காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 3 (Post No.11,864)

MIRACLE BABY AYA

She was found by rescuers more than 10 hours after the quake hit, her umbilical cord still connected to her dead mother. Her uncle, Khalil al Sawadi, helped to rescue her and took her to hospital, where officials named her Aya – meaning “a sign from God” in Arabic.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,864

Date uploaded in London –   3 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! என்ற தலைப்பில் இரண்டாவது கட்டுரை 11807 என்ற கட்டுரை எண்ணாக 15-3-23 அன்று வெளியிடப்பட்டது. 

காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 3

ச.நாகராஜன் 

பிப்ரவரி ஆறாம் தேதி. வருடம் 2023. 

துருக்கியின் மோசமான தினம் அது. கோரமான பூகம்பம் துருக்கியைத் தாக்கியது. ஏராளமானோர் பலி ஆகினர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்; வெளியே வர முடியாமல் தவித்தனர். உயிரையும் இழந்தனர். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பால் வித்தியாசமோ அல்லது வயது வித்தியாசமோ, அந்ஸ்து பேதமோ இல்லாமல் காலன் அனைவரையும் தன் பாசக் கயிற்றினால் பிடித்துக் கொண்டான். 

ஆனால் காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான் என்பதற்கான ஒரு அதிசய சம்பவமும் இந்த கோரமான பூகம்ப நிகழ்வில் ஏற்பட்டது. 

ஒரு குழந்தை இடிபாடுகளுக்கு அடியில் பத்து மணி நேரம் கிடந்தது. அதன் தாயார் இறந்து போனார். ஆனால் குழந்தையோ அத்தனை கோரத்திலும் உயிருடன் இருந்தது.

 குழந்தையின் போட்டோ வெளி உலகிற்கு வந்த போது அதன் தொப்புள் கொடி அப்படியே இருந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். அதுவே அந்தக் குழந்தையின் உயிரைக் காத்தது.

 டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தையைச் சோதித்து குழந்தை நல்ல நிலையில் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக அந்தக் குழந்தை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது ஒரு பெண் குழந்தை.

 அந்தப் பெண் குழந்தையை யார் வளர்ப்பது என்ற கேள்வி உடனடியாக எழுந்தது.

ஆயிரக் கணக்கானோர் குழந்தையை வளர்க்க முன் வந்தனர்.  ஆனால் குழந்தை இரத்த சொந்தம் தான் என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் அதனுடைய அத்தை, மாமாவிடம் தரப்பட்டது. குழந்தையின் மாமாவான கலில் அல் சவாடி, “ எனது குழந்தை, அந்தக் குழந்தை என்று வேறுபாடே கொள்ள மாட்டேன்” என்று உறுதி கூறினார்.

அந்தக் குழந்தை அதன் அம்மாவான அஃப்ராவின் பெயராலே அழைக்கப்படுகிறது.

அதிகாரிகள் அந்தக் குழந்தைக்கு அதை மீட்டவுடனேயே தந்த பெயர்

ஆயா”.

“ஆயா” என்றால் அராபிய மொழியில் அற்புதம் என்று பொருள்.

சவாடி மற்றும் அவரது மனைவி ஹாலாவின் வீடும் கூட பூகம்பத்தில் தவிடு பொடியானது. தனது உறவினர்களுடன் தான் அவர்கள் வசிக்க நேர்ந்திருக்கிறது.

துருக்கி மட்டுமல்ல, உலகமெங்கும் இந்தக் குழந்தை ஒரு ஆனந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மை தான்.

 பிரம்மாண்டமான கோரமான பூகம்பத்தில் ஆயிரக் கணக்கானோர் பலியாக, ஆயிரக்கணக்கில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து தவிடுபொடியாக பல மணி நேரம் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உயிருடன் வந்த குழந்தை “ஆயா”  – ஒரு அற்புதம் – தானே!

 விதியின் வழிகள் விசித்திரமானவை. கடவுளின் போக்கும் காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டது.

 காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான் – வரவே மாட்டான்!

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: