
Post No. 11,855
Date uploaded in London – – 31MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில் இருக்கிறது . 22-2-2023 அன்று கும்பகோண வட்டார கோவில்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல்லுக்குச் சென்றோம். ஆனால் சிறிது ஏமாற்றம். நாலு ஆண்டுகளாக நடைபெறும் திருப்பணி வேலைகள் ஆமை வேகத்தில் அல்லது நத்தை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் மூலவரை தரிசிக்கமுடியாதபடி பக்கத்துக் கொட்டகையிலுள்ள உற்சவரைத் தரிசித்தோம் , கடந்த நான்கு வருடங்களாக அருள்மிகு நரசிங்கப்பெருமாள் பாலாலயம் செய்து கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
நான்கு வருடங்களாக மூலவர் சன்னதி மூடப்பட்டது உள்ளது பற்றி இந்துக்கள் குரல்கொடுத்து வருகின்றனர். பழைய அரசு போய், புதிய அரசும் வந்துவிட்டது. திருப்பணிக்குத் தடை ‘மனமா, பணமா’ என்று தெரியவில்லை.
XXX
நரசிம்மர் மஹிமை

இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது. மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில் அமைக்க எண்ணி இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் . ஆனால் பல தடைகள் ஏற்பட்டன. பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம். அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது. தாயாரை அணைத்தவண்ணம் பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து , அருள் சுரக்கும் கோவில் இது .
இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.
திரை போட்டிருந்ததால், நாங்கள் வரிசையில் நின்று காத்திருந்தோம். மன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு TEEN AGE BOY டீன் ஏஜ் பையனை அவனது தந்தை அழைத்து வந்திருந்தார். அவன் ஆடிக்கொண்டும் சப்தம் போட்டுக்கொண்டும் இருந்தான். கோவிலுக்குப் பலரும் எண்ணெயும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார். நாங்கள் மூலவரைப் பார்க்க முடியவில்லை. கொட்டகைக்கு வெளியே கல்லும் மண்ணும் நிறைந்து இருந்ததால் யாரும் செல்ல முடியவில்லை.
விரைவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.
XXX
கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !

PRAHLADA, DEMON’S SON = PARAKALA= PARIKKAL
இரு முறை கோவில் கட்டுவதில் தடை ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம் என்றும் அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள் பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும் தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை. அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .
பிரஹலாதன் பெயர் மருவி பரகால என்றும் பரிக்கல் என்றும் மருவியது என்பதே பொருத்தம்!!
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை நமக்குக் காட்டிய பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் . பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!
–SUBHAM—
TAGS- பிரகலாதன், கனகவல்லி, லட்சுமி நரசிம்ம, பரிக்கல், பெருமாள், கோவில், மூர்த்தி