
Post No. 11,878
Date uploaded in London – – 7 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இரண்டு முஸ்லீம் சாமியார்களுக்கு முஸ்லீம் வெறியர்கள் மரண தண் டனை கொடுத்துக் கொன்றுவிட்டனர். இவர்களில் ஒருவர் சமாதி டில்லி யில் உள்ளது. இப்போதும் சூஃபி(Sufi) மத முஸ்லீம்கள் அவரை வணங்கி வருகின்றனர் .

மன்சூர் (Mansur) என்பவர் , இராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் 1000 ஆண்டுகாலுக்கு முன்னர் வசித்தார் .இவர் நானே கடவுள் (உபநிஷத்தில் உள்ள அஹம் பிரம்மாஸ்மி) ” அன் – அல் – ஹக் என்று சொல்லிக்கொண்டு தெருக்களில் வலம் வருவார். இது இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்று சொல்லி காலிபா, இவரைப் பிடித்து கி..பி. 920-ல் பாக்தாத் நகரில் சிரச் சேதம் செய்தான்
இந்தியாவை ஆண்ட மொகலாய கொடுங்கோலர்களில் பலர் செக்ஸ் பைத்தியங்கள்; ஷாஜஹான் உள்பட எல்லோரும் ஏராளமான மனைவிகளை மணந்தவர்கள் ; அவர்களில் பெரும்பாலானோர் தம்பி அல்லது அப்பனைக் கொன்ற கொலைகாரர்கள் . இதில் மிக மோசமான பேர்வழி அவுரங்க சீப். அவன் தனது உறவினர்களைக் கொன்றதோடு ஏராளமான இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்றவன். மத வெறியின் உச்சாணிக் கொம்பு . வாழ்க்கையில் இசை, நடனம் உள்பட எதுவமே பிடிக்காதவன். அவன், சர்மத்(Sarmad) என்ற சாமியாருக்கு மரண தண்டனை விதித்தான்.
. இராக் நாட்டின் பாக்த்தாத்தில் மன்சூர் மரணதண்டனையை ஏற்று இறந்தாலும் அவரது சூஃபி முஸ்லீம் மதக் கொளகைகள் இன்றுவரை உள்ளன. இவர்கள் முஸ்லீம்களானாலும் சித்தர்கள் போன்றவர்கள். கோவில்களையும் மசூதிகளையும் விட , சடங்குகளை விட , ஆன்மீக தாகமே அவசியம் என்பவர்கள்.
இவர்களில் ஒருவர் சர்மத் (Sarmad) . அவர் ஆசியாவின் பல நாடுகளில் ஆன்மீக வேட்கைகைக்காக அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் டில்லி நகரத்துக்கு வந்து சேர்ந்தார்..இந்து மத அவதூத (நிர்வாண) சன்யாசிகளைப் போல தில்லி நகரத் தெருக்களில் ஆடையின்றித் திரிவார் ; அதாவது உடலில் ஆடை இருக்கிறதாயில்லையா என்று அறியாத அளவுக்கு பக்தி பைத்தியம் மிக்கவர். அத்தோடு அன் – அல் – ஹக் (நானே பிரம்மம்) என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார். மதவெறி பிடித்த அவுரங்க சீப் இவரைப் பிடித்து வரக் கட்டளையிட்டான் . முஸ்லீகள் இறைவனைப் பற்றிச் சொல்லும் கலீமா வைச் சொல்லக் சொன்னான் மன்னன்.. ஆனால் அவரோ கடவுள் என்ற அராபியமொழிச் சொல்லைச் சொன்ன அடுத்த வினாடியில் நிறுத்திவிட்டார். ஏன் என்று கேட்டதற்கு அவனைத்தானே தேடிக்கொண்டு இருக்கிறேன் (இன்னும் காணவில்லை) என்றார். இவனை சிரச் சேதம் செய்யுங்கள் என்றான் அவுரங்க சீப்.
சாமியார் தலை நிலத்தில் உருண்ட து (circa 1690 CE). இது கி.பி (பொ .ஆ ) 1690 ல் நடந்தது . சாமியார் முகத்திலோ சாந்தமும் புன்னகையும் தவழ்ந்தது.
பாட்டுப் பாடிய வண்ணமே தியாகி ஆனார் சர்மத் (Sarmad. )
Xxxx
ஸர்மத் பாடியது என்ன?
மன்சூர் காலமாகி நீண்ட நெடுங்காலம் உருண்டோடிவிட்டது அவரது கொள்கைகளும் செல்வாக்கும் ஒளி மங்கிப்போய்விட்டன. அதை உயிர்ப்பித்து என் கடமை அதற்குப் புத்துயிர் ஊட்டுவேன் எனது உயிர்த்தியாகத்தின் மூலம் அதைச் செய்வேன். இறப்பு என்பது பெரிய உலகத்துக்கான வாசல் .

மரணத்தை தண்டனை வித்தித்த அவுரங்க சீப் குறித்தும் ஒரு செய்யுள் செய்தார் :-
மகுடம் தாங்கிய மண்டை,
பாவத்தால் கவலைப்படுகிறது
ஆனால் எனக்கோ வறுமை எனும்
செல்வம் கிடைத்திருக்கிறது;
அதாவது செல்வத்தினால் வரும்
துயரம் இல்லாத ‘வறுமை’
அவனோ பாவம் என்னும் உடலை மறைக்க
பல மடிப்புள்ள ஆடை அணிகிறான் ;
இறைவனோ, பாவம் செய்யாதோருக்கு
குழந்தை அணியும் ஆடையைத் தருகிறான்
அதுதான் நிர்வாணம் என்னும் சூதுவாதற்ற ,
கள்ளம் கபடமற்ற மனம் (தான் என் ஆடை)
இன்றும் உலகெங்கிலும் உள்ள சூஃபி மத முஸ்லீம்கள் இந்தப் புனிதர்களைப் போற்றி அவர்தம் கொள்கைகளைப் பின்பற்றிவருகின்றனர்.
கொடுங்கோலர்கள், புனித மக்களின் உடலைத்தான் அழிக்கலாம் ; அவர்களுடைய புகழ் ஒளியை அழிக்க முடியாது .
–subham—
Tags- சர்மத் , மன்சூர், மரண தண்டனை, அவுரங்கசீப், சிரச்சேதம், சூஃபி , நானே கடவுள், நிர்வாண ,சாமியார்கள்