
Post No. 11,793
Date uploaded in London – – 11 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
எனது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின் போது சில திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளைத் தரிசித்தேன்.
முதலில் ஒப்பில்லாத அப்பன்/ உப்பிலியப்பன் கோவிலுக்குச் செல்வோம்.
கோவிலுக்குள் நான் பட்டாச்சார்யாவிடம் கேட்ட கேள்வி:
இப்போதும் உப்பில்லாத பிரசாதம்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறதா?
அவர் ‘ஆமாம்’ என்று விடை கொடுத்தார்.
ஒப்பில்லாத அப்பன் என்பதும் உப்பிலியப்பன் என்பதும் சரிதான். எல்லா மொழிகளிலும் பல பொருள் உடைய சொற்களும் விஷயங்களும் உண்டு. நேற்று முன் தினம் கிருபானந்த வாரியாரின் சுந்தர காண்ட சொற்பொழிவைக் கேட்டேன். கம்ப ராமாயணத்தில் ஒரே பாடலுக்கு ஆறுவிதமாகப் பதம்பிரித்து பொருள் சொன்னார். அத்தனையும் பொரு த்தமாகவே இருந்தன.
108 திவ்ய தேசங்களில், கும்பகோணம் அருகே உள்ள பூமாதேவி சமேத ஒப்பிலியப்பன் பெருமாள் கோயில் 13-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. தென் திருப்பதி என்று இத்தலம் சிறப்பு பெற்றுள்ளதால், இப்பெருமாளுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.
நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் சென்றோம். சுமார் 7 கிலோமீட்டர்.
தென் திருப்பதி என்றும் ,திரு விண்ணகர் என்றும் மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது இது.
திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட து ; அதாவது பாடப்பெற்றது. மொத்தம் 47 பாசுரங்கள்.
xxxxx
இந்தக் கோவிலின் சிறப்பு என்ன?

திருப்பதிக்குப் போக இயலாதவர்கள், இதையே திருப்பதியாக நினைத்து, பாலாஜிக்கு- வெங்கடாசலபத்திக்கு- செய்யவேண்டிய பிரார்த்தனைகளை இங்கேயே செய்கின்றனர். இதற்கு காரணம் இவரை வெங்கடேசனின் தமையனாராகக் கருதுவதே.
மிருகண்டு முனிவரின் பத்தினியின் விருப்பப்படி பெருமாளுக்கு உப்பில்லாத தளிகை நைவேத்யம். உப்புள்ள பண்டங்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்வதே பாபம் என்றும் கருதப்படுகிறது.
திருமணம் புரிந்த நாள்:
எம்பெருமான் பூமிப்பிராட்டியை ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டான். ஆண்டுதோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி பல்வகை இசை நிகழ்ச்சிகளுடன் 12 நாட்கள் நடந்து வருகிறது.
இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது
சிரவணம் = திரு ஓணம்
நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்.
xxxx
அமெரிக்காவில் உப்புக்குத் தடை
மனிதர்கள் சேர்த்துக்கொள்ளும் காய்கறி பழங்களில் உள்ள உப்புச் சத்தே உடலுக்குப் போதுமானது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் அமெரிக்காவில் உப்பு பற்றி எச்ச ரிக்கும் அறிவிப்பை, ஓவ் வொரு உணவு விடுதியிலும் வைத்திருப்பார்கள் ;ஒரு கருப்பு ச் சட்டமிட்ட இடத்துக்குள் உப்பை மறைத்து வைக்க வேண்டும் என்று 2016ம் ஆண்டில் நியூயார்க் நீதிபதி உத்தரவிட்டார்..உப்பிலியன் இதற்கெல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே No Salt Policy நோ சால்ட் பாலிசியைப் பின்பற்றினார். ரிக் வேதத்தில் உப்பு குறிப்பிடப்படவில்லை. சர்க்கரை மட்டுமே காணப்படுகிறது
Xxxx
ஆழ்வார்களால் படப்பட்டதால் இந்தக் கோவில் குறைந்தது 1500 ஆண்டு பழமை உடையது எனலாம்.
இந்தக் கோவிலில் பணம் செலுத்தி பெருமாள் கல்யாண உற்சவம் முதலியனவும் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்தன்று சிரவண தீபம் எடுத்துச் சென்று குறி சொல்வது விசேஷம்.
ஒப்பிலியப்பன்- நிகரற்றவன் – ஸ்ரீநிவாசன் இங்குள்ள விக்ரகங்கள்
திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற நின்ற திருக்கோலம்
பகவத் கீதையில் வரும் முக்கிய வாசகமான மாம் ஏகம் சரணம் வ்ரஜ = என் ஒருவனையே சரண் அடை , என்ற வாசகம் எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
தாயார் – பூமி தேவி (நாச்சியார்)
பெருமாளுக்கு வலப்புறம் மண்டியிட்டு வணங்கும் கல்யாண
திருக்கோலம்.
தீர்த்தம் – பகலிராப் பொய்கை
xxxx

Judge upholds NYC rule on restaurant salt warnings 2016 news
NEW YORK (Reuters) – A New York judge on Wednesday shot down a challenge by a restaurant trade group, upheld a city rule requiring many chain eateries to post warnings on menu items that are high in sodium.
The rule, believed to be the first of its kind in the United States, mandates restaurants with 15 or more locations nationwide to post a salt shaker encased in a black triangle as a warning symbol next to menu items with more than 2,300 milligrams of sodium, the daily limit recommended by many nutritionists.
“Information is power,” Justice Eileen Rakower of New York state Supreme Court in Manhattan said in a ruling from the bench. Unlike the city’s unsuccessful large-soda ban, she said, the rule did not restrict the use of sodium.
New York City adopted the rule, which took effect in December, to help lower blood pressure and reduce the risk of heart attacks and strokes.
The National Restaurant Association, a restaurant trade group, then sued the city’s Board of Health saying the rule unfairly burdened restaurant owners.
In court on Wednesday, Rakower denied the group’s motion for a preliminary injunction to stop enforcement of the rule. Starting March 1, violators will be punished by $200 fines. In addition to chain restaurants, the rule also applies to concession stands at some movie theaters and sports stadiums.
Xxx

பேயாழ்வார் பாசுரங்கள் 2342, 2343
2342. பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன் விண் ணகர். 61
2343. விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, – மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62
Xxxx subham xxxx tags–ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், பகலிராப்பொய்கை, திரு விண்ணகர், உப்பு, பிரசாதம், தளிகை , இல்லாத , no salt policy