குடந்தை சக்ரபாணியும் சாரங்கபாணியும் (Post No.11,824)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,824

Date uploaded in London – –  21 MARCH 2023                  

Contact –swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருமங்கை ஆழ்வார் அருளிய திரு எழு கூற்றிருக்கை 

கும்பகோணத்துக்கு பிப்ரவரி 19, 2023 அன்று மதியம் 3 மணிக்குச் சென்றோம். இரவு எட்டரை மணிக்குள் 6 கோவில்களைத் தரிசித்தோம். அதாவது ஒரே கல்லில் ஆறு மாங்காய்கள் !

ராமசாமி,சக்ரபாணி, சாரங்கபாணி , கரும்பாயிரம் பிள்ளையார் , நாகேஸ்வரர், கும்பேஸ்வரர் கோவில்கள்.

கும்பகோணத்திலும் சுற்று வட்டாரங்களிலும் உள்ள கோவில்களைத் தரிசிக்க பல வாரங்கள் தேவைப்படும்.

முதலில் சாரங்க பாணி கோவிலையும் சக்ரபாணிகோவிலையும் தரிசிப்போம்.

குடந்தை சாரங்கபாணி கோவிலுக்கு பாஸ்கர க்ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

மூலவர் சாரங்க பாணி, ஆராவமுதன்

தாயார் – கோமளவல்லி , படிதாண்டாப்பத்தினி

ஹேம ரிஷியின் புதல்வியாகத் தோன்றிய கோமளவல்லியை பெருமாள் மணந்ததாக ஐதீகம்

 தீர்த்தம் –ஹேம புஷ்கரிணி (பொற்றாமரை)

திருமங்கை ஆழ்வார் அருளிய திரு எழு கூற்றிருக்கை 

 இங்கு சயன திருக்கோலத்தில் இருந்தாலும் இந்த வடிவம், உத்தான சாயி என்று அழைக்கப்படுகிறார். திருமழிசை ஆழ்வாருக்காக “கிடந்தவாறு எழுந்திருக்க ” முயலும் நிலையில் இருப்பதால் இந்தப் பெயர்.

பெருமாளுக்கு எதிரே நதி தேவதைகள்  வணங்குவது  இந்தக் கோவிலின் சிறப்பு.

இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், நாதமுனிகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுக்கத் துவங்கியதும் இங்குதான். திருவா

ய்மொழிகளைக் கேட்டவுடன் அவருக்கு இந்த எண்ணம் உதித்தது.

மேலும் ஒரு சிறப்பு திருமழிசை ஆழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்குத் தரிசனம் கொடுத்ததாகும். இந்தக் கோலத்தைக் கருவறையில் காணலாம்.

பெருமாளின் சித்திரைத் தேர் மிகவும் பிரசித்தமானது. பெருமாள் சந்நிதியே தேர் வடிவ மண்டபத்தல் சக்கரங்களுடன் காணப்படுகிறது  மஹேந்திர பல்லவனால் கட்டப்பட்ட மண்டபமும் இருக்கிறது.

ஆழ்வார் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும்  தொகுத்த நாதமுனிகள் பெருமாளை ஆராவமுதாழ்வான் என்று போற்றினார் . நம்மாழ்வார் திராவிட சுருதி தர்சகர் என்கிறார்.

ஏழு ஆழ்வார்கள் 51 பாசுரங்கள் பாடி மங்களா சாஸனம்  செய்த பெருமை உடையது.

Xxxx

சக்ரபாணி கோவில் 

சக்ரபாணி கோவிலில் , பெருமாள் அஷ்ட புஜங்களுடன் காட்சி தருகிறார்.சாரங்க பாணியும் சக்ர பாணியும் சகோதர்கள் என்று கருதப்படுவதால் பல உற்சவங்கள் சேர்த்து நடைபெறுகின்றன.

தாயார் விஜயவல்லி , சுதர்சனவல்லி

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது

xxxx

12 கருட சேவை

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.

 முதலாம் சரபோஜியின்  (கி.பி.1712-1728) பித்தளை உருவம்  கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையில்  உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது.

விஷ்ணுவுக்கு 3 கண்கள்

மூன்று கண்களுடன் ஸ்ரீ சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சூரிய பகவான், பிரம்ம தேவர், அக்னி பகவான், மார்க்கண்டேயர் போன்றோர் வழிபட்ட தலம் இது.

–subham— 

Tags –  சக்கரபாணி , சாரங்க பாணி, நாதமுனிகள், திவ்வியப்பிரபந்தம், கும்பகோணம், கோவில், முக்கண் , 12 கருட சேவை, திருமங்கை ஆழ்வார் , திரு எழு கூற்றிருக்கை 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: