
Post No. 11,856
Date uploaded in London – 31 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்!
ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து எழுவார்களா? – 2
ச. நாகராஜன்
முகமது நபியைத் தெரியாமல் தவறாகச் சித்தரித்து விட்டு ஒரு சின்ன செய்தியோ அல்லது ஏதாவது படமோ வந்தால் போதும், ஊரெல்லாம் கலாட்டா, ரத்த ஆறு ஓடும்.
இதை அரசு கவனிக்கவே கவனிக்காது; கண்டிக்காது.
ஆனால் அதே சமயம் ஹிந்துக் கடவுளை ஆபாசமாகச் சித்தரித்து லயோலா காலேஜ் உள்ளிட்ட இடங்களில் கண்காட்சி நடைபெறலாம்.
அதைக் கண்டித்து ஓவென்று கத்திய பின்னரே அரசு காதில் அப்படிப்பட்ட கண்காட்சி பற்றிய செய்தி சென்று சேரும்.
சரஸ்வதியை ஆபாசமாகச் சித்தரித்து ஓவியம் வந்தால் அது ஓவியரின் கருத்துச் சுதந்திரமாம்.
ஆனால் ஹிந்து பத்திரிகையில் நபிகள் நாயகம் பற்றிய செய்தி தெரியாமல் வந்த போது கூட கல்லெறி, கலாட்டா, நிர்வாகம் மன்னிப்புக் கேட்க, அரசு ஓடி வர … அப்படி ஒரு ஆர்ப்பாட்டம்.
ஏன் என்று கேளுங்கள்,
செகுலரிஸம் என்று பதில் வரும்.
ஒரு முஸ்லீம் கும்பல் ஹாஜ் க்வாஜியில் ஒரு கோவிலை இடித்துத் தள்ளியது. ஆனால் உடனே அங்கு இஸ்லாமிய நண்பர்கள் அங்குள்ளோருக்கு எப்படி உணவை வழங்குகிறார்கள் என அவசரம் அவசரமாக ஒரு போடோ ஷூட் எடுத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
அங்குள்ள சிலை மீது சிறு நீர் கழித்து விட்டு உடைத்து விட்டு ஒரு ‘நல்ல’ வீடியோவும் வெளியிடப்பட்டது.
ஹிந்து வாலிபன் ஒருவன் ஆசை வயப்பட்டு ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணம் செய்து கொண்டால் அவன் நிச்சயமாக மதம் மாறி இஸ்லாமியராக ஆக வேண்டும்.
ஒரு ஹிந்துப் பெண்ணை இஸ்லாமியர் ஒருவர் மணம் புரிந்து கொண்டால் அந்தப் பெண்மணி மதம் மாற வேண்டும். இல்லையேல் சித்திரவதை தான்.
ராஹுல் ரஜ்புட் கேஸ் (Rahul Rajput Case) தான் முதல் கேஸ் என்றில்லை.
இதனால் ஒவ்வொரு இஸ்லாமியரும் தவறானவர் என்று அர்த்தமில்லை.
கள்ளம்கபடற்ற, அனைவருக்கும் மதிப்பு தரும் நாட்டை நேசிக்கும், மற்றவரையும் சமமாகக் கருதும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் அன்றும் இன்றும் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
ஆனால் கள நிலவரத்தை எடுத்துக் கொண்டால் எண்ணிக்கையில் குறைந்த சில நபர்கள் மத ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீரழிக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது.
கண் மூடிய குருடர்களாக ஹிந்துக்கள் இருக்கக் கூடாது; அதே சமயம் அற்புதமான நல்லிணக்கத்தை மனதில் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களும் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்கள் இழைக்கப்படும் போது கண்ணை மூடிக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது.
அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது பாதி ஸ்லோகம் தரும் உண்மை தான்; அதற்கடுத்த பாதி தான் முக்கியம்.
தர்ம ஹிம்ஸா ததைவ ச|
தர்மத்திற்கு தீங்கு பயப்பதும் பிரம்மாண்டமான ஹிம்சை ஆகும்.
அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து இணைய வேண்டும்;
நல்ல இஸ்லாமியர்களும் ஒன்று கூடி இணைந்து பரஸ்பர நல்லிணக்கம், மதிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை உலகம் போற்றும் விதத்தில் உயர ஏற்ற வேண்டும்.
நன்றி & ஆதாரம் : ட்ரூத் வார இதழ் கட்டுரை – The Burden of ‘Secularism’.
Truth Weekly Kolkata Volume 88 Isssue 32 date 26-2-2021
***