அமெரிக்கா போட்ட புளூட்டோனியம் அணுகுண்டு: லட்சம் பேர் மரணம் (Post No.11,882)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,882

Date uploaded in London – –  8 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அணுகுண்டு புகழ் யுரேனியம் உள்பட 47 மூலகங்களின் கதைகளை பார்த்தோம். இன்று ஜப்பானை நாசமாக்கிய அமெரிக்க PLUTONIUM புளூட்டோனியம் பற்றிக் காண்போம். 

ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்று அவ்வையார் பாடினார். அந்த மூதாட்டிதான் முதல் அணுசக்தி விஞ்ஞானி

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டிக்

குறுகத் தரித்த குறள்  —

என்று தீர்க்க தரிசனத்துடன் பாடினார்.. அணு என்ற சொல் முதல் முதலில் வேதத்தில், உபநிஷதத்தில் வருகிறது..

புளூட்டோனியம் என்னும் தனிமம்/ மூலகம் (Radio active element)  கதிரியக்கம் உடையது. இதனால் உடலில் புற்றுநோயும், மரபணுவைப்  பாதிக்கும் நோய்களும் உண்டாகும்.

1930ம்- ஆண்டுகளில் இதைக்கண்டு பிடித்தவர்கள் யுரேனஸ் பெயரில் யுரேனியமும், நெப்ட்யூன் என்ற கிரகத்தின் பெயரில் நெப்ட்யூனியமும் உள்ளதால் இதற்கு புளூட்டோ கிரகத்தின் பெயரில் புளூட்டோனியம் என்று பெயரிடலாம் என்று தீர்மானித்தனர்.

ஒவ்வொரு தனிமத்துக்கும் ஆங்கிலத்தில் Symbol குறியீடு உண்டு. இதற்கு பி எல் Pl என்று வைக்கலாமா அல்லது பி யூ Pu என்று வைக்கலாமா என விவாதம் எழுந்தது. இது கெட்ட உலோகம். ஆகையால் அசிங்கமான ‘பூ ‘ Pu என்ற சொல்லையே சூட்டுவோம் என்று முடிவு செய்தனர் ; தமிழில் பூ என்றால் மலர். ஆங்கிலத்தில் பூ Pu என்றால் மலம்.

இயற்கையில் எல்லா இடங்களிலும் இது இல்லை. ஆனால் மேலை நாடுகள் ஏராளமான அணு சோதனைகளைச் செய்ததாலும், அணு சக்தி உலை விபத்துக்களாலும் இப்போது புறச்சூழலைப் பாதித்திருக்கிறது . நம் ஒவ்வொருவர் உடலிலும் இந்த உலோகத்தின் அணு இருக்கிறது. ஆயினும் இதைக் கையில் கூட , கையுறை போட்டுக்கொண்டு எடுத்துப்பார்க்கலாம். மிக மெல்லிய தோலுக்குள் கூட  புளூட்டோனியம் அணு ஊடுருவ முடியாது .

.

மருத்துவ உபயோகம்

உலகையே அச்சுறுத்திய இந்த உலோகம் மாந்தர் குலத்துக்கு நன்மையையும் செய்கிறது . செயற்கை இருதய கருவிகளுக்கு சக்தி (Heart pace makers) கொடுப்பது புளூட்டோனியம் – 238 ஆகும்.

1940-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பெர்க்லியில் இரண்டு விஞ்ஞானிகள் யுரேனியம்-238 மீது ட்யூட்றான் DEUTRONஎன்னும் கனரக ஹைட்ரஜன் HEAVY HYDROGEN IONS  அணுவைப் பாய்ச்சி இதை உற்பத்தி செய்தனர். 1945ம் ஆண்டுக்குள் அமெரிக்காவிடம் மூன்று அணுகுண்டு செய்வதற்குத் தேவையான ப்ளூட்டோனியம் கிடைத்துவிட்டது .

ப்ளூட்டோனியம் -239 என்ற ஐசடோப் மீது நியூட்ரான் NEUTRON அணுவைப் பாய்ச்சினால் — மோதவிட்டால் —  அது அந்த அணுவைப் பிளப்பதோடு மேலும் நிறைய நியூட்ரான்களை வெளியிடும். அவை பக்கத்திலுள்ள அணுக்களைத் தாக்கி இதே விளைவை உண்டாக்கும். இதை சங்கிலித் தொடர் விளைவு (Chain Reaction) என்பர். ஒரு குறிப்பிட்ட அளவு ப்ளூட்டோனியம் இருந்தால் இது பிரமாண்டமான வெடிப்பினை ஏற்படுத்தி ஒரு நகரத்தையே அழித்து விடும்  இந்த அளவை கிரிட்டிகல் மாஸ் CRITICAL MASS என்பர்.

1945ம் ஆண்டில் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் அமெரிக்கா நடத்திய சோதனையில் இத்தனையையும் கண்டு பிடித்து ரகசியமாக வைத்திருந்தது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 11-02 மணிக்கு ஜப்பானின் நாகசாகி நகரம் மீதுஅமெரிக்கா இரண்டாவது அணுகுண்டை வீசியது. இதற்கு குண்டு மனிதன் Fat Man என்று பெயர் சூட்டியது. இது ப்ளூட்டோனியாம் அணு குண்டு. இதற்கு முன்னர் ஹிரோஷிமா மேல் போட்ட குண்டு யுரேனியம் அணுகுண்டு.

நாகசாகியில் வீசிய குண்டினால் ஒரு சில நொடிகளில் 70,000 பேர் செத்து மடிந்தனர் முதலில் ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு சின்னப்பையன்Little Boy  என்று பெயரிட்டனர். மூன்றாவது அணுகுண்டு குமகாயா Kumagaaya என்னும் ஊர் மீது போட இருந்தது. ஆயினும் 6000 டன் சாதாரண வெடிகுண்டினால் அதை அழித்தனர் . நாலாவது அணுகுண்டினை ஆகஸ்ட் 17ம் தேதி கொக்குரா Kokura நகர் மீது வீசத் திட்டமிட்டனர். ஆனால் ஜப்பான் சரண் அடைந்ததால் இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிவுக்கு வந்தது. ஜப்பான் பிழைத்தது..

இப்படிப்பட்ட உலோகத்துக்கு மலம் Pu என்று பெயர் சூட்டியது பொருத்தம் தானே .

இனி பொருளாதாரப் பயன்களைக் காண்போம்.

TO BE CONTINUED……………………………….

Taags- புளூட்டோனியம், அணுகுண்டு, நாகசாகி

Leave a comment

1 Comment

  1. karlmerklein

     /  April 8, 2023

    Hello sir. I wanted to express how much I look forward to reading the next
    Tamil Vedas. Each reading meant a great deal to me, and your work is
    very much appreciated. My days and responsibilities have been heavy, and
    Tamil Vedas has helped me find a few minutes to not only have peace but
    filled these minutes with richness and thought lasting until the next read.
    I hope you will continue to post in English, until I have the time to learn
    to read Tamil.

    Thank you
    Karl Merklein

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: