
Post No. 11,858
Date uploaded in London – – 31 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

மதுரையில் வடக்குமாசி வீதி யாதாவா ஸ்கூலில் (யாதவர் ஆரம்பப்பள்ளி) 65 ஆண்டுகளுக்கு முன்னர் படித்தபோது நண்பன் சுடலைமுத்துவுடன் அடிக்கடி ‘டூ’ விடுவேன். பின்னர் ‘சேத்தி’ விடுவேன்
ஏன் இன்று சுடலைமுத்து வரவில்லை? என்று அம்மா கேட்பாள்; அவனுடன் ‘டூ’ என்பேன் .
எனக்குத் தெரியாமல் அம்மா, அந்தப்பக்கம் பார்த்துச் சிரித்து இருப்பார் என்பது இப்போது தெரிகிறது.
நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ? எத்தனை மாணவ மாணவிகளுடன் டூ போட்டுவிட்டு மறு நாளே சேர்ந்திருப்பீர்கள் ?
இப்படிச் செய்ததால்தான் 65 ஆண்டுக்குப் பின்னரும் சுடலைமுத்துவை எனக்கு ஞாபகம் இருக்கிறது.
இப்போது எதற்கு இந்த சுய புராணம் என்று வியாக்காதீர்கள். சேத்தி என்பது தமிழ்ச் சொல் என்பது விளங்குகிறது. ‘டூ’ தமிழ்ச் சொல்லா என்பதே இன்றைய ஆராய்ச்சி.
டூ என்றால் என்ன?

ஆள்காட்டி விரல் அல்லது சுட்டு விரலையும் நடுவிரலையம் சேர்த்து வில் போல வளைத்து நம் தற்காலிக எதிரியிடம், அதாவது பிடிக்காமற் போய்விட்ட நண்பனிடம் உன் கூட சேரமாட்டேன் போ! என்று சொல்வதாகும்.
கணவன்- மனைவி ஊடல் போல மறுநாளே நட்பு மலர்ந்தவுடன் சேத்தி என்று நடு விரல் இரண்டையும் மடித்துக்கொண்டு (மற்ற இரண்டு விரல்களும் நேராக நிற்க) காட்டுவேன் .
சில இடங்களில் காயா ? பழமா? என்பதை டூ , சேத்தி என்பதற்குப் பயன்படுத்துகின்றனர் .
இதில் சேத்தி , அதாவது இருவரும் சேர்ந்துவிடுவோம், அல்லது நான் உன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளுவேன் என்பது தமிழ்ச் சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
டூ என்பது பற்றி ஊகிப்போம்.!
ஆள்காட்டி விரல் அல்லது சுட்டு விரல் என்பது எதிரே உள்ள ஆளைக்குறிக்கிறது . நடு விரல் நம்மைக்குறிக்கிறது போலும் ! இரண்டையும் சேர்த்துப் பிரித்துவிடும் போது இனி நாம் நண்பர்கள் இல்லை என்று சொல்லி விடுகிறோம்.

இப்படி யூகிப்பதுசரியா?
மறு நாள் , அதே நண்பனைச் சேர்த்துக்கொள்ளும்போது ஆள்காட்டி (சுட்டு) விரலையும் சுண்டு விரலையும் அவனை நோக்கிக் காட்டுவது ஏன் ?
இதற்கு அறிவுபூர்வ விளக்கமே கிடைக்காது போலும்.
ஆயினும் இரண்டு விரல்கள் இருவரைக் குறிப்பது விளங்குகிறது .
பேச்சு வழக்கு இந்தியில் (TU IN HINDI) தூ என்றால் நீ. ஆனால் நாம் தமிழில் உண்டாக்கும் சப்தமோ ஆங்கில மொழி DO டூ (செய் என்ற வினைச் சொல்). ஆகையால் அதிலும் எந்தத் தொடர்பும் இல்லை
எவ்வளவு ஆராய்ச்சி செய்த்தாலும் விடை கிடைக்காத சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. ஆங்கிலத்தில் நாய் என்பதை DOG டாக் என்று சொல்லுகிறோம். இதற்கு மூலமே இன்று வரை தெரியவில்லை.
தொல்காப்பியர் , பொறாமை என்பதற்கு நிம்பிரி என்ற தமிழ்ச் (?????) சொல்லைப் பயன்படுத்துகிறார். இது உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை! சம்ஸ்க்ருத வேர்ச் சொல்லும் அல்ல!.
DOG/டாக், நிம்பிரி, டூ பற்றி நீங்களும் ஆராயுங்கள்; விடை கிடைத்தால் பகிருங்கள் .

வாழ்க தமிழ் – வளர்க ஆராய்ச்சி
—subham—
TAGS- டூ ,சேத்தி ,காயா, பழமா, Do, Tu