
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,796
Date uploaded in London – 12 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஐந்து வகை உபசாரம், ஐந்து வகை வழிபாடு, ஐந்து வகை கர்மம்!
ச.நாகராஜன்
1. ஆகாயம் ஐந்து வகைப்படும்.
அவையாவன:
1) ஆகாசம் 2) பரமாகாசம் 3) மஹாகாசம் 4) தத்வாகாசம்
5) சூர்யாகாசம்
2. பங்க்தி பாவனா: ஐவர்
(விருந்தில் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் ஐவர்)
1) ஷடங்கி – வேதாங்கங்களில் வல்லுநர்கள்
2) வினயி – எளிமையானவர்கள்
3) யோகி – யோகி
4) சர்வதந்த்ரா – அனைத்து சாஸ்திரங்களிலும் வல்லவர்கள்
5) யாயாவரர் – பக்திமானான க்ரஹஸ்தன்
ஷடங்கி வினயி யோகி சர்வதந்த்ரததைவ ச |
யாயாவரஸ்ச பஞ்சைதே விக்ஞேயா: பங்க்திபாவனா: ||
3. உபசாரம் ஐந்து வகைப்படும்.
அவையாவன:
1) கந்தம் – சந்தனம் 2) புஷ்பம் – மலர்கள் 3) தூபம் – ஊதுபத்தி 4) தீபம் – தீபம் 5) நைவேத்யம் – நிவேதனப் பொருள்கள்
4. உபாசனம் அதாவது வழிபாடு ஐந்து வகைப்படும்.
பாஞ்சராத்ர ஆகமத்தின்படி ஐந்து வகை உபாசனம் கீழ் வருமாறு:
1) அபிகமனம் – access – அணுகுதல்
2) உபாதானம் – ஏற்பாடு செய்தல்
3) இஜ்யா – நிவேதனம்
4) ஸ்வாத்யாயா – வேதம் ஓதுதல் (விஷ்ணு சஹஸ்ரநாமம் உள்ளிட்டவற்றை ஓதுதல்)
5) யோகா – யோகம்
ததுபாசனம் பஞ்சவிதம் – அபிகமனம் – உபாதானம் – இஜ்யா- ஸ்வாத்யாய – யோக இதி ஶ்ரீ பாஞ்சராத்ரேபிஹித்தம்
– சர்வதர்சன சங்க்ரஹம் (ராமானுஜர்)
5. கர்மங்கள் ஐந்து வகைப்படும்.
1) நித்ய கர்மம் – தினசரி செய்யப்படுவது
2) நைமித்திகம் – எப்போதாவது செய்யப்படுவது
3) காம்யம் – ஆசைப்பட்டவிஷயத்தை அடைவதற்காகச் செய்யப்படுவது
4) ப்ராயச்சித்தம் – பரிகாரமாகச் செய்யப்படுவது
5) நிஷித்தகம் – தடை செய்யப்பட்டது
நித்யம் நைமித்தகம் காம்யம் ப்ராயச்சித்தம் நிஷித்தகம் |
கர்ம பஞ்சகர்மேதத்தை விஜேயம் வேதவாதிபி: ||
– வேதாந்தசம்ஞாவளி
6. வாசனைகள் ஐந்து வகைப்படும்
1) கஸ்தூரி 2) சந்தனம் 3) கற்பூரம் 4) அகரு – அகர் மரம் 5) மலயாகாருசந்தனம் – மலாயா மலையிலிருந்து வருவது
கஸ்தூரிசந்தனம் சந்த்ரமகரு த்விதீயம் ததா |
பஞ்சகந்தசமாஅக்யாதம் சர்வகார்யேஷு ஷோபனம் ||
7. பாவிகள் ஐந்து வகையாவர்.
அவர்கள் :
அக்னிதன் – இன்னொருவரின் சொத்திற்கு தீயை வைப்பவர்.
காரதன் – மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்
சஸ்த்ரபாணி – நிராயுதபாணியைக் கொல்பவன்
தனாபாஹா _ மற்றவரின் சொத்தைத் திருடுபவன்
க்ஷேத்ரதாராபஹர்தா – மற்றவரின் நிலம் மற்றும் மனைவியை அபகரிப்பவன்
அக்னிதோ காரதச்சைவ சஸ்திரபாணி: தனாபஹ: |
க்ஷேத்ரதாராபஹர்தா ச பஞ்சைதே ஆததாயிந: ||
***