
Post No. 11,815
Date uploaded in London – – 17 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நகைச்சுவை ததும்பப்பேசி ஆன்மீக உண்மைகளை ஆழப்பதிக்கும் உபந்யாசகர் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் ; அவர் பட்டினத்தார் பற்றிய சொற்பொழிவின் இடையே சொன்ன விஷயம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் – என்கிறார் வள்ளுவர்.
இன்பம்- துன்பம் நிறைந்தது சம்சார சாகரம். சம்சாரம் என்றால் மனைவி என்று சொல்லுகிறோம். சம்சாரம் என்றால் இல்லறம். அதை நீந்திக் கடக்கவேண்டும். நாம் உண்மையில் பிறந்தநாள் முதல் மூன்று கப்பலில் பயணம் செய்து அதைக் கடக்கவேண்டியிருக்கிறது. இறுதியில் அதைக் கடக்க உதவுவதும் ஒரு கப்பல்தான்.
ஆங்கிலத்தில் கப்பல் என்றால் SHIP ஷிப்.
முதலில் நமக்கு அறிமுகம் ஆவது தாய், தந்தை மற்றும் சித்தப்பா, அத்தை, மாமா , மாமி. அதாவது பிறந்தவுடனேயே ரிலேஷன்ஷிப் RELATIONSHIP என்னும் கப்பலில் குதிக்கிறோம். இவர்களில் யாரையாவது எனக்குப் பிடிக்கவில்லை என்று மாற்ற முடியுமா? மாமா, மாமா தான் ; அத்தை அத்தைதான். அந்த ரிலேஷன்ஷிப் என்ற சொந்த பந்தத்தை தமிழில் சொந்தக்காரர்கள்- உறவினர்கள் என்போம். இது முதல் SHIP கப்பல்=ஷிப்.
கொஞ்சம் வளர்ந்து பள்ளிக்கூடத்துக்குப் போனால் அங்கே நாம் மாட்டிக்கொள்வது FRIENDSHIP ப்ரண்ட்ஷிப்ப்பில். அது ஒரு கப்பல்= ஷிப். அதிலிருந்தும் மீள்வதில்லை ; அது அலுவலகம்வரை தொடர்கிறது.
பின்னர் இல்லறத்தில் நுழைகிறோம். . அங்கு நமக்குக் கிடைப்பதோ வாழ்க்கைத் துணை ; அதாவது PARTNERSHIP பார்ட்னர்ஷிப் ; மனைவி .
இவர்கள் யாரும் நாம் இறக்கும்போது கூட வரப்போவதில்லை. அதற்குப்பின் நமக்கு உதவ இறைவன் இருக்கிறான். அவனை அடையவும் ஒரு ஷிப் – கப்பல்தான் — உதவும். அதுதான் WORSHIP வொர்ஷிப் – இறை வழிபாடு.
பட்டினத்தார் போன்றோர் இப்போதே அவனை நினை என்கிறார்.

Xxxx
திருவெண்காடர்
பட்டினத்தாரின் பெயர் திருவெண்காடர் ; அவர் கோடீஸ்வரனாக இருந்த காலையில் , தன்னுடைய வெளிநாட்டு கப்பல் பிஸினஸ் (Maritime Trade) நிமித்தமாக அதிகாரிகளை சென்றுபார்த்தார். அந்த நாட்டு அரசனைச் சென்று பார்த்தார். அவர்கள் எல்லோரும் அதிகார தோரணையில் அமர்ந்து இருக்க, பட்டினத்தார் நின்ற நிலையில் தன் கோரிக்கைககளை முன்வைத்தார்.
பட்டினத்தார் முறும் துறந்த முனிவராகி, கோவணத்துடன் ஊருக்கு வெளியே அமர்ந்திருந்தகாலையில் , அதே அதிகாரிகள் வந்து ,
திருவெண்காடரே ; இப்படி பாதியில் பிசினஸ்ஸை விட்டுப் போகலாமா ? இதில் என்ன லாபம் என்றனர்.
நான் இதற்கு முன்னர் பிசினஸ்மேன் (Businessman) என்று வந்த போது நீங்கள் உட்கார்ந்து இருந்தீர்கள்; நான் கைகட்டி வாய்பொத்தி நின்றுகொண்டு பேசினேன். இன்று பாருங்கள்; நான் அமர்ந்து ஆனந்தமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் – என்றார்.
Xxxx
LOAN லோன் – கடன் — தொல்லையிலிருந்து வழிபட மந்திரம்
நம்மில் யாராவது கடன் இல்லாமல் இருக்கிறோமா?
வீட்டுக் கடன், போன் கடன், கார் கடன், ஸ்கூட்டர் கடன், எஜூகேஷனல் லோன் (கல்விக்கடன்), திருமணக் கடன் என்று இறுதிவரை லோன்- கடனில் சிக்கித் தவிக்கிறோம். ஆனால் வெளியே பேசும் போது என் வீடு, என் கார் என்கிறோம். போன் கட்டணம் செலுத்தாவிடில் அது கூடப்பேசாது.
வாழ்நாள் முழுதும் நமம்மைத் தொடர்ந்து வரும் கடனை LOAN ஒழிக்க இரண்டு லோன்கள் LOANS உள்ளன. அதை நாடுங்கள்; கடன் விடுபடும்
ஒன்று மாலோன் = திருமால் MAA+ LOAN
இன்னொன்று மயிலோன் = முருகன் MAYIL + LOAN
மாலோனையும் மயிலோனையும் வழிபட்டால் பிறவி LOAN லோன் = பிறவிக் கடனிலிருந்து விடுபடலாம்.
Xxxx
L I C
எல் ஐ சி என்ற அமைப்பு இருக்கிறது; யோகக்ஷேமம் வஹாம்யஹம் என்று பெரிதாக எழுதிப்போட்டு இருக்கிறார்கள்; எனக்கே புரியவில்லை. பணம் கட்டு; நீ போனால் …….. (செத்துப் போனால்) இவ்வளவு கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள்; இருக்கும்போது பயன்படுத்த பணம் இல்லாமல், (செத்துப்) போனால் கிடைக்கும் பணம் எதற்கு?
கையெழுத்துப் போடப் போகும்போது உன் நாமினி NOMINEE யார் என்று கேட்கிறார்கள் ; கூடவே வந்த மாமி (நீ) இதோ நான்தான் நாமினி இருக்கிறேனே என்கிறாள்; கணவன் போனபின்னரும் நீண்ட நாள் வாழ்வோம் என்று நம்புகிறார்கள்!
( அவர் சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்; சில சொற்கள் என்னுடையதாக இருக்கலாம்; ஒரிஜினல் உபன்யாசத்தை யூ டியூப் முதலிய சேனல்களில் காணவும்; இன்னும் சுவையாக இருக்கும்.)
Xxxx subham xxxxx
TAGS– மா லோன், மயிலோன், பட்டினத்தார், மூன்று ஷிப் , கப்பல், திருச்சி, கல்யாணராமன், உபந்யாசம், லோன், Loan, Ship, Relationship, Partnership, Friendship