு, அது தான் மனித பிரக்ஞை!
பிரக்ஞை விழுப்புணர்ச்சி (Conscious Awareness) இருக்கிறதே, அது மட்டுமே தனியாக பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கிறது. இது ஒரு விசித்திரம் தான்!
சப் அடாமிக் என்று சொல்லப்படுவதை விட மனிதனின் பிரக்ஞை மிகவும் உயரியது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட பிரக்ஞை அசேதனம் அல்லது ஜடமான மேட்டர் (matter) மீது – பொருள் மீது – செல்வாக்கு செலுத்துகிறது. மனித மனம் செல்வாக்கு செலுத்தாத எதுவுமே இல்லை என்பதே உண்மை.
அதை ஏன் செய்ய முடியாது என்றால் நாம் அதைச் செய்யும்படி எதிர்பார்க்கப்படவில்லை.
இதே நிலை தான் விஞ்ஞானிகளுக்கும் – aperture test- அபெர்சர் சோதனையில் உள்ளது.
இந்த விதமாக அறிவியல் ரீதியாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே போனால் பிரக்ஞையின் தனித்தன்மையானது உயிரற்ற பொருள் மீதும் தனது செல்வாக்கைச் செலுத்தும் என்பதை உணரலாம்.
ஐன்ஸ்டீன் ஆற்றலும் பொருண்மையும் ஒன்றுக்கொன்று மாற்றப்படக்கூடியது – நியூக்ளியர் ரீ – ஆக் ஷனில் உள்ளது போல (energy and mass are interchangeable as in a nuclear reaction) என்றார்.
உலகிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள சோதனைச் சாலைகள் மனித மனம் உருவாக்கும் விசையை அளக்க இப்போது தயார் – சைக்கோ கைனடிக் சோதனைகள் மூலம்!

சரி, முடிவு தான் என்ன?, என்றால் மிகத் தெளிவாகப் புலப்படுவது இது தான் :- பொருண்மையும் ஆற்றலும் ஒன்றுக் கொன்று மாற்றப்படக்கூடியது, மனித பிரக்ஞையால் உருவாக்கப்படும் ஆற்றலானது அதற்கு இணையான பொருண்மைக்குச் சமமாக மாற்றப்படலாம்- இதற்கான வழி முறை விசுவலைசேஷன் (VISUALIZATION) எனப்படுகிறது.
இது மனோசக்தி உள்ளவர்களால் பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சத்தில் நாம் பார்ப்பதெல்லாம் நிஜமல்ல!
நாம் பிறக்கும் போது நம்மை யாரும் ‘புரோகிராம்’ செய்யவில்லை. நாம் மென்பொருள் அதாவது சாஃப்ட்வேர் இல்லாத கணினி போல இருக்கிறோம்.
நாள்தோறும் மேம்பாட்டை அடையும் ஒவ்வொரு தனி நபரும் தனக்கென உருவாக்கிக் கொள்ளும் ஒரு சட்டத்தில் தன்னை அமைத்துக் கொள்கிறார். வளர்ந்து கொண்டே இருக்கும் போது மற்றவர்களுடன் கலந்து வாழ ஒரு அடிப்படையான உண்மைக்கு நாம் பழக்கப்படுத்தப் படுகிறோம். இதை நாம் வழக்கமாக பள்ளிகளிலும் சமூக குழுக்களிலும் இணைந்து கற்றுக் கொள்கிறோம். தாய் தந்தையரின் செல்வாக்கும் கூடவே இருக்கிறது.
இப்படித்தான் நமது வளர்ச்சி அடைகிறது!
***
அடுத்த கட்டுரையுடன் இந்தக் குறுந்தொடர் முடிகிறது