
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,847
Date uploaded in London – 28 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நித்யானந்த மர்மம்!
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 1
ச.நாகராஜன்
டைம்ஸ் ஆஃப் இந்தியா 26-3-2023 தேதியிட்ட இதழில் ஒரு புதிய “நாடு” பற்றிய சுவையான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
நம்புவதும், நம்பாததும் படிப்பவரது இஷ்டம்.
ஆனால் அது சுட்டிக் காட்டும் கைலாஸ நாடு நம்மை, புல்லரிக்க வைக்கிறது.
செய்தித் தொடரில் சில முக்கிய விஷயங்கள் :
விஜயப்ரிய நித்யானந்தா!
பெயரைச் சொன்னாலே உருகிப் போகும் பக்தர்கள் கூட்டம் ஒரு புறம்.
ஆள் எங்கே என்று பிடிக்க அலையும் அதிகாரிகள் கூட்டம் மறுபுறம்.
கற்பழிப்பு, குழந்தைக் கடத்தல், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் சித்திரவதை செய்தல் உள்ளிட்ட இன்ன பிற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தா இந்தியாவை விட்டு 2019ஆம் ஆண்டு தப்பி ஓடினார்.
இன்று வரை ஆளைப் பிடிக்க முடியவில்லை.
தன்னைத் தானே இந்து மதத்தின் உயரிய சாமியார் என்று கைலாஸா நாட்டில் அறிவித்துக் கொண்டார் அவர். (Supreme Pontiff of the Hindu country KAILASA) தன்னை ஹிந்துக்களை எதிர்க்கும் கூட்டம் அழிக்கப் பார்க்கிறது என்றும் அவர் கூறினார். அவரது பக்தர்கள் அதை ஆமோதித்தனர்.
அவரை உலகம் வியப்புடன் பார்க்கிறது. ஏன்?
குரங்குகள், சிங்கங்கள், புலிகள், பசுக்கள் ஆகியவற்றைத் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒரு வருடத்திற்குள் பேச வைப்பேன் என்று அவர் உறுதி மொழி கூறினார்.
சூரியனை நாற்பது நிமிடங்கள் தாமதமாக தான் உதிக்க வைத்ததாக அவர் கூறினார்? ஏன் இந்த தாமதம்? ஏனென்றால் அவர் தியானம் செய்து கொண்டிருந்தாராம். ஆகவே சூரியனும் அவருக்கு கீழ்ப்படிந்து நடந்ததாம்!
பூமியைப் பற்றி இதுவரை யாரும் அறியாத ரகசியங்களை அவர் தெரிவிக்கப் போகிறாராம். அயல்கிரகவாசிகள், நாம் இதுவரை காணாத நாகரிகங்கள் நமது பூமியில் உண்டாம்!
அவரது “ME” வாக்கியம் பிரசித்தி பெற்ற ஒன்று. அது என்ன “ME” வாக்கியம்? இதோ:
‘ME’ resides in ‘me’ is residing in all of that as ‘me’, so that ‘me’ through this ‘me’, is talking to ‘me’.
கைலாஸா நாடு எங்கு இருக்கிறது.
அது இருக்கிறது, ஆனால் இல்லை!
அதாவது உலக வரைபடத்தில் நீங்கள் அந்த நாட்டைப் பார்க்க முடியாது.
அது இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது. ஆனால் அங்கு செல்ல விமானத்தில் மட்டும் போக முடியும்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா என்று தங்கள் நாட்டைப் பற்றி அந்த நாட்டின் குடி மக்கள் கூறுகின்றனர்!
அது ஒரு முக்கோண வடிவக் கொடியைக் கொண்டுள்ளது. நித்யானந்தா மற்றும் நந்தியை அடையாளமாச் சின்னமாக (Emblem) அது சித்தரிக்கிறது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸாவிற்கு தேசிய கீதம் ஒன்று உண்டு.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸாவிற்கு அரசியம் சட்டமும் உண்டு.
கல்வி, சுகாதாரம், வீடு அமைப்பும் உள்ளிட்ட 15 அரசு இலாகாக்கள் அங்கு உள்ளன.
அதனுடைய புழக்க நாணயத்தின் பெயர் ஸம்ஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா. ஆங்கிலத்தில் கைலாஸியன் டாலர்.
ஹிந்து பக்தர்களின் நாணயப் புழக்கத்திற்கென அந்த நாட்டில் ஒரு ரிஸர்வ் வங்கியும் இருக்கிறது.
‘இலவச ஆன்மீக சேவைக்காக’ (free spiritual services) அது கூகில் (Koogle) வழியே மின் பாஸ்போர்ட்களையும் (e-passports) வழங்குகிறது.
*** தொடரும்