சிவ பெருமானும் இரண்டு கழுதைகளும்; 2 குட்டிக் கதைகள் (Post No.11875)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,875

Date uploaded in London – –  6 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கரவீரம், பத்ராசலம் ஆகிய இரண்டு தலங்களை சேர்ந்த 2 கழுதைகள் எப்படி சிவ லோகம் சென்றன என்ற இரண்டு கதைகளைக் காண்போம்.

கரவீரம் என்னும் தலம் திருவாரூருக்கு அருகில் இருக்கிறது. இது பாடல் பெற்ற கோவில். மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த திரு ஞான சம்பந்தர் பாடியதால், குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது.

பழையா தருமபுர ஆதீன தேவாரப் புஸ்தகம், கழுதை வழிபட்டதால் இதற்கு கரவீரம் என்றே பெயர் என்று எழுதியுள்ளது. ஸம்ஸ்க்ருதத்த்தில் கரவீரம் என்றால் கழுதை . 2200 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னனைத் தோற்கடித்த  ஒரிஸ்ஸா சமண மத மன்னன் காரவேலன் பெயர் கழுதை என்று கூட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இருக்கிறது இல்லை கரவீரம் என்பது தாவரத்தின் பெயர் என்று கதைப்போரும் உளர் .

மும்மூர்த்திகளில் மிகவும் கருணை உடையவர் சிவபெருமான். நமக்குத் தெரிந்து விஷ்ணு காப்பாற்றிய ஒரே பிராணி கஜேந்திரன் என்னும் யானை. ஆனால் கருணைகடலான சிவனோ ஊருக்கு ஊர் அணில், குரங்கு, சிலந்தி, பன்றி, பசு, பாம்பு, யானை என்று, எறும்பு முதல் பல பிராணிகளையும் காப்பாற்றியதை தமிழ் நாட்டின் ஊர்ப்பெயர்களே காட்டா நிற்கின்றன. திரு எறும்பியூர்,  புள்ளிருக்கு வேலூர், குரங்கணில் முட்டம், கரிவலம் வந்த நல்லூர், , பன்றிமலை என்று சுமார் 50 ஊர்ப்பெயர்களை அடுக்கிவிடலாம்.

போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப தாவரங்களும் சிவபெருமான் அருள் பெற்றதையும், சில மரங்களை சிவ பெருமான் சுவீகார பிள்ளைகளாக ஏற்றத்தையும் எனது பிளாக்கில் படித்திருக்கிறீர்கள். அப்படி ஒரு கதை கரவீரத்திலும் உண்டு. அங்கே சிவலிங்கத்தை பூஜித்த கெளதம ரிஷி,  தான் உருவம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வேண்ட, சிவனும் அவரை அரளி/ அலரி ஆக மாற்ற இன்றும் அமாவாசையில் பெண்கள் கரவீரம் கோவிலில், விரைவில் திருமணம் நடைபெற வேண்டி, தாவரத்துக்கு நீர் வார்க்கின்றனர்.

ஞான சம்பந்தர் இந்த ஊரில் night halt நைட் ஹால்ட் செய்தார் . அதாவது இரவு ஒய்வு எடுத்தார். அதை அப்படியே பாலோ follow / பின்பற்றும் நம் மக்கள் இங்கே night halt நைட் ஹால்ட் செய்து வழிபடுகின்றனர்.

xxxx

அது சரி கரவீரம்/ கழுதையின் கதை என்ன ?

இந்த ஊரில் ஒரு கழுதைக்கு சிவ பக்தி ஜாஸ்தி. கோவிலை விட்டு அகலவில்லை. ஆனால் சிவனோ மிகவும் delay டிலே/ தாமதம் செய்தார். அவர் தோன்றாமல் இருந்ததால், துவண்டுபோன அக்கழுதை ஏமாற்ற உணர்வில் நாகூரில் கடலில் விழுந்து உயிர்த்தியாகம் செய்வோம் என்று முடிவு செய்து சென்றது. திடீரென ஒரு குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தது. சிவன் காட்சி தந்து அதனை ஆட்கொண்டார்.

திருவண்ணாமலை ரமண ஆஸ்ரமத்துக்குச் சென்று காக்கைக்கும் பசுவுக்கும் மானுக்கும் உள்ள சமாதிகளைப் பார்ப்போருக்கு பிராணிகளிலும் புனிதர் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளுவர். நிறைய பேர் சாபத்தால் மிருகங்களாய்ப் பிறந்து பின்னர் முக்தி அடைந்ததை நாம் புராணங்களில் படிக்கிறோம். மனு ஸ்ம்ருதியும் எந்தந்த பாபம் செயதோர் எந்தந்த அனிமல் animal  / பிராணியாகப் பிறப்பர் என்ற பட்டியலைக் கொடுத்து இருக்கிறார்.

மனு ஸ்ம்ருதி பற்றி நான் எழுதிய 4 நூல்களில் (2  தமிழ்+ 2 ஆங்கிலம்) இந்த அதிசய விஷயங்கள் உள .

ஆக கரவீரம் / கதை 1400 ஆண்டுகளுக்கு மேல் நம்மிடம் இருக்கிறது.

சம்பந்தர் பாடிய பதிகத்தில் இது பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் ஒவ்வொரு பாடலிலும் கஷ்டம் போகும் என்பதை அழகான அழகான தமிழ்ச் சொற்களால் பாடுகிறார், வினை நீங்கும், துயர் அகலும், அல்லல் போகும், இடர் அழியும் என்று கஷ்டம் என்பதற்குப் பல சொற்களை பிரயோகிப்பதால் கழுதையும் மோட்சம் அடைந்ததை உறுதி செய்யமுடிகிறது .

இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், அந்தக் கழுதை நாமும்தான் என்றும் விளங்கும். நம்மில் எத்தனை பேர் கழுதையாக வாழ்கிறோம். கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்ற பழமொழியை மாற்றி கழுதை கெட்டால் டாஸ்மார்க் கடை, சினிமா கொட்டகை, உணவு விடுதி, அல்லது பேஸ் புக் , வாட்ஸ் அப் , கம்ப்யூட்டர் game கேம், சூதாட்டம் என்று நிற்கிறோம் . நாம்தான் கரவீரம்!!!

xxxx

கரவீரம் தேவாரம் : முதல்-திருமுறை- பதிகம் எண் 58

பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட

மறையும் மாமணி போற்கண்டங்

கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்

இறைய வன்கழல் ஏத்தவே.

Xxx

நண்ணு வார்வினை நாசமே.

Xxx

தொழவல் லார்க்கில்லை துக்கமே.

Xxx

தொண்டர் மேற்றுயர் தூரமே.

Xxx

கனல வனுறை கின்ற கரவீரம்

எனவல் லார்க்கிட ரில்லையே.

Xxx

உள்ளத் தான்வினை ஓயுமே.

Xxx

தடிய வர்க்கில்லை யல்லலே.

Xxx

பாடு வார்க்கில்லை பாவமே.

Xxx

இரண்டாவது கழுதைக் கதை : தேவி பாகவதம்

தேவி பாகவதம்

ரிக் வேதத்தில் இந்தியாவின் பீஹார் மாநிலத்தை கீகட நாடு என்று விசுவாமித்திரர் பாடுகிறார். அந்த கீகட நாட்டு வணிகர் பற்றி தேவி பாகவதம் பதினோராவது ஸ்காந்தத்தில் ஒரு கதை வருகிறது ஒரு வணிகர், நிறைய ருத்திராட்ச மூட்டைகளை ஏற்றி ஒரு கழுதை மேல் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

பத்ராசலத்திலிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் கழுதைக்கு பாரம் தாங்கவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு  வாங்கியது . வீடு நோக்கி வந்தபோது தொபுக் கட்டீர் என்று கீழே விழுந்து செத்தது. அடுத்த நிமிடமே அது தேவ சொரூபத்தை அடைந்து கைலாசம் சென்றது.

xxxx

இதிலுள்ள கருத்து

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல ருத்திராட்சம் போன்ற சிவ பூஜைக்குரிய பொருளைச் சேர்ந்து சிவனடியார்க்கு உதவினால் கழுதையானாலும் மோட்சம் பெறலாம். அதாவது கழுதை போல வாழ்வு நடத்துவோனும் ஏதாவது சிவ கைங்கர்யம் செய்தால் அவனுக்கு முக்தி உண்டு.

இதனால்தான் வள்ளுவனும் எனைத்தானும் நல்லவை கேட்க என்று குறள் பாடினான். கொஞ்சமாவது நல்லது கேளுங்கப்பா என்று வள்ளுவன் கெஞ்சுகிறான்

இது போன்ற கழுதைக் கதைகளைக் கேட்டால் கூட, படித்தால் கூட, நாமும் கழுதைக் குணத்திலிருந்து விடுபடுவோம்.

இதில் மற்றும் ஒரு கருத்து தொனிக்கிறது. இந்துக்கள் எல்லாப் பிரா ணிகளுக்கும் மரியாதையும் மதிப்பும் கொடுக்கின்றனர் பண்டிதாஹா சமதர்ரசினஹ என்ற கீதை ஸ்லோகத்தில் (5-18), ஞானிகளுக்கு நாயும், பசுவும் , வேதம் படித்த பிராமணனும் ஒன்றே– என்று கண்ணன் செப்புகிறான். 

-subham— 

Tags- கழுதை , சிவ பெருமான், கரவீரம், சம்பந்தர் தேவாரம்,

கழுதைக் கதைகள் , கீகட தேசம், பத்ராசலம், தேவி பாகவதம், ருத்திராட்சம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: