
Post No. 11,853
Date uploaded in London – 30 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்!
ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து எழுவார்களா? – 1
ச. நாகராஜன்
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
செகுலரிஸத்திற்கு பலிக் கடா ஆனவன் ஹிந்து!
செகுலரிஸம் என்றால் மதச் சார்பின்மை.
1947ஆம் ஆண்டிலிருந்து செகுலரிஸம் என்றால் ஹிந்துக்கள் மற்ற மதத்தினருக்கு அசாத்திய சலுகைகள், முன்னுரிமைகள் கொடுக்க்ப்பட வேண்டும், இதர மதங்களைப் போற்றோ போற்று என்று புகழந்து தள்ளிக் கொண்டிருப்பதோடு இருந்தால் போதாது, தங்கள் மதக் கடவுள்களை, சம்பிரதாயங்களை இழிவு படுத்தும் போது தட்டிக் கேட்கக் கூடாது, இது தான் செகுலரிஸம் என்று சொல்லப்பட்டு வருகிறது; நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.
கோவில் நிலத்தை லயோலா கல்லூரி ஆக்கிரமித்து லீஸ் முடிந்த பின்னும் தரவில்லை.
கேட்காதே. கல்வி சொல்லித் தருகிறார்கள் ஐயா! கல்விக் கூடம் அது.
ஐயையோ, பிள்ளையார் கோவிலை இடிக்கிறார்கள் ஐயா?
“இடித்தால் என்னா, ரோடை அகலப் படுத்தப் போகிறார்கள், ஊருக்குத் தானே நன்மை!
ஐயையோ, மதுரை டவுன்ஹால்ரோடில் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து சுற்றிலும் கடைகள் போட்டு விட்டார்கள் ஐயா!
“அதனால் என்ன? ஏழை வியாபாரிகள் வாழ வேண்டாமா என்ன?
எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றன? அவை உங்களை வாழ்த்துமே.
“ அரசாங்க நிலம்த்தில் ஊருக்கு நடுவில் சர்ச் கட்டி விட்டார்கள் ஐயா!”
“அதனால் என்ன? அவர்கள் வழிபாடு நடத்த வேண்டாமா? சகிப்புத்தன்மையே உங்களுக்குக் கிடையாதா? அரசாங்க நிலம் தானே, உடனே ஒரு பக்கத்தில் மனு ஒன்றைக் கொடுத்து விடுவோம். அதிலேயே அதில் கட்டுவதற்கான அல்லது கட்டியதை நியாயப்படுத்தியதற்கான ஆணையை வாங்கி விடுவோம்.”
ஆயிரக் கணக்கில் அடுக்கடுக்காக, ஆதாரங்களுடன் பாரத நாடு முழுவதும் செக்குலரிஸத்தின் பேரால் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தவறாக எதைச் செய்தாலும் அதைச் சொல்வது கூட செக்குலரிஸத்திற்கு எதிரானது என்பது எப்போது போகும்?
ஏன் இந்த தேசத்தை ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்கக் கூடாது?
ஒரு ஹிந்துவுக்கு ஏசுவும் தெய்வம் தான்; அல்லாவும் தெய்வம் தான்; புத்தரும் தெய்வம் தான், சிவனும் விஷ்ணுவும் விநாயகரும், முருகனும், துர்க்கையும் தெய்வம் தான்.
ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ ஏசு ஒருவரே ரக்ஷிப்பவர். அவரை ஏற்காவிட்டால் ஏற்காதவர்கள் பாவிகள்.
முஸ்லிம்களுக்கோ அல்லாவை ஏற்காதவர்கள், காபிர்கள்.
ஆக அனைவரையும் மதித்து போற்றி உயர ஏற்றி வைப்பவர்கள் ஹிந்துக்களே!
ஆனால் அவர்களுக்கு மத வழிபாட்டில் சுதந்திரம் இல்லை; கோவிலுக்கும் அதன் சொத்துக்கும் பாதுகாப்பு இல்லை.
கோவிலின் பிரகாரத்தில் பிரம்மாண்டமான கார்; கோவில் சொத்தில் அதிகாரிக்கு கார். அது நிற்கும் இடம் கோவில் பிரகாரம்.
கோவில் அர்ச்சகருக்கு நினைக்கவே நெஞ்சம் பதறும் வகையில் குறைந்த சம்பளம்!
யூடியூபில் ஆதாரத்துடன் காண்பிக்கப்படும் இது போன்ற காட்சிகளை நூற்றுக் கணக்கில் பார்க்கிறோம்.
ஆனால் ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து இதைத் தட்டிக் கேட்பதில்லை.
தட்டிக் கேட்கும் ஹிந்து முன்னணி போன்ற இயக்கங்களுக்கு உரிய விதத்தில் ஆதரவும் தருவதில்லை.
ஒரு பெரிய வாதம் முன் வைக்கப் படுகிறது.
என்ன அது?
அஹிம்ஸா பரமோ தர்ம: என்ற உலகப் பிரசித்தி பெற்ற ஸ்லோக வரி எடுத்துக் காட்டப் படுகிறது.
ஆனால் செகுலரிஸத்திற்கு என்ன கதியோ அந்த கதி தான் இந்த ஸ்லோகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.
பாவிகள், பாதி ஸ்லோகத்தைத் தான் மேற்கோளாகக் காட்டி ஹிந்துக்களின் வாயை அடைத்து விடுகிறார்கள்.
அஹிம்ஸா பரமோ தர்ம: என்பதற்கு அடுத்தாற் போல வருவதை யாருமே சொல்வதில்லை.
அது என்ன?
“அஹிம்ஸா பரமோ தர்ம: தர்ம ஹிம்ஸா ததைவ ச”
அஹிம்சையே உயரிய தர்மம்; தர்மத்தைச் செய்யும் போது அதைச் செய்ய விடாது ஹிம்சை செய்வதும் தவறு.
செகுலரிஸத்தின் அர்த்தத்தையும் நடைமுறையில் மாற்றி விட்டார்கள்; ஸ்லோகத்தையும் பாதியில் வெட்டி நொண்டி ஆக்கி விட்டார்கள்.
ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து எழுவார்களா?
To be continued………………
****