புதிய கோவில்கள் , பெரிய சிலைகள் தேவையா? (Post No.11,790)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,790

Date uploaded in London – –  10 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தமிழ் நாட்டிலுள்ள சில சைவக் கோவில்கள் மிகவும் பாழடைந்த, பரிதாப நிலையில் உள்ளன. வைணவக் கோவில்களை வைணவர்களே நன்கு பராமரிக்கிறார்கள்; அல்லது அந்த மடாதிபதிகள் (ஜீயர்கள் ) நன்கு  நிர்வகிக்கின்றனர். பட்டாசார்யார்களின் வாட்ட சாட்டமான உடல் அமைப்புகளே இதற்கு சான்று.

நான் பிப்ரவரி 2023ல் சென்ற கோவில்களில் உண்டியலில்  காசு போடவில்லை. அவை திராவிட திருடர்களுக்கு, இந்து தெய்வங்களைத் திட்டும் அயோக்கியர் கைகளில் சிக்கிவிடும் என்ற அச்சத்தால் இப்படிச் செய்கிறேன். பத்திரிக்கைச் செய்திகளும் என் அச்சத்தை நியாயப்  படுத்துகின்றன. இன்னொரு விஷயமும் எனக்குப் புரியவில்லை. புதிய கோவில்களை ஏன் கட்டுகிறார்கள்?

கோவிந்தபுரத்தில் விட்டல் மந்திர் என்ற பெயரில் பிரமாண்டமான புதிய கோவிலை நிர்மாணித்து இருக்கிறார்கள். அதற்குச் செல்ல லிப்ட் LIFT  இல்லை. வெய்யில் காலத்தில் சலவைக்கல் படிகளில் ஏறிச்  சென்று தரிசிக்க வயதான பெரியோர்களால் இயலாது.

இந்தக் கோவில் எங்கள் லண்டனிலுள்ள நீஸ்டன் சுவாமி நாராயண் கோவில் NEASDEN SWAMINARAYAN TEMPLE IN LONDON போலத்தான் உள்ளது. அதாவது பொம்மைக் கண்காட்சி. ஆகமக் கோவில்கள் போல புனித வைப்ரேஷன்கள் DIVINE VIBRATIONS  அங்கு இராது. ஆயினும் அப்படியே இளமை முதல், பார்த்துப்  பழக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடும். நம்பிக்கைதானே முக்கியம்! சூட , தீபாராதனை, அபிஷேக ஆராதனை அல்லவே!! என்னுடைய சுவாமி நாராயண் நண்பர்கள் பூண்டு, வெங்காயம் வாசனை கூட அறியாதவர்கள்; தூய STRICT VEGETARIANS வெஜிட்டேரியன்கள் .இதுவல்லவோ பெருமை!!

xxxx

என் மனதில் எழுந்த கேள்விகள்????????????????????????

பழைய கோவில்கள் பாழடைந்து போகும் நிலையில் புதிய கோவில்கள் அவசியமா?

50, 60 அடி உயரத்தில் மார்பிள் / சலவைக்கல் படிகள் அமைத்தால் கிழவர்கள், கிழவிகள் ஏற முடியுமா?

லிப்ட் lift வைத்தால் புனிதமும் போய்விடும்; வீண் செலவும் ஏற்படும்.

புதிய கோவில்களுக்குத் தடை விதிக்க சாமியார்கள் மகாநாடு அறிவுரை சொல்லக்கூடாதா?

அதே கோவிந்தபுரத்தில் எல்லா சாமியார்களும் போட்டி போட்டுக்கொண்டு மடங்கள் அமைப்பது அவசியமா?

பிரம்மாண்டமான சிவன், ஆஞ்சனேயர் , ராமானுஜர், வீர சிவாஜி, பேனா சிலைகள் தேவையா?

அவர்கள் பெயரில் மிகப்பெரிய கல்யாண மஹால்கள், கூட்டம் நடத்தும் மண்டபங்கள்; மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்களைக் கட்டலாமே ; அவர்கள் பெயரில் சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கலாமே , ஆராய்ச்சிசாலைகளை  அமைக்கலாமே ; தபால்தலைகள், நாணயங்களை வெளியிடலாமே ஏனைய நாடுகள் இத்தகைய வீண் செலவுகளைச் செய்கிறார்களா? என்று சிந்திக்கலாமே?

XXX

எனது யோஜனைகள் MY SUGGESTIONS

எந்தக் கோவில் உண்டியலிலும் காசு போடாதீர்கள்.

திராவிட திருடர்களுக்கு, திராவிட கமிசன் ஏஜெண்டுகளுக்குத் தெரியாமல் பட்டர்களிடம் காசு கொடுங்கள்.

சில இடங்களில் இத்தகைய ஏஜெண்டுகள் பட்டர் தட்டில் விழும் பணத்தை பைகளில் நிரப்பிக் கொள்வதைக் கண்டேன் (பெரிய வரும்படி கோவில்களில், அல்லது திருவிழாக் காலங்களில் இப்படி நடக்கிறது.)

எந்தக் கோவிலுக்கும் பூ , தேங்காய் பழம் என்ற வடிவத்தில் செலவு செய்தால், சிறு வியாபாரிகளும் வயிற்றுப பிழைப்பை நடத்தலாம்.

xxxxx

நல்லதொரு காட்சியும் கண்டேன் ; 1000 பசுக்கள்

1000 COWS; BIG GO SAALAA

விட்டல் மந்திருக்கு எதிராக பெரிய கோ சாலா / பசு மடம் இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000 பசுக்களை வளர்க்கிறார்கள். அதற்கு நன்கொடை கொடுத்தபோது ரசீதும் கொடுத்தார்கள். கண்ணுக்கு முன்னால்  காணும் காட்சிக்கு பணம் கொடுத்து உதவுவது மகிழ்ச்சியும்  திருப்தியும்/ மன நிறைவும் தந்தது . இந்தப் பசும்பால் நல்ல இடங்களுக்கு அனுப்பப்படுகிறது

இதை எல்லாம் பார்த்துவிட்டு சென்னைக்கு வந்து ஒரு பத்திரிக்கையைத் திறந்தபோது கோவிந்தபுரத்தில் மனைகள் விற்கப்படும் என்ற விளம்பரத்தையும் கண்டேன். கொஞ்ச காலத்தில் இந்த கிராமம் கமர்ஷியல்  சென்டர் ஆகிவிடுமே என அச்சமும் மனதை ஆக்ரமித்தது .

நான் முதல் முதலில், ரிஷி கேஷ் சென்றது 1977ல்; கங்கை நதியைக் கண்டேன். ஆனந்தம் கொண்டேன். ரிஷிகேஷ் சிவானந்தர் ஆஸ்ரமத்தில் ஒரு பெளர்ணமி இரவில் தங்கி எளிமையான சாப்பாட்டையும் சாப்பிட்டேன் . மதுரைக்குத் திரும்பியவுடன், சிவானந்தர் புகழ் பரப்பும் தெய்வ நெறிக்கழகத்தினரிடம் இது பற்றி சொல்லி வியந்தேன்.

சாமிநாதா ! இப்போது நீ காணும் காட்சி உண்மையல்ல; 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதை நீ பார்த்திருக்கவேண்டும்; அதுதான் இமய மலை முனிவர்களின் தபோவனம் என்றனர்.

எனக்குக் கொஞ்சசம் ஏமாற்றம்தான். ஆனால் அ  எல்லாம்  மறைக்கும் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது .

ஆண்டு நினைவில்லை; 2003 என்று நினைக்கிறேன். என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு, ரிஷிகேஷ், ஹரித்வார் முதலிய இடங்களுக்குச் சென்றேன். அங்கு கங்கை நதியைக் காண முடியவில்லை!!! கங்கை நதியின் இருபுறங்களிலும் கடைகள், கடைகள், கடைகள்!!! கங்கா தேவி மறைந்துவிட்டாள் . என்னுடன் வந்த ஹிந்தி பேசும் உறவினர்களிடம் படித்துறை எங்கே இருக்கிறது என்று கேளுங்கள் என்றேன். அவர்களும் ஒரு சிறிய குறுகிய படித்துறையைக் காட்டினார்கள். அங்கே விலைக்கு வாங்கிய கேன்களில் water cans வேண்டுமளவுக்கு ஒரிஜினல் கங்கா ஜலத்தை நிரப்பிக்கொண்டோம் . அதற்கு முன்னதாக கங்கையின் புனித நீரைத் தலையில் ப்ரோக்ஷ்சித்துக் கொண்டோம்.

இதே அனுபவம் புட்டபர்த்தியிலும் எங்களுக்குக் கிடைத்தது. 1962 அல்லது 1963 என்று நினைவு. குடும்பத்துடன் சத்ய சாய் பாபாவைத் தரிசிக்க காரில் சென்றோம். பெண்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு ஷெட் உள்ளது. ஆண்கள் ஆங்காங்கே படுத்துக் கொள்ளலாம் என்றனர்நாங்கள் சிலர் கார் சீட்டிலும் சிலர் கட்டாந் தரையில் போதைய விரித்தும் படுத்தோம் . நல்ல குளிர். போதுமான ஸ்வெட்டர்களுடன் சென்றோம்.காலையில் அருகிலுள்ள கூரைக் கொட்டகைகலில்  குளிப்பதற்காக   வெந்நீர் விலைக்கு வாங்கலாம்  என்றனர். ஆளுக்கு ஒரு வாளி வெந்நீர் விலைக்கு வாங்கி குளித்தோம். அது நவம்பர் மாதம்.

கூட்டமே இல்லாத பிரசாந்தி நிலையத்துக்குள் எளிதில் சென்று பஜனையில் அமர்ந்தோம். காலையில் நல்ல கெட்டித்தயிர் மண் கலயத்தில் விலைக்குக் கிடைத்தது.

30, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே புட்டபர்த்திக்குச் சென்றபோது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் தென்பட்டன. பிரசாந்தி நிலையத்துக்குள் நுழைய லாட்டரி லக்கி பிரைஸ் முறை. வரிசை ஒவ்வொன்றுக்கும் Number எண் கொடுப்பார்கள்  . குலுக்கலில் எந்த நம்பர் NUMBER வருகிறதோ அந்த வரிசை முதலில் செல்லும். பிரசாந்தி ஹாலுக்குள் நுழைவதற்கு முன்னர் எலெக்ட்ரானிக் கேட். மொபைல் போன், காமெரா முதலிய சாதனங்களுக்கு அனுமதி இல்லை.

உலகமும் தர்மமும் தலை கீழாக மாறிவிட்டது .

xxxx

கடைசி யோஜனை:– LAST SUGGESTION

கூட்டம் இல்லாத கோவிலுக்கு இப்போதே போய்விடுங்கள்

பள்ளி, கல்லூரி பரிட்சை நடக்கும் நேரத்தில் தலங்களுக்குப் போங்கள் .கூட்டம் இராது .

கூட்டம் வராத, திரைபோடாத நேரத்தை அறிந்து செல்லுங்கள்.

xxxxx

காஞ்சி மஹா சுவாமிகள் பிஸினஸ் !!!

காஞ்சி புரத்தில், ஓரிருக்கையில் காஞ்சி மகா சுவாமிகள் அதிஷ்டானம், மணி மண்டபம் இருப்பதில் பொருள் உண்டு. ஆனால் ஊருக்கு ஊர் அவர் பெயரில் மணி மண்டபம், கோவில் கட்டுவதில் அர்த்தமில்லை. அவர் பெயரில் வேத பாட சாலைகள் , ஸம்ஸ்க்ருதக் கல்வி நிலையங்களை அமைக்கலாம். இப்படி ஒரு புதிய மஹாசுவாமிகள் மணி மண்டபம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. கட்டிடத்தைக் கட்டி பராமரிப்பதற்குப் பதிலாக வேத பாட சாலைகளை பராமரிப்பது, அவர்களுக்காக தங்கும் வசதிகளை செய்து கொடுப்பது புண்ணியமாக ருக்கும். அங்கு சிறிய அளவில் படங்களுடன்  சந்நிதிகள் இருப்பது போதுமானது .

ஒரு 50, 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இவைகளை யார் நிர்வகிப்பர்? அவர்களுக்கு நமக்குத் தெரிந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் தெரியுமா?  மஹா ஸ்வாமிகள் மணி மண்டபத்தை இதே பக்தி சிரத்தையுடன் பராமரிப்பாளர்களா ?

இது போன்ற விஷயங்களில் மடாதிபதிகள் தங்கள் கருத்துக்களைப் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்க வேண்டும்; காசியிலோ அயோத்தியிலோ, மதுராவிலோ, செட்டியார்கள் தங்கும் விடுதிகளைக் கட்டுவதில் பொருள் உண்டு. தமிழ்நாட்டில் மணி மண்டபங்கள், சிலைகள் தேவையா? சிந்திக்க வேண்டும். அவர்களுடைய சொற்பொழிவுகளை சிறிய பிரசுரங்களாக பல மொழிகளில் வெளியிடலாமே. இலவசமாக விநியோகிக்கலாமே

xxxx

ஒரு சுவையான கான்வர்சேஷன் INTERESTING COVERSATION

2022ல் ஒரு முறை இந்தியாவுக்குச் சென்றேன். அப்போது திருவண்ணா மலை கோவிலுக்குச் சென்றேன். கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தது; இரண்டு குடும்பங்களின் அபூர்வ சந்திப்பு அங்கே வாயிலில் TEMPLE GATE நடந்தது. அதை நான் ஓட்டுக் கேட்காமலேயே என் காதில் சம்பாஷணை விழுந்தது.

என்ன குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்திருக்கிறீர்கள்?– முதல் குடும்பம்

ஓ அதுவா? பையன்களுக்கு இன்றுதான் கடைசி விடுமுறை நாள்;; பையன்களின் நச்சரிப்புத் தாங்கவில்லை; விடுமுறைக்கு எங்கும் கூட்டிச் சொல்லவில்லையே என்று இங்கு அழைத்து வந்தேன்.– இரண்டாம் குடும்பம்.

என் மனதில் தோன்றிய எண்ணம்:

அடக் கடவுளே! வண்டலூர் மிருகக் காட்சி சாலையும் இந்தக் கோவிலும் ஒன்றுதானோ!

கோவில் என்பது ஒரு மியூசியமோ!

எப்படியாகிலும் இருக்கட்டும்; பிஞ்சு உள்ளங்களுக்கு இந்தக் கடவுள்களை அறிமுகம் செய்துவைத்த குடும்பங்களைப் பாரட்டத்தானே வேண்டும்?

 –சுபம்— 

tags-புதிய கோவில்கள், சிலைகள், தேவையா, விட்டல் மந்திர் , கோவிந்தபுரம், கோ சாலை, 1000 பசுக்கள், என் யோஜனைகள் , மஹா ஸ்வாமிகள் , மணி மண்டபம், , பிஸினஸ் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: