Post No. 11,814
Date uploaded in London – – 17 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

நாச்சியார் கோவில்(திருநறையூர்) பெருமாள் கோவிலின் பெருமை கல் கருடனால் அதிகரித்துவிட்டது. மரத்தினால், சுதையினால், உலோகத்தினால் அல்லது இவைகளின் கூட்டினால் ஆன கருட வாகனங்களை அறிவோம். முழு கல்லினால் ஆன கருடனை சுமந்து கொண்டுபோவது அதிசயம்தானே . மேலும் இதன் எடை கோவிலின் வெளியே போவதற்குள் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கையால் மேலும் மேலும் தூக்கும் சிப்பந்திகள் அதிகரிப்பது இன்னொரு விசேஷம். இதே ஊரில் பாடல் பற்ற சிவன் கோவிலும் இருப்பது எல்லா இந்துக்களுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலனையும் கொடுக்கிறது.
முதலில் நான் பிப்ரவரி 2023-ல் எப்படிப் போனேன் என்று சொல்லி துவங்குகிறேன் . கும்பகோணத்திலிருந்து இந்த ஊர் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நாங்கள் காரில் சென்றோம். அருகிலேயே சிவன் கோவிலும் இருக்கிறது. கூட்டம் இல்லாத சிவன் கோவில்கள் என்ற தலைப்பில் எழுதிய மூன்று சிவன் கோவிலில் இந்த சிவன் கோவிலும் அடக்கம் .
இப்போது பெருமாளைத் தரிசிப்போம்.
மூலவர் பெயர் – ஸ்ரீநிவாசன் , திருநறையூர் நம்பி, வாசுதேவன் .
நின்ற திருக்கோலம் .
தாயார் வஞ்சுள வள்ளி ( நம்பிக்கை நாச்சியார்) , திருமால் பக்கத்தில் திருமண கோலத்தில் நிற்கிறார்.
ஐந்து தீர்ததங்கள் உள்ளன.

மேதாவி முனிவரின் வளர்ப்பு மகளான வஞ்சுள வல்லியை திருமால் ஐந்து உருவங்களில் மணந்து கொள்கிறார் என்பது நம்பிக்கை .
சிறிதும் பெரிதுமாக 16 கோபுரங்கள் காட்சி தருகின்றன.
பெருமாளுடைய கல் கருட வாகனம் பிரசித்தமானது. ஏழு வியாழக்கிழமைகளில் கருட பகவானை அர்ச்சித்தாலோ தரிசித்தாலோ நினைத்தது நிறைவேறும் என்பதால் நிறைய பக்தர்கள் வருகிறார்கள் .சந்நிதியில் 4 பேர் தூக்கும் கருட வாகனத்தை இறுதியில் 64 பேர் தூக்கிச் செல்லுவார்கள்; கல் கருடனுக்கு தனி சந்நிதி உள்ளது.
கருட சேவையின்போது, பெருமாள் கல் கருடன் வாகனத்திலும் தாயார் அன்ன னாவாகனத்த்திலும் பவனி வருவார்கள்.
திருமங்கை ஆவார் பாடிய திருத்தலம் . 108 திவ்ய தேசங்களில் ஒன்று
கருட பட்சிகள் மரணம்
திருக்கோயில் நந்தவனத்தில் நீண்டகாலமாய் வசித்து வந்த கருட பட்சிகள் 1999ம் ஆண்டில் முக்தி அடைய அங்கேயே அடக்கம் செய்யப்பட்டன.. இவை நமக்கு திருக்கழுகுக் குன்ற கழுகுகளை நினைவுபடுத்தும்
108 திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின் விக்ரஹங்கள் எல்லாவற்றையும் இந்தக்கோவிலில் ஒரு சீராகக் காணலாம் என்று லிப்கோ பாதிப்பு கூறுகிறது.
அருகில் திரு நாகேஸ்வரம், அழகாபுத்தூர் கோவில்கள் உள்ளன. இதே ஊரில் பாடல் பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது.

—subham—
Tags-நாச்சியார் கோவில், கல் கருடன், பெருமாள், கருட பட்சிகள் , மேதாவி முனிவர் , திவ்ய தேசம்