திருச் சேறை கோவில்களைத் தரிசிப்போம் (Post No.11,820)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,820

Date uploaded in London – –  19 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கும்பகோணத்திலிருந்து சுமார் 25  கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை இருக்கிறது. இங்கு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்கின்றன.

சம்பந்தரும் அப்பரும் பாடிய இத்திருத்தலத்தில் குடிகொண்டுள்ள ஈசனின் பெயர் செந்நெறி அப்பர்.

தேவியின் பெயர்- ஞானாம்பிகை

தீர்த்தம் – மார்க்கண்டேய தீர்த்தம்,

ஸ்தல விருட்சம் – மாவிலங்கை மரம்

தெளம்ய ரிஷி பூஜித்த கோவில் .

கும்பகோணத்திலிருந்து சென்றால் அரிசிற்கரை புத்தூர், திருநறையூயூர் தலங்களையும் தரிசிக்கலாம். போகும் வழியில் பெரிய விஷ்ணு / பெருமாள் கோவில்களும் இருக்கின்றன.

திருவாரூரில் தங்கியும் தரிசித்து வரலாம்.

XXX

திருச் சேறை பெருமாள் கோவில் , மற்றுமொரு விஷ்ணு தலமான நாச்சியார் கோவிலிருந்து (கல் கருடன்) 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது . வைணவ பக்தர்கள் இவ்விரு  தலங்களுடன் உப்பிலியப்பன் பெருமாளையும் அடுத்தடுத்து தரிசிக்கலாம்.

திருச் சேறை, பஞ்ச ஸார க்ஷேத்ரங்களில் ஒன்று .இது முடிகொண்டான் ஆற்றுக்கும், குடமுருட்டியாற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. .

குடவாசல் அருகிலுள்ள பெரிய ஊர்.

மூலவர் – ஸாரநாதன் , நின்ற திருக்கோலம், கிழக்கே பார்த்து நிற்கும் பெருமாள்.

தாயார் -ஸாரநாயகி , பஞ்ச லக்ஷ்மி

தீர்த்தம் – ஸார புஷ்கரிணி

காவேரி அம்மனுக்கு பெருமாள் காட்சி தந்ததால், குளக்கரையில் காவேரி அம்மனுக்கும் ஒரு சந்நிதி உள்ளது.

பிரம்மாவும் விஷ்ணுவும் இங்கு அம்மனைத் தரிசிப்பதாக இருப்பது ஒரு அபூர்வம் ஆகும் .

xxxx

உலகில் எல்லா நதிகளையும் கடவுளாக வணங்குவதும் , தாயாக வணங்குவதும் இந்துக்கள் மட்டுமே. இந்துக்கள் இந்த நாட்டிலேயே தோன்றி இந்த நாட்டிலேயே வளர்ந்ததால் அவர்களுக்கு ‘நீர்’ WATER IS GOD ஒரு கடவுள். வேறு எந்த மதத்திலும்  பிறப்பு முதல் இறப்பு வரை  தண்ணீர் பயன்படுவதில்லை . நீர் Water Mantras மந்திரங்கள் உலகின் மிகப் பழைய புஸ்தகமான ரிக்வேதத்திலேயே உள்ளன ஆரிய – திராவிட வாதம் பேசும் வெளிநாட்டுக் கும்பல்களுக்கு செமை அடி கொடுப்பது கோவில் தீர்த்தங்களும், காவேரி, கங்கை நதி தேவதை வழிபாடுகளும் ஆகும்.

xxxxx

திருச் சேறை பெருமாள் கோவிலில் , தைப்பூச காலத்தில் பிரம்மோற்சவம் நடக்கும். அப்போது தேரில் ஸ்ரீ தேவி பூ தேவி , நீலா தேவி, மகா லட்சுமி, சார நாயகி ஆகிய ஐந்து தேவியாருடன் பெருமாள் பவனி வருவார்.

பிரளய காலத்தில், இவ்வூரின் கெட்டியான மண்ணைக்கொண்டு செய்யப்பட கடத்தில் (Mud Pot) வேதங்களை வைத்துக் காப்பாற்றியதாக தல புராணம் சொல்லும் .

பெருமாள் மீது திருமங்கை ஆழ்வார் 13 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்துள்ள தலம் இது.

புஷ்கரணியின் மேற்குக்கரையில் ஆஞ்சனேயர் கோவிலும் இருக்கிறது. ஈசான்ய திசையில் ஸாரபரமேஸ்வரர் (செந்நெறியப்பர்- சிவன்) கோவில் இருக்கிறது.

xxx

பஞ்ச ஸார க்ஷேத்ரம் என்றால் என்ன?

இங்கு சாரநாதன், சாரநாயகி, சார புஷ்கரிணி, சார விமானம் , சார க்ஷேத்ரம் இருப்பதால் இப்படிப் பெயர் பெற்றது .

சார = சேறு

இது திருச் சேறை என்ற பெயருடன் தொடர்பு உடையது

பிரம்மா இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கான உபகரணங்களை வைப்பதற்காக ஒரு பானை செய்த போது அது உடைந்து கொண்டே இருந்ததாகவும் இறுதியில் விஷ்ணுவின் கட்டளையின் பேரில் இந்த ஊர்ச் சேற்றைக் கொண்டு கட்டம்/ பானை செய்தபோது அதுநிலைத்து நின்றதாகவும் அதனால் இந்த இடம் திருச் சேறு என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது .

Xxxx

திருச் சேறை பெருமாள் கோவிலில், ராஜ கோபால சுவாமிக்கும் சந்நிதி இருக்கிறது. இது பற்றியும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரின் உத்தரவின்பேரில் அவருடைய மந்திரி நரச பூபாலன் மன்னார்குடியில் ராஜ கோபால சுவாமிக்கு  கோவில் எழுப்புகையில் , அந்தக் கோவிலுக்காக  வாங்கிய கற்களில் ஒவ்வொரு பெரிய கருங் கல்லை சாரநாதன் கோவில் கட்டவும் இறக்கியதாகவும் இதை ஒற்றர் மூலம் அறிந்து நாயக்க மன்னர் வந்த போது , அவரது கோபத்தைத் தணிக்க இங்கும் ராஜ கோபாலருக்கு சந்நிதி எழுப்பியதாகவும் செவி வழிச் செய்தி கூறும்.

xxx

நாச்சியார் கோவில், திருச்சேறை முதலிய தலங்களுக்குச் செல்லும் இந்துக்கள் அடுத்தடுத்து ‘பாடல்பெற்ற’ , ‘மங்களாசாஸனம்’ செய்யப்பட தலங்களை தரிசித்துக் கொண்டே செல்லலாம்.

அடியேனும் இவ்வாறு பிப்ரவரி 2023ல் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்

–சுபம்–

Tags- திருச் சேறை , பெருமாள் கோவில் , சிவன் கோவில்,சாரநாதன் , செந்நெறி அப்பர் , நீலாதேவி, பஞ்ச ஸார க்ஷேத்ரம்    .

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: