‘பாப் கார்ன்’ POPCORN உணவைக் கண்டுபிடித்தது தமிழனா? (Post.11,868)

Picture of Popcorn

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,868

Date uploaded in London – –  4 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சோளப் பொரியை பாப்கார்ன் POPCORN என்கிறோம். உலகம் முழுதும் திரைப்படக் கொட்டகைகளில் விளையாட்டுத் திடல்களிலும். சூப்பர் மார்க்கெட்டுகளிலும் POP CORN விற்கப்படுகிறது . தமிழில் உள்ள இரண்டு பழமொழிகள் நமக்கு ஒரு முக்கிய உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

ஆனைப் பசிக்கு சோளப்பொரி IT IS LIKE GIVING POPCORN TO HUNGRY ELEPHANT OR TO ONE WITH HUNGER LIKE AN ELEPANT

சோளக்காட்டு பொம்மை SCARECROW IN A CORNFIELD (FAKE THREAT)

இது போன்ற பழைய மொழிகள் வேறு மொழிகளில் இல்லை.

மக்காச் சோளத்தின் MAIZE தாவர இயல் பெயர் –  Zea mays,

சோளத்தின் SORGHUM/ JOWAR தாவர இயல் பெயர் – HOLCUS SORGHUM, SORGHUM BICOLOR

இரண்டும் ஒரே குடும்பத்தைச் (belongs to the Poaceae)

சேர்ந்தவை. மேலும் இரண்டும் 10,000 ஆண்டுகளாக உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்பட் டு வருகிறது ; இரண்டிலும் பொரி செய்யலாம் . ஆனால் இன்றைய பாப் கார்ன் மக்காச் சோளத்திலிருந்துதான் கிடைக்கிறது. பாப்கார்ன் சாப்பிடுவது ஏன் ?

அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொரிக்கலாம் . பெரிய பாக்கெட். ஆனால் உடலுக்குக் கொடுக்கும் கலோரி (எரிபொருள் சக்தி) மிகக்குறைவு . மேலும் கோதுமையில் உள்ள க்ளூட்டன் என்னும் பொருள் பலருக்குஒவ்வாது. ஈந்த க்ளூட்டன் சோளத்தில் இல்லாததால் சோளத்தை க்ளூட்டன் ஒவ்வாமை உடையோர் பயன்படுத்துகின்றனர்

இரண்டு விஷயங்களை ஆராய்ந்த பின்னரே இது பற்றி முடிவு செய்ய வேண்டும் .

முதல் விஷயம்

இந்துக்களுக்கு சோளப்பொரி பற்றியோ சோளம் என்னும் தானியம் பற்றியோ தெரியுமா?

சோளம் என்பது இந்திய தாவரமா ?

சோளம் பற்றி சங்க இலக்கியத்தில் அல்லது சம்ஸ்க்ருத இலக்கியத்தில் குறிப்புகள் இருக்கின்றனவா ?

இரண்டாவது விஷயம்

இந்துக்களுக்கு முன்னர், வேறு யாராவது சோளம் பற்றிக் கதைத்து இருக்கிறார்களா ?

மொழியியல் ரீதியில் சோளம்- ஜோவர் – சோர்கம் SOLAM- JOWAR- SORGHUM  என்பதில் எது முதலில் வந்தது ?

மேற்கூறிய இரண்டில் மொழியியல் ஆராய்ச்சிகள் (LINGUISTIC REEARCH)  இந்துக்களுக்கும் குறிப்பாகத் தமிழ் இந்துக்களுக்கும் பெருமை தருகிறது .

பழமொழிகளுக்கு காலமே சொல்லமுடியாது. அவற்றை “பழ” என்ற அடைமொழியுடன் வழங்குவதால் அவை மிகப் பழங்கால அனுபவ மொழிகள் என்று அறியலாம் ;

ஒவ்வொரு கேள்வியாக எடுத்துக்கொள்ளுவோம்

சங்க இலக்கியத்தில் சோளம் இருக்கிறதா ? இல்லை

தமிழில் சோளம் இருக்கிறதா? இருக்கிறது. சீவக சிந்தாமணியில் இறுங்கு என்பதை சோளம் என்று உரை ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் .

இது தவிர பழமொழிகளில் உள்ளது

XXXX

சம்ஸ்க்ருத  இலக்கியத்தில் சோளம் இருக்கிறதா ? இருக்கிறது; ஆனால் பிற்கால இலக்கியங்களில்தான். தமிழுக்கு சற்றுமுன்னர்.

வேறு யாருக்காவது சோளம் பற்றித்  தெரியுமா ?

சோளம் (CORN) என்பதை மக்காச் சோளத்துக்கும் (MAIZE) கம்பு (MILLETS) வகை தானியத்துக்கும் பொதுப்பெயராகப் பயன்படுத்துகின்றனர். இந்தக் குழப்பம் ஆங்கில மொழியிலும் உள்ளது. POP CORN பாப் கார்ன் பெயரிலுள்ள கார்ன் CORN என்னும் ஆங்கிலச் சொல் சில நாடுகளில் தானியம் (GRAIN) என்ற பொருளிலும் இன்னும் பல நாடுகளில் மக்காச் சோளத்துக்கும்(MAIZE)  இன்றுவரை  பயன்படுகிறது. மேலும் மக்காச் சோளம் இல்லாத சோளத்துக்கு சொர்கம் அல்லது சோர்கம் (SORGHUM) என்ற பெயர் தமிழ்ப் பெயர் ஆகும்.

XXX

Picture of Sorghum Crop

LINGUISTIC SUPPORT

R= L என்பது உலகம் முழுதும் காணப்பாடுகிறது. இந்து மொழியியலில் – சம்ஸ்க்ருதத்தில் — இதற்கான சூத்திரமே உளது ஆக சோளம் என்பதே சோ ர்/ள் கம் ஆகியது

இன்னொரு விநோதத்தையும் காணலாம். எந்த வயலில் பறவைகளை விரட்ட மனித உரு போன்ற பொம்மைகளை (SCARECROW) வைத்தாலும் அதைத் தமிழில் சோளக்காட்டு பொம்மை  என்றுதான் சொல்லுகிறோம். இதைப் பார்க்கையில் தமிழிலும்  சோளம் என்பதற்கு தானியம் என்ற பெயர் தொனிக்கிறது (SOLAM= GRAIN)

இன்று பாப்கார்ன் (சோளப் பொரி ) செய்வதற்கு மக்காச் சோளம்தான் பயன்படுகிறது. அதிசயமான விஷயம் என்னவன்றால் உலகில் அதிகமாக விளையும் தானியம் அரிசி அல்ல; கோதுமை அல்ல; மக்காச் சோளம்தான்!

இது மத்திய அமெரிக்காவிலுள்ள மெக்சிகோவில் 10, 000 ஆண்டுகளுக்கு முன்னரே (MAIZE) உணவுக்காகப் பயன்படுத்தத்தப்பட்டது தொல்பொருள் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது . பின்னர் தென், வட அமெரிக்காவில் பரவி, உலகெங்கிலும்ம் பயிரானது.

சோளப் பொரியைக் கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சியே தேவை இல்லை. திடீரென்று சோளக்காடோ  தானியக்  கிடங்கோ தீப்பிடித்து எரிந்து  இருந்தால்,  தானாக பொரி கிடைத்திருக்கும். அதைச் சாப்பிட்டவர்கள் மற்றவர்களுக்கும் சொல்லி இருப்பர்; உடனே இது வழக்கத்தில் வந்திருக்கும் .. ஆனால் தமிழில்தான் பொரியை உணவாகப் பயன்படுத்திய குறிப்புகள் உள்ளன. இன்று நாங்கள் லண்டனில் காலை உணவாகச் சாப்பிடும் ரைஸ் கிரிஸ்பீஸ்  RICE CRISPIES  (BREAKFAST CEREAL) என்னும் அரிசிப்பொரியை பாலில் கலந்து உண்ட செய்தி 2000 ஆண்டுப் பழமையான நற்றிணையில் உளது . 1990களில் நான் லண்டன் மேகம் பத்திரிகையில் இதை எழுதினேன். அவை 2009-ல் தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் என்ற புஸ்தகமாக வெளியானது .

சோர்கம் பற்றி எதியோப்பியா-எகிப்தில்தான் பழைய தொல்பொருட் துறை தடயம்   – அதாவது 10,000 (8000 BCE) ஆண்டுகளுக்கு முந்தைய தடயம் உள்ளது .

அப்படி இருக்கும்போது தமிழ் இந்துக்களுக்கு எப்படி  இந்த கண்டுபிடிப்புப் பட்டத்தைக் கொடுக்க முடியும்? இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று ஆகாதா ?

இங்குதான் பழமொழியும், மொழியியலும் (PROVERBS AND LINGUISTIC S)நமக்குத் துணைக்கு வருகின்றன .

 ஆனைப் பசிக்கு சோளப் பொரி என்ற பழமொழியில் சோளப் பொரியை உணவாகச் சாப்பிடும் செய்தி வருகிறது. அதிக பசியுள்ளவனுக்கு அது பசியாற்றாது என்ற செய்தியும் அந்தப் பழமொழியில் இருக்கிறது . ஆக பொரி என்பதை உணவாகக் கண்டவர்கள் தமிழர்களே

ஆயினும் இப்போது பாப்கார்ன் செய்யப் பயன்படும் மக்காச் சோளம் மிகவும் பிற்காலத்தில்தான் இந்தியாவுக்கு வந்தது. அதற்கு முன்னரே ஒன்பதாம் நூற்றாண்டு சீவக சிந்தாமணியில் சோளம் இருப்பதால், நாம் சொல்லும் பொரி , சொர்கம் SORGHUM என்ற தானியம் ஆகும். இது 8000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தில் இருந்த தடயங்கள் கிடைத்திருப்பதால் இது ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததாக உணவுப்பண்ட ஆய்வாளர்கள் செப்புவர். ஆக இதில் பொரி செய்து உணவாகப் பயன்படுத்தியத்தைத் தமிழ்ப் பழ மொழி காட்டுவதால் பாப்கார்ன் உணவுப் பண்டத்தை நாம்தான் கண்டுபிடித்தோம் என்று சொன்னால் என்ன தவறு?

Xxxxx

picture of Maize

கி.பி AD.= பொ .ஆ (Common Era)

ஆயுர் வேத நூல்களில் சோளத்தின்  வரலாற்றைக் காண்போம்.

2200 ஆண்டுகளுக்கு முந்திய சரக சம்ஹிதை நூலில் ஜுர் ணா  என்ற பெயரில் சோளம் உள்ளது ; இதுவே ஜோவர் ,சோர்கம் – சோளம் என்று உருமாறியது.

கி.பி.400- சமண நூல் திலோய பண்ணத்தியில் யவ நால அல்லது ஜம  நால என்ற பெயரில் உளது.

XXX

தமிழ் நூல் சீவக சிந்தாமணி – ஒன்பதாம் நூற்றாண்டு – இறுங்கு (சோளம் )

XXX

கி.பி.1060 – சரக சம்ஹிதையின் வங்காளி மொழி உரையில் ஜுர்ணா = ஜோனார்

XXX

கி.பி.940- கன்னட மொழி நூல் பம்ம பாரத — ஜோள

பின்னர் பிராகிருத மொழி நூல்களில் ஜோவ்ரி , ஜோவாரி

தற்காலத்தில் இந்தி முதலிய மொழிகளில் ஜோவார் ,ஜவார்

சோளம் என்ற தமிழ்ச் சொல் பழமொழியில் மட்டுமே காணப்படுகிறது .

—SUBHAM—

Tags- சோளப்பொரி, சோளம், இறுங்கு, ஆனைப் பசிக்கு சோளப்பொரி, சோளக்காட்டு பொம்மை, ஜுர்ணா, பாப்கார்ன், POPCORN,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: