
Post No. 11,819
Date uploaded in London – 19 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் மார்ச் மாத இதழில் (March 2023) வெளியாகியுள்ள கட்டுரை!
How Food Powers Your Body
உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 4
ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)
தமிழில் : ச.நாகராஜன்
நாம் உண்ட பின்னர் நடக்கும் ஆச்சரியங்கள்!
ஆச்சரியகரமான இந்தப் பிரித்தெடுத்தலானது நாம் உணவை விழுங்குவதற்கு முன்னரேயே நடக்கிறது, ஏனெனில் வாயில் உள்ள உமிழ்நீர் அதை ஸ்டார்ச்சாக தூளாக்குகிறது. உணவு ஜீரணம் ஆவதற்கு முன்பேயே நாம் திருப்தி அடைகிறோம், ஏனெனில் நமது வாய் நமது மூளைக்கு ஆற்றல் வருகிறது என்று சொல்கிறது. சில குறைந்த கால சேமிப்புகளை வெளி விடுவது பாதுகாப்பானது என்றும் சொல்கிறது.
இந்தச் சமயத்தில் வயிற்றில் உள்ள அமிலங்களும் சிறுகுடலில் உள்ள என்ஜைம்களும் எது வந்ததோ அதை செயலாக்கம் செய்ய ஆரம்பிக்கின்றன. அவை தங்கள் வேலையை முடித்து விடும் போது உணவில் உள்ள ஆற்றல் மிகு பேரணுக்கள் (molecules) தங்களது அமைதியற்ற எலக்ட்ரான்களை திருப்பி மாற்றி அமைத்து குளுகோஸாக திரட்டிக் கட்டுகிறது. அதாவது சாதாரண ஜீனியாக!
குளுகோஸ் என்பது ஒரு இரசாயனம் கொண்ட ஷிப்பிங் கண்டெய்னர் என்று கூறப்படும் கப்பல் சரக்குக் கொள்கலம் (Shipping container) போல! அது எலக்ட்ரானை எடுத்துச் செல்ல ஒரு அருமையான ‘ஏற்றி செல்லும் வாகனம்’ போல. இதற்கு ஒரு காரணம் அதன் உச்ச பட்ச திறன் மற்றும் அது வசதியாக வடிவம் கொண்டது, சுலபமாக கிடைப்பது. அதுமட்டுமல்ல அது வழக்கத்தை விட அதிகம் கரையும் ஒன்றாகும். அதாவது இரத்தஓட்டத்தில் மிகச் சிறப்பாக பயணப்படுவதாகும். மேலும் அது கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ளதாகும். ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்கள் உயரிய எதிர்வினை கொண்டவை – அதனால் தான் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் தொட்டிகள் (tanks) எளிதில் தீப்பற்றக் கூடியது என்ற அடையாளக் குறிகளைக் கொண்டிருக்கும் – மேலும் பல நிலையற்ற எலக்ட ரான்கள் ஒவ்வொரு கார்பன் அணுவையும் மற்ற பேரணுக்களுக்கும் நகர்வதற்கான ஆவலுடன் சுற்றுகிறது. கணிக்க முடியாத படி ஆற்றல் தேவைகளைக் கொண்டுள்ள நமது மூளைகள், நியூரான் செயல்பட ஆரம்பித்தவுடன் பெரிய மிக அதிக தேவையை உருவாக்குகிறது – பிரத்யேகமாக ஆற்றலுக்காக குளுகோஸை நம்பி!
மிக அதிக வளர்சிதை மாற்றத்தை மற்ற எந்த விலங்கினத்தையும் விட அதிகம் கொண்டிருக்கும் ஹம்மிங்பேர்ட் பறவைகள் தன்னுடைய இறக்கைகளுக்கு உடனடியாக தீனியைத் தருகின்றன, அவை சுத்தமான குளுகோஸையும் சுக்ரோஸையும் (கரும்பில் உள்ள முக்கியப் பொருள்) கலந்து உடனடியாக அனுப்புகின்றன. குளுகோஸ் நமது உயிரணுக்களைச் சென்று அடையும் போது – கப்பல் கண்டெய்னர் போல அல்லாமல் அவை முறையாகப் பிரிக்கப்படுகின்றன.
ஒரு தொடர் போன்ற எதிர்வினைகள் உயரிய ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்களை உரித்தெடுத்து அவற்றை சிறிய “ஏந்திச் செல்லும் பேரணு”வை உருவாக்கப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு ஒரு பெயர் தனியே உண்டு. அது தான் என் ஏ டி ஹெச் – NADH!
குளுகோஸ் ஒரு கப்பல் கண்டெய்னர் போல என்று கொண்டோமானால், NADH (கண்டெய்னரிலிருந்து பொருள்களை எடுத்து) டெலிவரி செய்யும் லாரிகள் என்று கொள்ளலாம். இப்படி லாரிகளில் எலக்ட்ரான்களை ஏற்றி விடுவது க்ளைகோலிஸிஸ் என்று கூறப்படுகிறது. இது மிகப் பழமையானது. உண்மையில் ஈஸ்ட் திசுக்கள் (Yeast) ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் க்ளைகோலிஸிஸ் ஏற்படும் போது அது ஃபெர்மெண்டேஷன் (புளிப்பேறுதல்) என்று சொல்லப்படுகிறது. உங்கள் தசைகள் அவற்றின் எல்லைக்குத் தள்ளப்பட்ட்டால், உங்கள் இரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லை என்றால், உங்கள் உயிரணுக்கள் (செல்) குளுகோஸை ஆற்றல் உற்பத்திக்காக தற்காலிக அளவாக ஃபெர்மெண்ட் (புளிப்பேற்றம்,) செய்கிறது.
இதில் ஆக்ஸிஜன் உட்படுத்தப்பட்டால் உடைந்து தூளாகும் குளுகோஸ் இன்னும் அதிகமாக சுத்தப்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜனானது எலக்ட்ரான் மீது தீராப் பசி கொண்டதாகும். அதன் வெளி உறைகள் முழு அமைப்பாக ஆவதற்கு இன்னும் இரண்டே இரண்டு தான் தேவை! அதன் விளைவாக க்ரெப் சுழற்சி மூலமாக அவற்றை இழுக்கிறது. அது தான் உண்மையான வளர்சிதை மாற்றத்தில் ஆற்றல் சேமிப்பகம்.
இந்த சுழற்சியே சற்று சிக்கலானது.. அது மாணவர்களை பேரதிர்ச்சி தருவதை நோக்கமாகக் கொண்டது போன்ற பல இரசாயன சூத்திரங்களின் தொடரைக் கொண்டது. ஆனால், முக்கிய விஷயம் என்னவெனில் குளுகோஸ் இரண்டாக உடைக்கப்படுகிறது. அதன் இரு பகுதிகளும் ஒரு தொடர் எதிர்வினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த எதிர்வினைகள் அவற்றை பாகங்களிலிருந்து உரிக்கின்றன. பின்னர் அவற்றின் முதுகெலும்புகள் மறுபடியும் இன்னொரு சுழற்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய விஷயம் என்னவெனில், போகின்ற வழியில் ஆற்றல் மிகு எலக்ட்ரான்கள் உரிக்கப்படுகின்றன; பின்னர் இன்னும் அதிக NADHகளில் ஏற்றப்படுகின்றன – க்ளைகோஸிஸில் மட்டும் இருப்பதை விட இன்னும் அதிகமாக!
அநேகமாக ஆற்றல் எதுவும் வெப்பத்தில் இழக்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக அது பாதுகாக்கப்பட்டு உருமாற்றப்படுகிறது. அதுபோலவே, குளுகோஸில் அதிக சுற்றுப்பாதையைக் கொண்ட எந்த ஒரு எலக்ட்ரானும் NADHகளில் தனது முழு ஆற்றலுடன் சமநிலையில் இருக்கும்.
தொடரும்………………………………………..