அப்பர் சொன்ன அற்புத உவமை! (Dumb leading the Blind)- Post No.11,802

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,802

Date uploaded in London – –  13 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குருடன், குருடனுக்கு வழிகாட்டியது போல Blind leading the Blind என்ற உவமையை பைபிளிலும் பிற இந்துமதப் பாடல்களிலும் காணலாம் . சைவப் பெரியார் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் இதைச் சிறிது மாற்றி குருடனுக்கு ஊமை வழிகாட்டியது போல என்று சொல்லிப் பாடுகிறார். ஊமை கண்ட கனவு  என்ற பழமொழியை நாம் அறிவோம். ஆயினும் ஊமை வழிகாட்டுவது போல, அதுவும் கண் பார்வையற்றவனுக்கு,  என்பதை நாம் மனக் கண் மூலம் சித்திரமாகக் கண்டால் அப்பரின் அற்புத உவமை தெள்ளிதின் விளங்கும். உவமை என்பதைச் சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். இதனால்தான் 1500 உவமைகள், சொற் சித்திரங்களைக் கையாண்ட  காளிதாசன் உலகப் புகழ்பெற்றான்

xxxx

இதோ அப்பர்/ திருநாவுக்கரசர் பாடல் :–

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்;

திருமுறை : நான்காம்-திருமுறை; பண் : திருவிருத்தம்

நாடு : தொண்டைநாடு; தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)

எத்தைக்கொண் டெத்தகை ஏழை அமணொ டிசைவித்தெனைக்

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னக் கோகுசெய்தாய்

முத்தின் திரளும் பளிங்கினிற் சோதியும் மொய்பவளத்

தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே.   2

பொருள்

முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே ! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய் ? (Dumb leading the Blind)

குறிப்புரை :

` கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்ன `. உவமம் . கொத்தை – குருடு . மூங்கர் – ஊமையர் . ` என்கண் கொத்தையாக்கினீர் ` ( சுந்தரர் ) ` கண்ணாற் கொத்தை ` ( தொல் . சொல் . வேற் . மூன்றாவது . ` இன்னான் ` என்றதற்குக் காட்டு ) ஏழை – நுண்ணுணர்வின்மை , மூங்கர் :- அமணர் . வழி – கடவுள் நெறி .

–subham—

Tags–  ஊமை, குருடு , கொத்தை, மூங்கை , அப்பர் , உவமை, மூங்கர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: