
Post No. 11,884
Date uploaded in London – – 9 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part Two of Plutonium in Tamil
தற்காலத்தில் அணு உலைகளில் (Nuclear Reactors) மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்த ப்ளூட்டோனியம் (Plutonium) உலோகம் பயன்படுகிறது. ஆனால் இது உண்டாக்கும் கதிரியக்கக் கழிவை (radio active waste) அகற்றுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. எந்த ஒரு செயற்கை உலோகத்தையும் விட அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது ப்ளூட்டோனியம் தான்.
காரணம் ?
இது அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இவ்வாறு செய்கையில் இது அணுசக்திக் கழிவுகளை வெளியே தள்ளும்;. கதிரியக்கம் கொண்ட அந்த ரசாயனப் பொருளை எங்கே கொண்டு கொட்டுவது?

முதலில் அதைக் குறைந்த ஆபத்துள்ள பொருளாக மாற்றவேண்டும் பின்னர் அதைக் கதிரியக்கம் வெளிவராத குப்பிகளில் (Canisters) அல்லது டப்பாக்களில் (Containers) அடைக்கவேண்டும் . பின்னர் அவற்றை பாலைவனப் பகுதிகளிலோ அல்லது கடலுக்கு அடியிலோ இறக்க வேண்டும். இதெல்லாம் மேலை நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது. பெரும்பாலான விஷயங்கள் ரகசியமாக செய்யப்படுகிறது.
வேண்டாத சனியனை விலைகொடுத்து வாங்குவது என்ற பழமொழிக்கு நல்ல உதாரணம் ப்ளூட்டோனியம்தான்.
அமெரிக்காவுக்கும்- ரஷ்யாவுக்கும் இடையேயான கெடுபிடிப்போர் (Cold war) முடிந்தவுடன் இரண்டு நாடுகளும் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்தன. அப்போதுதான் இந்தப் பிரச்சனையின் முழுவடிவமும் தெரிந்தது. அணு ஆயுதங்களைப் பிரித்துப் பகுதி பகுதியாக எடுத்தால் (dismantling nuclear weapons) கழிவு ப்ளூட்டோனியம், கழிவு யுரேனியத்தை என்ன செய்வது? இரு நாடுகளில் 65, 000 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.. இதுவரை காற்று மண்டலத்தில் மட்டும் 500 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.. இதனால் காற்று மண்டலமும் அசுத்தமாக்கப்பட்டுவீட்டது. கடலிலும் , நிலத்துக்கடியிலும் நிறைய சோதனைகள் நடந்துள்ளன.(இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் பாலை வனைப் பகுதியில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்தது.)
அணுசக்திக் கழிவு, தவறானவர் கைகளில் சிக்கினால், அவர்களும் அணுகுண்டுகளை செய்யமுடியும். இது வரை உலக நாடுகள் ஆயிரம் டன்களுக்கு மேலாக ப்ளூட்டோனியம், உலோகத்தை உற்பத்தி செய்துள்ளன.
ஒரு டன் பெட்ரோலிய எண்ணை அல்லது எரிவாயுவை எரித்துக் கிடைக்கும் சக்தியை ஒரு கிராம் அளவுள்ள ப்ளூட்டோனியம் மூலம் பெறலாம்!
1971ம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பிய அப்பலோ 14 விண்கலத்தில் ப்ளூட்டோனியம் -238 பயன்பட்டது. அதிலுள்ள கருவிகளுக்கு இது மின்சக்தி அளித்தது.1977 வாயேஜர் விண்கலத்திலும் பயன்பட்டது. இப்போது செயற்கை இருதய கருவிகளுக்கும் இதுவே சக்தி தருகிறது பலவித ஆராய்ச்சிகள் செய்ய, இந்த உலோகத்தை வேறு உலோகங்களுடன் கலக்கின்றனர் .
அமெரிக்கா , தனது அணுசக்திக் கழிவுகளை நெவாடா(Nevada) மாநிலத்திலுள்ள யுகாடா மலையில் புதைக்கிறது. 4 கிலோ மீட்டர் ஆழத்தில் புதைத்து விட்டால் மூன்று கோடி ஆண்டுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது.
Xxx

Picture: Lucas Heights is in Australia
xxx
Chemical Properties
ரசாயனக் குறியீடு Pu
அணு எண் 94
உருகு நிலை- 640 டிகிரி C
கொதி நிலை – 3330 டிகிரி C
காற்றில் வைத்தால் 135 டிகிரி C யில் தீப்பிடித்துவிடும்
ப்ளூட்டோனியம்,என்ற உலோகம் வெள்ளி போல மினுமினுக்கும் உலோகம். இதற்கு 20 வகை ஐசடோப்புகள் (Isotopes) இருக்கின்றன. சில ஐசடோப்புகள் 88 நாட்களில் பாதியாகக் கரைந்து விடும். இன்னும் சில ஐசடோப்புகள் எட்டு கோடி ஆண்டுகளில் பாதியாக ஆகும். இதை அதன் அரை வாழ்வு Half Life என்பர்.
அதிகமாக்க கிடைசிப்பது ப்ளூட்டோனியம்-239. அதன் அரை வாழ்வு 24000 ஆண்டுகள்.
ப்ளூட்டோனியம்-244. — அரை வாழ்வு எட்டு கோடி ஆண்டுகள்..
ப்ளூட்டோனியம்-242.– அரை வாழ்வு 376 000 ஆண்டுகள்.
ப்ளூட்டோனியம்-238. — அரை வாழ்வு 88 ஆண்டுகள்.
இந்த உலகத்துக்கு ஒரு வினோத குணம் உண்டு. இதைப் பொதுவாக
ப்ளூட்டோனியம் ஆக்சைட் என்ற ரசாயனப் பொருளாகச் சேமித்துவைப்பர். இப்படிச் செய்கையில் இது விரிவடைந்து 40 சதவிகிதக் கூடுதல் இடத்தை எடுத்துக்கொள்ளும். 1983ம் ஆண்டில் 2-5 கிலோ சுத்தமான உலோகத்தைப் பாதுகாப்பான் பெட்டகத்தில் அடைத்துவைத்தனர். அதிலுள்ள கொஞ்சம் ஆக்சிஜன் வாயுவுடன் கிரியை செய்து ப்ளூட்டோனியம் ஆக்சைட் ஆக மாறியது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் பார்த்தபோது அது, வெடித்து வெளியே வருவதற்குள் அதைக் கண்டுவிட்டனர் . பின்னர் பாதுகாப்பாக அதை அகற்றினர். அவர்கள் பார்த்திராவிடில் அது வெடித்து கதிரியக்கம் கசிந்து ஆபத்தை விளைவித்திருக்கும்.

Norh Korea threatens the world
இப்போதும் கூட எவ்வளவு பாதுகாப்பு செய்யப்பட்ட அணு உலைகளிலும் கூட பாதுகாப்புக் கவசம் இல்லாதபடி விஞ்ஞானிகளோ ஊழியர்களோ அணு உலைகளுக்குள் செல்லுவதில்லை . வெளியே வந்த பின்னரும் கீகர் கவுண்டர் கருவிகளைக் கொண்டு உடலில் அணுக்கதிரியக்கம் ஏறியிருக்கிறதா என்று சோதிப்பார்கள்..
ஜுராஸ்ஸிக் பார்க் (Jurassic Park) சினிமா பார்த்தவர்களுக்கு டைனோசர் மரபணு (DNA) ஆராய்ச்சி எப்படி எதிரிடையாகப் போனது என்பது தெரியும். அது போல இந்த அணுக்கதிரியக்கப் பொருள்கள்- கழிவுகள் எப்போது டைனோசர் போல பூதாகார வடிவு எடுக்கும் என்று இப்போது தெரியாது . சர்வ தேச அணு சக்திக் கமிஷனின் கட்டுப்பாடுகள், அணு ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் முதலிய பல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் தன்னிச்சையாக நடக்கின்றன. இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவும், ரஷியாவும் பிரிட்டனும் இஸ்ரேலும் ரகசியமாகச் செய்வதை யாரே அறிவார்?
—subham—
Tags- ப்ளூட்டோனியம், கதிரியக்கம், கழிவுப் பொருள், அணுகுண்டுகள்,