குடந்தைக்கு அருகில் நல்ல ஹோட்டல், குடியிருப்பு (Post.11,798)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,798

Date uploaded in London – –  12 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

குடந்தைக்கு — அதாவது கும்பகோணத்துக்கு — சுமார் ஐந்து மைல் தொலைவில் ஸ்ரீவத்சம் என்ற பெயரில் முதியோர் குடியிருப்பு இருக்கிறது. அங்கே எங்கள் நண்பர் ஸ்ரீனிவாசன் வசிக்கிறார். அவரது அழைப்பை ஏற்று அங்கே தங்கினோம் . இந்த முறை 3 வார இந்திய விஜயத்தில் நான்கு நாட்களை அங்கு செலவிட்டோம்.

இந்தக் குடியிருப்பு — ஹோட்டல்– லாட்ஜ் என்பது முதியோர் இல்லம் ஆகும். இந்துக்கள் மட்டுமே வசிக்கும் இடம். பெரும்பாலும் பிராமணர்கள்தான் அங்கே இருந்தாலும், வெஜிட்டேரியன் விஷயங்களை அப்படியே பின்பற்றும் பிராமணர் அல்லாத சிலரும் வசிக்கிறார்கள். சொந்தக் கட்டிடம் வாங்கியோ அல்லது அறைகளை நீண்ட காலத்துக்கு வாடகைக்கு எடுத்தோ இங்கு பல முதியோர்கள் வசிக்கினறனர்.

மகன்களோ, மகள்களோ வெளிநாட்டில் குடியேறிய பின்னர், வயதான தாய் தந்தையரை இங்கே தங்க வைக்கின்றனர். இது போல சில ஊர்களில் உள்ளது . மேலும் பல குடியிருப்புகள் அவசியம்.

ஸ்ரீ வத்சம் குடியிருப்பில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் சிறிய அளவில் கட்டி வைத்திருக்கிறார்கள் ; சுப்ரபாதங்களும் ஸ்லோகக்ங்களும் காலையில் ஒலிக்கும்.

இந்த complex உள்ளேயே Divine Inn என்ற லாட்ஜும் உள்ளது. அப்பா, அம்மாவைப் பார்க்க வருபவர்களோ, என்னைப்போல நண்பர்களை பார்க்கச் செல்பவர்களோ ‘வசிப்போர் அறை’யிலும் தங்கலாம். பிரைவசி Privacy வேண்டுமானால் அறை எடுத்தும் தங்கலாம். நாங்கள் ஒரு Double Bedroom AC  டபுள் பெட்ரூம் ஏஸி அறை எடுத்து 4 நாட்கள் இருந்தோம். நண்பர் மூலமாகப் போனதால் தினசரி வாடகை 1500 க்குப் பதிலாக 1300 ரூபாய்தான் கொடுத்தோம். ரூ.300 தள்ளுபடி.

xxx

நல்ல பிராமண உணவு

காலை ஐந்தரை மணிக்கு, கும்பகோணம் பில்டர் காப்பி. அதே போல மாலை மூன்றரை மணிக்கும் அசல் பில்டர் காப்பி Filter Coffee . பகல் 12 மணிக்குப் பின்னர் ரசம், சாம்பார், கறியுடன் சாப்பாடு. மாலை 7 மணி வாக்கில் டிபன் என்று சொல்லக்ககூடிய பலகார வகைகள். பெரும்பாலும் வெங்காயம் பூண்டு இராது.

ஆனால் உலகின் பல பகுதிகளில் இருந்து தாய் தந்தையரைப் பார்க்க வருவோருக்கு Divine  Inn டிவைன் இன் மாடியில் சப்பாத்தி, தால் தால் Dhal , புட்கா Putka சஹிதம் சாப்பாடு உண்டு. எப்போதும் கிடைக்கும் இட்லி தோசை பொங்கல் வகையாறாக்களும் இருக்கும். மேலே, கீழே இரண்டு உணவு விடுதிகளிலும் சாப்பிடும் ஐட்டங்களுக்கு ஏற்ப நாம் பணம் கொடுக்கவேண்டும் . நல்ல ஏற்பாடு. அங்கேயே தங்கி வசிப்போர் சாப்பாடு வேண்டாம் என்று உபவாசம் இருக்கும் நாட்களும் உண்டு. அறையிலேயே சாப்பாட்டைப் (Room  Service) பெரும் வசதியும் உண்டு.

xxx

அமாவாசைச் சாப்பாடு

நாங்கள் தங்கிய நாட்களில் (பிப்ரவரி 2023)ஒரு அமாவாசையும் வந்துவிட்டது. நானும் என் சகோதரனும் அறையிலேயே தர்ப்பணம் செய்துவிட்டு மதியச்  சாப்பாட்டுக்குச் சென்றோம். மூன்றே ஐட்டம்கள்தான். சாதம் மோர்க்குழம்பு, வாழைக்காய் கறி (பொடித்தூவல்)

எங்களுக்கு டாக்சி ஓட்டி வந்தவர் பிராமணர் அல்ல. அவரிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில்

Sorry சாரி, நீங்கள் வேண்டுமானால் கும்பகோணம் வரை சென்று உங்களுக்குத் பிடித்த உணவைச்  சாப்பிட்டு வாருங்கள் அல்லது மாடிக்குப் போய் சப்பாத்தி, தால் , புட்கா சாப்பிடுங்கள் என்றேன்.

ஸார் , 15 நாட்களுக்கு கூட நன் பிராமண  உணவைத் திருப்தியாகச் சாப்பிடுவேன் என்றார் .

xxxx

இதைச் சொல்லும்போது வேறு ஒரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. என் தந்தை வெ . சந்தானம் மதுரை தினமணி பத்திரிக்கையின் பொறுப்பு ஆசிரியராக இருந்தார். வீட்டில் கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் தினமணி ஊழியர் அதிகாரிகள் 300 பேர் வரை சாப்பிட வருவார்கள். வெங்காயம், பூண்டு என்பதை பிராமணர்கள் அறியாத காலம் அ து. 300 ஊழியர்களும் ‘அய்யர் வீட்டு சாப்பட்டைப் போல ருசி வேறு எங்கும் இல்லை’ என்று சொல்லி  மனம் மகிழ்ந்து சாப்பிடுவார்கள். இன்றோ வெங்காயம் இல்லாமல் சமைக்க பிராமணர்களுக்குத் தெரியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது .

xxxx

நான் வேலை பார்த்த இடத்தில் இரண்டு சீக்கிய பெண்மணிகளுடன் மதிய உணவுக்குச் செல்வேன். சில நாட்களில் நான் , வெங்காயம் பூண்டு உணவுகளைத் தவிர்ப்பேன். அவர்களும் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள். இது பற்றி ஒரு நாள் சம்பாஷணை Conversation எழுந்தது.

எங்களுக்கு எல்லாம் இந்த இரண்டும் இல்லாமல் சமைக்கத் தெரியாது. அலுவலத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற அடுத்த நிமிடத்தில் சமையல் அறைக்குள்  நுழைந்து எங்களை அறியாமலேயே வெங்கா யம், பூண்டு இவைகளை  வெட்டிவிட்டு பின்னர், இன்று என்ன சமைக்கலாம் என்று யோசிப்போம் என்றார்கள். அதாவது வெங்காயம்- பூண்டு இல்லாத வாழ்க்கை இல்லை.

மீண்டும் ஸ்ரீவத்சத்துக்குத் திரும்புவோம்.தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படிப்போர் ஸ்ரீவத்சம் என்ற சொல்லுக்கு அடுத்த படியாக கெளஸ்துபம் என்ற சொல் வருவதை அறிவார்கள். அந்தக் கெளஸ்துபம் பெயரில் மேலும் ஒரு பெரிய குடியிருப்பு உருவாகிறது. முதலில் ஸ்ரீவத்சம் போய் தங்கி உங்களுக்குத் பிடித்திருந்தால் கெளஸ்துபம் குடியிருப்பில் வீடு வாங்க அப்ளிகேஷன் போட்டு வையுங்கள்.

xxx

டாக்டர் வசதி

வயதானோர் வசிக்கும் இடத்தில் தினமும் உடல் நல பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்காக தினமும் டாக்டரும் இரண்டு நர்ஸுகளும் அங்கே குறிப்பிட்ட நேரத்தில் வருகிறார்கள்.

கும்பகோணத்தைச் சுற்றி 30, 40 கிலோ மீ ட்டர் சுற்று வட்டாரத்தில் 200 கோவில்கள் உள்ளன. ஆகவே யாத்திரைப் பிரியர்களுக்கு இந்த அமைதியான இடம் உதவும். அங்கேயே டாக்சி, ஆட்டோ வசதிகள் கிடைக்கும் என்றாலும், நம்முடைய சொந்த டாக்சியோ அல்லது காரோ இருப்பது அவசியம். நினைத்த நேரத்தில் புறப்பட்டு , இரவில் நினைத்த நேரத்தில் திரும்பலாம். நாங்கள் 4 நாட்களில் 40 கோவில்களையும் அதிஷ்டானங்களையும் தரிசித்து வந்தோம். காலையில் ஒரு ட்ரிப்.Trip ; மாலையில் ஒரு Trip . மதிய நேரத்தில் ஓய்வு.

xxxx

ஒரு சம்ஸயம் ! Doubt!

ஒரு வயதான நபரோ, தம்பதிகளோ இப்படிப்பட்ட இடத்தில் வசித்தால் போர் BOREDOM அடித்துவிடாதா என்ற எண்ணம்/ சந்தேகம் மனதில் எழுந்தது. என் நண்பர் அங்கு ஒன் றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார்.அவரால் வெளியே சென்று வரும் அளவுக்கு உடல் வலு இருப்பதால் ஆக்டி Active வாக உள்ளார். ஆனால் மிகவும் வயதானவர்கள் அங்கேயே பார்த்த முகத்தையே பார்த்துக் கொண்டு வாழவேண்டும். வீட்டில் இருந்தாலும் அதையேதான் செய்யப்போகிறார்கள்.

என் நண்பரிடம் கேட்டேன். இங்கு நீண்ட காலம் வசிப்பவர் எவ்வளவு காலம் இருந்தார் என்றேன். மூன்று ஆண்டுகள் என்று பதில் கொடுத்தார்.

ஆயினும் ஸ்ரீ வத்சம் நிர்வாகம் அவ்வப்போது உபந்யாசம், பாட்டுக் கச்சேரி, யோகா முதலியவற்றை ஏற்பாடு செய்து எல்லோரையும் ஆ னந்தப்படுத்த முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இருந்த நாட்களில் பெரிய சினிமாப்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.

சொந்தமாக வீடு வாங்கி இருப்பவர்கள் அங்கேயே சமைத்துச்  சாப்பிடவும் வசதி உண்டு. சமைக்க விரும்பாதோருக்கு 24 மணி நேரமும் காப்பி, டிபன், சாப்பாடு வசதியும் உண்டு.

கார் அல்லது டாக்சியில் சென்று தாங்கித்தான் பாருங்களேன். காலையிலும் மாலையிலும் கோவில் தரிசனம் கிடைக்கும்

ஸ்ரீவத்சம் என்று  கூகிள் செய்தாலேயே  முழு விவரங்களும் கிடைத்துவிடும் .

Srivathsam II | Home

Srivathsam II

https://www.srestateskumbakonam.com

Text

Description automatically generated

We, SR Estates & SR Realtors – The premium real estate firms based in Kumbakonam have been operating in Kumbakonam and its surroundings for the last 10 years …

Srivatsam Kumbakonam · ‎Contact · ‎Videos · ‎Location

Divine Inn

divineinnkumbakonam.com

http://www.divineinnkumbakonam.com

Divine Inn Kumbakonam, located in a lush green surrounding that too in the River Bank, offers comfort, convenience and a warm welcome for the guests …

Kousthubham, Senior Citizens Homes of Srivatsam near …

HinduPad

https://hindupad.com › kousthubham-srivatsam

17 Nov 2022 — In this Project, they are going to build about 400 flats (approximately), and in this project also, they are going to build temples for Shiva …

–SUBAHAM—

Tags- ஸ்ரீவத்சம், குடியிருப்பு , பிராமணர், முதியோர், கும்பகோணம், Srivatsam, Divine Inn

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: