
Post No. 11,827
Date uploaded in London – – 22 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குடந்தைக் கோவிலைக் காண்பதற்கு –வண்ணக்கிளியே
ராமசாமி கோவிலைக் காண்பதற்கு –வண்ணக்கிளியே
என்று பாடத் தோன்றுகிறது . முதலில் பக்தியுடன் ராம பிரான் குடும்பத்தைப் பார்த்து, ரசித்து, , பக்தி செலுத்திவிட்டுப் பின்னர் ராமாயணக் காட்சிகளைக் காட்டும் சிற்பங்களையும் சித்திரங்களையும் மணிக்கணக்கில் ரசிக்கலாம் .
ஆயினும் பிப்ரவரி 19ம் தேதி (2023) தேதியன்று 5 மணி நேரத்துக்குள் ஆறு கோவில்களை பார்க்கத் திட்டமிட்டதால். என்னுடைய I pad ஐ பேட் மூலம் முடிந்த மட்டும் படம் பிடித்தேன் .
(ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே ….
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே- பாவை விளக்கு திரைப்படப் பாடல்).
XXX

முதலில் ராமசாமியைத் தரிசிப்போம். மாலை நாலரை மணி வாக்கில் கோவிலுக்குள் நுழைந்துவிட்டோம். பட்டாசார்யார் சரியாக 5 மணிக்கு சந்நிதியைத் திறந்தார். அற்புத தரிசனம்.
ராமன் பட்டாபிஷேகக் காட்சியில் லக்ஷ்மணன், சீதா தேவி, பாரத, சத்ருக்னன் ஆகியோரை ஒருங்கே காணலாம். அவர்கள் சாமரம் வீசிக்கொண்டிருக்க ஆஞ்சநேயர் வீணாகானம் செய்கிறார். ராமாயண பாராயண புஸ்தகமும் வைத்திருக்கிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, இலக்குமணன் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து காட்சி தருகிறார். இது தஞ்சை நாயக்கர் காலத்தில் தோன்றிய கோவில். ஆகையால் மங்களாசாசனம் செய்யப்படவில்லை; அதாவது ஆழ்வார்கள் அறியாத புதிய கோவில் இது. சுமார் 500 ஆண்டுக்குட்பட்டதே . ஆனால் உருவத் திருமேனிகள் கம்பீரமாகக் காட்சி தருகின்றன. பார்த்தால் மறக்க முடியாத அற்புத வடிவங்கள்.
xxxx

கோவிலா ? கலைக்கூடமா ?
சந்நிதிக்கு முன்னர் உள்ள மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. அங்கு ராமாயணக் காட்சிகளையும் தசாவதார உருவங்களையும் தனித் தனியே தூண்கள் தோறும் காணலாம்.
பிரகாரத்தில் ராமாயணக் கதையை சித்திர ராமாயணமாக வரைந்து வண்ணமும் தீட்டியுள்ளனர். ஒவ்வொரு படத்தையும் ராமாயணக் கதை அறிந்தவர்கள் நன்றாக ரசிக்கலாம்.
சிற்பங்களுடன் சுமார் 60 தூண்களும்,, சுவர்களில் 200 சித்திரங்களும் இருக்கின்றன.
XXXX

இந்த இடத்திற்கு இன்னும் கொஞ்சம் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவை. சித்திரங்களை நெருங்காமல் இருக்க கயிறு கட்டி இருக்கிறார்கள். அது படம் எடுப்பதை பாதிக்கிறது . சில அடி தூரத்தில் கம்பி வேலி போட்டால் படங்களையும் பாதுகாக்கலாம் . மற்றவர்கள் படமும் எடுக்கலாம். கோவில் நிர்வாகமே அங்குள்ள சிற்பங்களையும் படங்களையும் அச்சிட்டு விற்கலாம்.
100 MORE PICTURES ARE COMING
—SUBHAM—

TAGS– ராமசாமி கோவில், கும்பகோணம், ராமாயண, சிற்பங்கள், சித்திரங்கள்