வால்மீகி ராமாயணத்தில் வாகனங்கள்! (Post No.11867)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,867

Date uploaded in London –   4 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ராமாயண வழிகாட்டி

வால்மீகி ராமாயணத்தில் வாகனங்கள்!

ச.நாகராஜன்

ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் பல அபூர்வமான வாகனங்களின் வகைகளை மஹரிஷி வால்மீகி கூறுகிறார்.

அதைப் பற்றிய ஒரு சிறிய பார்வை இதோ:

அஸ்வ கோடகா – பழைய காலத்தில் குதிரைகள் (அஸ்வம் – குதிரை) ரதங்களில் பூட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

யுத்தங்களிலும் இந்த ரதங்கள் வீரர்களை ஏற்றிச் செல்லும்.

கஜ அல்லது ஹஸ்தி : கஜ என்றால் யானை. ஹஸ்தி என்றாலும் யானை என்றே பொருள்.

அரசர்களாலும், அரச குடும்பத்தினராலும் மந்திரிகளாலும், மாபெரும் போர் வீரர்களும் யானை  மீது ஏறிச் செல்வர்.

ரதம் : இரு சக்கரங்களை உடைய ஒரு வாகனம். சாதாரணப் போக்குவரத்திற்கும் போர்க்காலங்களில் போர்க்களங்களிலும் ரதம் பயன்படுத்தப்படும்.

மிகப் பெரும் ஓட்டப் பந்தயப் போட்டிகளிலும் ரதங்கள் எடுத்துச் செல்லப்படுவதுண்டு.

ஒரு குதிரையோ அல்லது பல குதிரைகளோ பூட்டப்பட்டு ரதங்கள் செல்லும்.

ரதத்தை மிக விரைவாக ஓட்டத் தனித் திறமை வேண்டும்.

இப்படிப்பட்ட ரத வீரர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை ராமாயணத்திலும் காணலாம். மஹாபாரதம் மற்றும் 18 புராணங்களிலும் காணலாம்.

பல சக்கரங்களைக் கொண்ட ரதங்களுமுண்டு.

சிபிகன் – சிவிகை என்று தமிழில் சொல்லப்படும் பல்லக்கு இது.

ராணிகளும், மிகப் பெரும் மகான்களும் உயர் அதிகாரிகளும் போக்குவரத்து வாகனமாக சிவிகையைப் பயன்படுத்துவது வழக்கம்.

ஸ்வஸ்திகா : –  மிக்க அலங்காரத்துடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் படகு இது. அரசர்களும் அரச குடும்பத்தினரும் உயர் அதிகாரிகளும் நதிகளிலும் கடலிலும் செல்லப் பயன்படுத்தப்படும் நீர்ப் போக்குவரத்து வாகனம் இது.

ஸ்வஸ்திகா என்பது குகனது பெரிய படகு. உயர் அரச வம்சத்தினரை ஏற்றிச் செல்வதற்கானது. இதில் தான் பரதன் உள்ளிட்டோரை ஆற்றின் மறு கரைக்கு – சித்ரகூடத்திற்கு குகன் ஏற்றிச் சென்றான்.

புஷ்பகம் : இது ஒரு வான ஊர்தி. (ஏரோபிளேன் – ஆகாய விமானம்)

பல அபூர்வமான அம்சங்களைக் கொண்டது இது.

சுந்தர காண்டம் எட்டு மற்றும் ஒன்பதாம் ஸர்க்கத்தில் இது பற்றி விரிவாகக் காணலாம்.

மணி, இரத்தினம் இவைகளால் அலங்கரிக்கப்பட்டதும் உருக்கின தங்கத்தால் செய்யப்பட்ட பலகணிகளின் வேலைத்திறமைகளையும் உடைய பெரிய விமானம் இது.

இத்தன்மையது என்று சொல்ல முடியாதது. பிறரால் அழிக்க முடியாதது. வேலைத் திறமை கொண்டது. விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது.

மனதின் எண்ணப்படி பலவிதமான கதிகளுடனும் அது செல்லும்.

பற்பல விசித்திர மாளிகைகள் அதற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஒருவராலும் தடுக்க முடியாதது.

அதில் செல்பவரின் அபிப்ராயப்படி அது செல்லும்.

அழகிய தோற்றத்தை உடையது.

ஆயிரக் கணக்கானோரால் அது எப்போதும் பாதுகாக்கப்படும்.

தேவ லோகத்தில் பிரம்மாவுக்காக விஸ்வகர்மா அதைச் செய்தார்.

அதன் பெயர் புஷ்பகம்.

ஆசையை அதிகரிக்கவல்லது அது.

முழுமையும் ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டது. மூவுலகத்தினராலும் வணங்கத் தக்கது.

பிரம்மாவிடமிருந்து தன் தவத்தால் குபேரன் அதை அடைந்தான்.

குபேரனிடமிருந்து வென்று ராவணன் அதைக் கைப்பற்றினான்.

மான் முதலிய சித்திர வேலைப்பாடுகள் அதில் உண்டு. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் ஒளியால் ஜ்வலிப்பது போல அது கட்டப்பட்டது.

 ஆகாயத்தை உராய்ந்து கொண்டிருப்பது போல மங்களகரமான கோபுரங்கள் அதன் நாற்புறங்களையும் அலங்கரித்தன.

பொன்னாலான படிகள் கொண்டது; அழகிய மேடைகள் கொண்டது.

ஸ்வர்ணங்களாலும் ஸ்படிகங்களாலும் ஜன்னல்களுடனும் காற்றோட்ட வசதியுடனும் அது அமைக்கப்பட்டிருக்கும் ஒன்று. (அதாவது ஏர்கண்டிஷன் என்று இப்போது சொல்லப்படும் குளிர்சாதன வசதி கொண்டது அது)

இந்திர நீலம், மஹா நீலம், பவளம், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட அது பல அடுக்குகளைக் கொண்டது.

அதில் பானம், பக்ஷணம் என உணவு வகைகள் நறுமணத்துடன் இருக்கும்.

இப்படி வர்ணிக்கப்பட்ட புஷ்பக விமானத்தை அனுமன் பார்த்தான்.

இதில் ஏறியே சீதை, ராமர், லக்ஷ்மணர் இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பினர்.

ஆக வால்மீகி மஹரிஷி இப்படிப் பல வாகனங்களைத் தனது இராமாயண காவியத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: