
Post No. 11,872
Date uploaded in London – – 5 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கடந்த சில தினங்களாக பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒவ்வொன்றாக ஜோதிடத்தின் பெருமையைப் பறை சாற்றி வருகின்றன ; செய்திச் சுருக்கம் இதோ : ஒரு பெண்மணி தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கிவந்தார் ; பரிசே விழவில்லை; இந்த சனியனை ஒழித்துக்கட்டுகிறேன் பார், என்று பரிசுத் தொகை பிடிக்கும் பாங்குக் கட்டளையை (Direct Debit Instruction to Bank) மாற்றினார். அவர் கான்ஸல் cancel செய்துவிட்டு குறி சொல்லும் (Clairvoyant) ஒருவரைச் சந்தித்தார்.
ஓம் சூம், மந்திரக்காளி ; உனக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை விழுவதை , என் தேவதை காட்டுகிறாள் ; ஓடிப்போ !!என்றார் குறி சொல்லுபவர் .
அந்தப் பெண் மணி வீட்டுக்கு ஓடிவந்தாள் ; மீண்டும் பாங்கிற்கு புது உத்தரவு அனுப்பி லாட்டரிக்கு பணம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றாள் . டிக்கெட்டும் வந்தது. அடித்தது லக்கி பிரைஸ் ; எவ்வளவு தெரியுமா? 12,050 பிரிட்டிஷ் பவுன் ( 12,050X 100 ரூபாய்)
அந்தப் பெண்ணின் பெயர் எலைன் தாமஸ் Elaine Thompson; நல்ல வேளையாக குறி பார்த்தேன்; ஆரூடம் சொன்னது அப்படியே பலித்தது. நான் மட்டும் அன்று, ஜோதிடம் கேட்டிராவிடில் பெரிய தொகையை இழந்திருப்பேனே என்று பத்திரிக்கரையாளரின் சொல்லி போஸும் கொடுத்தார் ( புகைப்படத்துக்கு ) ஆ னால் அவர் பேட்டையில் இவரை விட 7 பேருக்கு பெருந் தொகை பரிசு கிடைத்தது ஆளுக்கு £ 379,418. (ரூபாய் கணக்குக்கு 100 ஆல் பெருக்குங்கள் )
xxxx
பிரிட்டனில் ஏராளமான வகை பரிசுத் திட்டங்கள் உள்ளன. நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், எ ந்தக் கடைக்குள்ளும் நுழைந்து, வித விதமான பரிசுச் சீட்டுகளை வாங்கி சுரண்டிப்பார்க்கலாம். அதிர்ஷ்ட எண் இருந்தால் பலவகை பரிசுத்தொகை கிடைக்கும் மற் றொரு வகை நேஷனல் லாட்டரி; ஐரோப்பிய லாட்டரி. வாரம் தோறும் பலமுறை குலுக்கல் நடக்கும். நம் எண் வந்தால் மில்லியன், பில்லியன் பவுன் கூட கிடைக்கும் .
மற்றொரு வகை லாட்டரி POSTCODE LOTTERY போஸ்ட்கோட் லாட்டரி; இதில் டிக்கெட் வாங்கி, உங்கள் பேட்டை போஸ்ட் கோட் (AREA POSTCODE) வந்தால் அதில் முதல், இரண்டு, மூன்று, நான்காவது என்று பரிசுகள் கிடைக்கும் . இந்தியாவில் ஊருக்கு ஊர் பின் கோட் PIN CODE உண்டு; பிரிட்டனில் ஊருக்கு ஊர் போஸ்டகோட் இருக்கும். இந்த முறை இங்கிலாந்தின் ஒருபகுதியான postcode, TS5 7AT பேட்டைக்கு அடித்தது யோகம். அங்கு டிக்கெட் வாங்கிய ஆட்களில் 7 பேருக்கு முதல் பரிசு £379,418. (ரூபாய் கணக்குக்கு 100 ஆல் பெருக்குங்கள் )
அந்த பேட்டையின் பெயர் Teesside டீ சைட் .அது Middlesbrough மிடில்ஸ் ப்ரோ வட்டாரத்தில் இருக்கிறது

Seven people living on Britain Avenue have scooped each, a total of £2,6million, thanks to playing with the full winning postcode, TS5 7AT.
A total of 572 neighbours shared a £10.2 million prize pot at a special event at Centre Square in Middlesbrough on Saturday, April 1, 2023.
XXXX
நாமும் அந்த ஆரூடக் காரனைப் பார்க்கலாமே என்று நினைத்தேன். அப்போது ஒரு அசரீரி கேட்டது: உன் லக் LUCK தான் உனக்கே தெரியுமே. நீ போன முஹூர்த்தம் அவன் உனக்கு பெரிய நஷ்டம் வரப்போகிறது; ஓம், சூம், மந்திரக் காளி ; ஓடிப் போ என்று சொன்னால் என்னாவது !
வேண்டாண்டா , சாமி; இருப்பதே போதும்; உடும்பு வேண்டாம்; ஆளை விட்டால் போதும்; நரி இடம் போனா என்ன, வலம் போனா என்ன, ஆள் மேல் விழுந்து குதறாமல் இருந்தாலே போதும் என்று பயந்து கொண்டே வந்துவிட்டேன் .

—subham—
TAGS- ஆரூடம், குறி சொல்லுதல், லாட்டரி பரிசு, போஸ்ட் கோட் லாட்டரி , பெண்மணி , பிரிட்டனில்,